ஊடறு -சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் மூன்றாம் அமர்வு

தலைமை பொன் கோகிலம் ( மலேசியா) மலேசியாவிலிருந்து ஊடறு சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பொன் கோகிலத்திற்கும் அவரது நண்பிகளுக்கும் எனது நன்றிகள்.


– ஓடி விளையாடுவதே ஒரு சவால் – ஜெயமணி கந்தசாமி- சிங்கப்பூரின் விளையாட்டு வீராங்கனையாக இன்றும் திகழ்பவர். மரதன் ஓட்டத்தின் போது இவர் பாவித்த காலணிகளை சிங்கப்பூர் நூதனசாலையில் (மியூசியத்தில்) வைத்துள்ளார்கள் என்ற செய்தி பெண்களுக்கு பெருமை சேர்த்த என்றால் அது மிகையாகாது. இவர் SEA GAMES MARATHONS தனது முதல் பதக்கத்தை வென்று சிங்கப்பூரின் முதல் தங்க தாரகையாக இன்றும் திகழ்கின்றார் 1982இல் ஜெர்மனி சர்வதேச அளவில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியை குவித்தவர் ஜெர்மனியில் நடாத்தப்பட்ட ஓட்டப்பந்தயத்தில் 1500 மீட்டர் ஓட்டத்தில் 4.31.2 என்ற அளவிலும் 3000 மீட்டர் ஓட்டத்தில் 9.56.6 என்ற கால அளவிலும் ஓடி சாதனைப்பட்டியலில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஊடறு சிங்கப்பூர் சந்திப்பில் கலந்து கொண்டு “ஓடி விளையாடுவதே சவால்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார்

-தட மாற்றங்களால் ஏற்படும் தடுமாற்றங்கள் – சர்மிலி செல்வராஜிசிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழத்தில் முதுகலைப் கல்வி மேற்கொள்ளும் சர்மிலி டிமென்ஷியா எனும் மறதியைப்பற்றி மூளைப்பகுதியில் ஆராய்ச்சி செய்து வருகிறார்

– சிங்கையின் தமிழ்மொழி வளர்ச்சியில் பெண்கள் அன்று முதல் இன்று வரை- கலைவாணி இளங்கோ-

கலைவாணி இளங்கோ கடந்த 8 வருடங்களாக சிங்கப்பூர் தொடக்கப் கல்லூரியில் பணியாற்றி வரும் தமிழ் ஆசரியர் எழுதுவதிலும் தொடர் ஆர்வத்தை காட்டி வரம் இவர் கதை கட்டுரை கவிதை நாடகம் எனப் பல சஞ்சிகைகளுக்கும் செய்தித்தாள்களுக்கும் எழுதி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *