எங்களைப் பார்த்தால் காறி துப்புகிறார்கள்:கருப்பின மக்களிடம் இனவெறியுடன் நடந்துகொள்ளும் இந்தியர்கள்!

 Thanks https://thetimestamil.com/

பெண் குரங்கு, பைத்தியம், நாய், கருப்பன்

இந்தியாவில் இப்படித்தான் வரவேற்கப்படுகிறார்கள் ஆப்பிரிக்க மக்கள். India Times என்ற இணையதளத்தில், இந்தியாவில் வசிக்கும் ஆப்பிரிக்க மக்களிடம் , அவர்கள் இங்கு எப்படி நடத்தப்படுகிறார்கள் ? என்பது பற்றி ஒரு சிறிய பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட அந்த பேட்டியின் தமிழாக்கம் இங்கே…ஜேசன்:1.JPG

 

 

 

மிக அன்பான நாடு என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் இத்தனை இனவெறியை நான் இந்தியாவில் எதிர்பார்க்கவில்லை. எங்களை பார்த்தவுடன் கைக்குட்டையினால் முகத்தை மூடி கொள்கிறார்கள். எங்களுக்கு தீராத நோய் இருப்பதை போல, எங்களிடம் துர்வாடை வீசுவதை போல. ஒரு வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல, ஒன்றுகூடி நின்று எங்களை வேடிக்கை பார்க்கிறார்கள்.

 

 

ஜோனதன்:

2.JPG

 

மெட்ரோ ரயிலில் நாங்கள் அமர்ந்தால், அருகிலிருப்பவர் சட்டென்று வேறு இடத்திற்கு மாறி விடுகிறார். அது மட்டுமல்லாமல், வேறு திசையை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.  ஒரு போலீஸ் அதிகாரி ஒரு முறை சொன்னார் “ஆப்பிரிக்கர் என்று தெரிந்தாலே போதும். அவன் குற்றம் செய்யாவிட்டாலும் கூட அவன் மீதுதான் குற்றம்சாட்டப்படும் என்று. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால், என்ன ஏது என்று விசாரிக்காமலே ஏராளமான மக்கள் ஒன்று கூடி தாக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒரு மாலில், தன்னை மிகவும் தொந்தரவு செய்த குழந்தையை, என்னை காண்பித்து ஒரு தாய் மிரட்டினார். அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.

என்ன மாதிரியான வளர்ப்பு இது ? இந்த குழந்தை வளரும்போது எந்த கருப்பு நிற மனிதனுடனும் பழக விரும்பாது இல்லையா ???

 

நுரா

5.JPG

 

 

எங்களை பார்த்தாலே ஓடுகிறார்கள்.  நட்பு வேண்டி, நாங்களே வலிய போய் பேசினால் கூட “உங்களிடம் என்னால் நட்பாக முடியாது” என்று சொல்லுகிறார்கள். நாங்கள் ஏதாவது எதிர்செயல் புரிய வேண்டும் என்று தூண்டுகிறார்கள். ஒருவேளை, நாங்கள் எதிர்த்தால், கும்பலாக கூடி அடிக்கிறார்கள்.

 

 

 

 

ஏனா

3.JPG

 

 

எங்களை முகத்திற்கு நேராக பார்த்து, உரக்க சிரிக்கிறார்கள். அவர்களுக்குள்ளாக பேசி சிரித்துக் கொள்கிறார்கள். ஆப்பிரிக்கர்களை இப்போதுதான் முதலில் பார்க்கிறார்களா என்ன ???.  எங்களை பார்த்தவுடன் “சிகரட், கஞ்சா” இருக்கிறதா என்று கூசாமல் கேட்கிறார்கள்.

 

 

 

டெமிடோப்

4.JPG

 

 

 

பொது இடத்துக்குச் சென்று உணவருந்த முடியவில்லை. மொத்தக் கூட்டமும் எங்களைப் பார்த்து சிரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். its Just Bad

 

 

 

6

என்னுடைய தோழிகள் சிலர் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியில் சென்ற போது, சில இந்திய ஆண்கள் அவர்களிடம் “ஒரு நாள் இரவுக்கு எவ்வளவு ரூபாய்” என்று கேட்டிருக்கிறார்கள்.  சிலர் எங்களைப் பார்த்த உடனே , காரித் துப்புவார்கள்.

இந்தியாவில் உங்களை அவமானபடுத்திய நபர்கள் , உங்கள் நாடுகளுக்கு வந்தால் என்ன செய்வீர்கள் ?  என்று, மேலே பேசிய ஆப்பிரிக்க மக்களிடம் கேட்டிருக்கிறது India Times.

அதற்கு அவர்கள் இப்படி பதில் அளித்திருக்கிறார்கள்.

ஆப்பிரிக்காவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கு என்ன தேவையோ அதை எங்கள் நாடு அவர்களுக்கு அளித்து கொண்டிருக்கிறது.

நாடு , மதம், கண்டம், எல்லாவற்றையும் தாண்டி நிலைத்து நிற்பது மரியாதையும் அன்பும் மட்டுமே.

நாம் எல்லாருமே மனிதர்கள்தான். நிறங்களை மறந்து விடுங்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *