மனதினுள் மரித்திடா ரணங்கள்

முல்லை தாரிணி-

kosham 113வருடங்கள் சென்றாலும்
மனதினுள் மரித்திடா ரணற்களை
மௌனமாய் யாசிக்கும்
தாய்மை உள்ளங்களில் – தம் மகவு
தரணியில் தளையிடும் – முன்
கிள்ளி எறியப்பட்டமையும் – அதன்
நினைவுத்தடயங்கள்
கிளறி எறியப்பட்டமையும்……

குழந்தைப்பருவத்தில் பாலூட்டிய
ஆலிங்கணம் – அன்று
அடைந்த ஆனந்தத்தை
அசைபோட்டு பார்க்கிறது
அனைத்தும் அன்றய
நிகழ்வுகளின் நிழல்களாய்

பல வருட ஓட்டத்தில்
புகைப்படம் தேடும் மனதுள்ளே
சில கேள்விகள்
மனதை அடக்கி
மருண்டு கிடக்கிறன

இறந்த பின்னும் – அவ்வுருவம்
இன வேற்றுமை சொல்லுமா?
நினைவுகளை சுமந்து நிற்கும்
சின்னங்கள் அழிக்கப்பட்டால்
நினைவுகள் அழிந்துவிடுமா?
நினைவுகளின் வலிமையை
நியங்களே அறியும்

மஞ்சல் உடையைக்கண்டாலே
மனதுள் முளையிடும்
மகளின் ஞாபகங்களுன் – ஒரு மனது
வேலைச்சுமை அறிந்து
பல மைல்கள் கடந்து
தண்ணீh எடுத்துவரும் – என் மகன்
பல வருடம் கடந்தாலும்; – அவன் மறைவு
வாட்டிவிடும் – என
எண்ண மறந்தானே – என
எண்ணிடும் ஒரு மனது – என
பல எண்ணங்களுடன்
பல மனதுகள்

உணர்வுகள் உந்தப்பட்டு
உண்மை அறிய
எத்தணிக்கும் தருணங்களில்
உண்மையின் அர்த்தம்
எதுவுமில்லை
ஏன்? ஏதற்காக இவ் இழப்பு?
என்றும் துன்பத்துடன்
என்றும் பயத்துடன்
என்றும் ஏக்கத்துடன்
மனதுள் பல முட்டுக்கட்டைகளாய்
பூமித்தாயும
;பூமியில் வாழும் தாய்களும்
வலியின் ரணங்களால்
நாளும் செத்தவண்ணம் – யாரோ சிலரின்
பேராசையின் அசைபோடலால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *