சிங்கப்பூர் ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்முதல் நாள் நிகழ்வின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

ஊடறுவும் சிங்கப்பூர் பெண்களும் இணைந்து நடாத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் கடந்த நவம்பர் 02 03 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. குறித்த நேரத்தில் அகிலாவின ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப் பட்டன

ஊடறு பற்றிய எனது சிறு உரையை அடுத்து ஜாய்ஸ் கிங்ஸிலியின் சிறப்புரையுடனும் சுபா அபர்ணாவின் வாழ்த்துரையுடனும் முதல் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. ஜாய்ஸ் கிங்ஸ்லி ஏறத்தாழ முப்பதுருடம் தொழில் அனுபவமுள்ள ஒரு பெண் தொழில்முனைவர் இந்திய வணிக சமூகத்தை குறிப்பாக பெண்கள் சமூகத்தை உயர்த்த லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச்சங்கத்தின் பெண்கள் பிரிவான LWW தொடங்கியவர் ஜாய்ஸ் அவர்களின் வலிகாட்டலில் லிசா பெண்கள் பிரிவு இன்று சிங்கையில் ஒரு தலை சிறந்த நிறுவனமாக மிளிர்கிறது. இவரது பேச்சின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது…

பப்புவா நியூ கினியிலிருந்து ஊடறு சந்திப்பில் கலந்து கொண்டு வாழ்த்துரை கூறிய சுபா அபர்ணா அவர்கள் பன்னாட்டு பெண்கள் அமைப்பான ஐயை குழுவில் பங்களித்து வருகின்றார் அவருக்கும் எமது நன்றிகள்.

முதல் நாள் நிகழ்வின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *