அவன் மீண்டும்வந்துவிட்டான்-Er ist wieder da

-தேவா-(ஜெர்மனி.)

திரைப்படவிமர்சனம்

முன் குறிப்பு
 

 

er er-jpg1

இனவாதம்,மதவாதம் எல்லா மீடியாக்களிலுமே உலகம் முழுதுமே தாராளமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் காலம் er-jpg2இப்போது. இவைகளுக்கு ஆதரவுக்கரங்கள் உயர்ந்துகொண்டே போகும் அவலம் தொடர்கிறது. அரசியல் வியாபாரிகள் உச்சம் பெற்றிருக்கின்றனர். அந்நியர் வரவை- இருப்பை பயங்கரமாக சித்தரிப்பதும், நாட்டுபற்றை உசுப்பேத்துவதும் விசேடமாக காலம் காலமாக ஓன்றிணைந்து வாழ்ந்தவர்களையும்  பிரித்து -திரித்து பார்க்கும் மூளைச்சலவை செய்யும் கைங்கரியமும் உலகம் முழுதுமே அதிகரித்துவரும் அபாயம் ஆகும். ஐரோப்பாவை வந்தடையும் அகதிகள் யாவருமே(சிரிய-ஆபிரிக்க,ஆப்கான்,ஆசிய) கிரிமினல்களாக,இஸ்லாம் தீவிரவாதிகளாக, பெண்பாலியல் வன்முறையாளர்களாக, போதைமருந்துகடத்துபவர்களாக-விற்பவர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்-சித்தரிக்கப்படுகிறார்கள். ஐரோப்பாவின் எந்த மூலையில் ஓரு குற்றச்செயல் நிகழ்ந்தால் அதை ஓரு அகதியின்-இஸ்லாம் தீவிரவாதிதான் செய்திருக்க வேண்டும் என்ற முன்முடிபு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.இப்படி ஓரு படுபயங்கரமான தோற்றத்தை உருவாக்குவதற்கு அரசியல்வியாரிகளும்,அரசியலுள்ளால் ஆதாயம் தேடுபவர்களும் நடாத்தும் முயற்சி பலன் தந்துகொண்டிருப்பதுதான் ஆபத்தான எதிர்காலம். மக்களை தூண்டி-துண்டாடசெய்வதான போக்கினை கவனிக்கும் போது, உலகமயமாகிவரும் வளர்ச்சியை முடக்கப்படுவது செயல்படுகின்றதா?அல்லது நவீன பொய்மை உண்மையானதொரு தோற்றம் கொண்டுள்ளதா?

இப்படி பல சிந்தனை ஓட்டத்தில் சிக்கிய ஒரு திரைப்படம் ,,அவன் மீண்டும்வந்துவிட்டான்,,

ஜெர்மனின் அடிமனங்களை லேசாக உலுப்பி, விசேடமாக இனவெறியை பேச வைத்த சினிமா இது. ஜெர்மன்  மற்றும் ஐரோப்பியசினிமாஅரங்குகளில்வெற்றிகரமாக ஓடிய  இரண்டுமணிநேர நகைச்சுவை திரைப்படம்இது என பிரபலபடுத்தப்பட்டது.உள்நாட்டுபோர்அவலங்களில்இருந்துஅபாயமானகடல்பயணங்கள் (உயிர்பறிக்கும்),நடைப்பயணங்கள்மூலமாய்சிரிய,ஆப்கானிஸ்தான்,ஆபிரிக்கநாட்டுமக்கள்அகதிகளாகஐரோப்பாவந்தடைந்த  ஆரம்ப காலகட்டத்தில் இந்ததிரைப்படம்திரையிடப்பட்டது. இதற்குபின்னால்காணப்படும்நோக்கம்என்னஎன்பதுபற்றிமீடியாக்களில்இந்ததிரைப்படத்தைஇயக்கியவரானDavid Wnendtமுன்வைக்கும்கேள்வியாய்இருந்தது.

2012ல்வெளியானபெரும்சர்ச்சைக்குஉள்ளானநாவலைதழுவியசினிமாஇது.TimurVermesஎன்பவர் நாவலைஎழுதியவர். 38மொழிகளில் இந்நூல்மொழிபெயர்க்கப்பட்டுள்ளது நாவலின் முகப்புஅட்டையில் உள்ளவாறே சினிமா பேனர்களிலும்ஹிட்லரின் தலைமயிர்  வெட்டு அறிமுகமாகிறது.முகம் வெளிப்படுத்தபடாமலே-அந்த பின்ணனியிலேயே புரிந்து கொள்ள்க்கூடிய ஒரு பெரிய இனப்படுகொலை செய்த சர்வாதிகாரியின் உலகப்பிரசித்திபெற்ற முகமற்ற முகம் காணப்பட்டுள்ளது.நாவலின் முகப்பு அட்டையும்,திரைப்படத்தின் பேனரும் சொல்லும் மறைபொருள்:இனவாதம் முகமற்ற முகத்துள் இன்னும் மறைந்து,உயிர்ப்புடன் இருக்கிறது என்பதாகும்.

ஒரு சாதாரண பட இயக்குனன் தன் சுய முன்னேற்ற நோக்கில் ,,ஹிட்லர்  தற்போதைய21ம் நூற்றாண்டு  ஜெர்மனிக்கு மீண்டு வந்தால் அது எப்படி இருக்கும் என்ற கற்பனையின் உருவாக்கமே தான் கதை

இரண்டாம் உலகப் போரை ஆரம்பித்த ஒருசர்வாதிகாரியின் தோல்வி அவனுடைய தற்கொலையில் முடிந்து அவன் உடல் கூட எதிரியிடம் அகப்படகூடாது என்ற வேட்கையில் எரித்து சாம்பலாக்கபட்டதாக கூறுகிறது வரலாறு.அந்தசாம்பலில்இருந்துமீண்டும்உயிர்பெற்றுஎழுந்துதற்போதையஉலகில்நுழைவதாகமுதல்திரைக்காட்சிஆரம்பமாகிறது.

ஜெர்மனியில் பொருளாதாரசரிவு,வேலையில்லாதிண்டாட்டம்உச்சம்பெற்றிருந்தகாலகட்டத்தில்  தேசப்பற்றை துாண்டிவிட்டு ,,யுதர்களினால்தான்  நாம் வறுமைப்படுகின்றோம்,இவர்களிடமே செல்வம் குவிந்திருக்கிறது, அவர்கள் வழிபடும் மதம்,பண்பாடு எங்களுக்கு அந்நியமானது,,என்கிற பிரச்சாரங்கள் மக்கள்கவனத்தைதிசைதிருப்ப உதவின.ஏற்கனவே பெரும்பான்மையினரின் மனதில் முள்ளாய் குத்திக்கொண்டிருந்த விடயங்கள்தான் அவைகள்.இதுதான் உண்மை.எந்த நெருப்பில் எப்படி நெய்யை ஊற்றவேண்டுமென புரிந்துகொண்டவன் அரசியல்வியாபாரி ஹிட்லர் மட்டுமல்ல அவனுக்கு ஆதரவளித்த சகபாடிகளும்தான்முழுசர்வாதிகாரத்தையும் அடைய செய்த தந்திரம் சுலபமாகவே வாய்த்தது.சுமார் 80ஆண்டுகளுக்கு முன் அன்றைய தந்திரஅரசியல் இனவெறிக்கு தூபம் போட்டு அதிகாரத்தை கைப்பற்றியது.அதுவே இன்று புது மொழியில் அரசியல்அகதிகளை,ஆபிரிக்காவின் வறுமையை,, பொருளாதார அகதிகள்,,என முத்திரை குத்துகின்றன.அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி கொள்ள ஐரோப்பாவிலே முனைப்புக்கள் வெற்றி பெறுவதும் தெரிந்த விடயமே.மீள்கிறேன் திரைப்படத்திற்கு.

உலகம்முழுக்கபிரபலமான  ஜேர்மன்,,வெறுப்புஉருவம்,,.இவன். இனச்சுத்திகரிப்புமூலம்யூதர்களின்சொத்து,நிலஅபகரிப்புஎனயாவுமேபறிக்கப்பட்டு,அவைகளை ,,பெரிய தலைகள்,, பங்கு போட்டுக்கொண்டதை வரலாறு கூறுகிறது.நிற்க.

,,அவன் மீண்டும்வந்துவிட்டான்,,ல் வரலாற்றுஉண்மைகள்பல காட்சிப்படுத்தபட்டுள்ளன.இவைகள் உண்மைகளல்ல என மறுத்து வாதிடும் சக்திகளும் இப்போது ஜெர்மனியில் பிரபலமாய் இருக்கின்றன.

இன்று மீடியாவின் சக்தி பிரமாண்டமானது. எல்லா துறைகளையும் இது தன்வசப்படுத்தி உள்ளது. ஆகவே ஹிட்லரும் சின்னத்திரைக்கு கொண்டுவரப்படுகினறான். பிரபலபடுத்தப்படுகின்றான். டெலிவிஷன்காட்சிகளில் ஹிட்லர்  பேச்சாற்றல்பார்வையாளர்களால் கவரப்படுகிறது. கவனிக்கப்படுகிறது.வரலாற்று ஹிட்லரின் மேடைப்பேச்சுபெரும்பான்மையினரை ஈர்த்தது.கவர்ச்சியான,உணர்சிகரமானமேடைப்பேச்சைஎளிதாக மூளைக்குள் புகுத்தி,சிந்திப்பதை மழுங்கடிக்கூடியதாக செய்யும் திறமையான ,,வியாபாரியாக,, ஹிட்லர் இருந்ததை திரைப்படத்திலும் கவனிக்கலாம்.

இருபதாம்நூற்றாண்டின்சிந்தனைபொருளாதாரத்தைமையம்கொண்டது. நுகர்கலாச்சாரம்திரைப்படத்திலே இதனைஎவ்விததயக்கமுமின்றிவெளிப்படுத்திஇருக்கின்றது.,,ஜலவ்ஹிட்லர்,,ஹிட்லரின்சல்யூட்,ஹிட்லரோடுசெல்பியில் போட்டோ எடுத்துக்கொள்வது,போன்றவைஉதாரணங்கள்.

.,,நாம் வெளிநாட்டவர்களுக்கு எதிரானவர்களல்ல.ஆனால்……..,,இந்த ஆனாலுக்கு பின்னால் ஒளிந்திருப்பது பச்சைஇனவாதம்.பாதசாரிகளிடம் முன்வைக்கப்படும் கேள்விகளில் ஜெர்மனியில் இனவாதம் ஆழத்தில் கனண்று, மேலே சாம்பல் பூத்திருப்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது.

படத்தில்ஆழமானநோக்கம்,சிந்தனைகிடையாது.வரலாற்றுஉண்மைகள்பற்றியகேள்விகள்எழுப்பப்படுகின்றன . ஆனால்பேசப்படும்விடயங்கள்,,தொட்டுக்கொள்ளஊறுகாய்,, மாதிரிஇருக்கிறது. படம்முழுக்கநகைச்சுவை-அங்கதச்சுவை தெறிக்கிறது. ஆழமாக-ஆணித்தரமாக சொல்லப்படவேண்டியவை சிரித்துவிட்டு கடந்து போகிற செய்திகளாக மேம்போக்காக வருகின்றன. நாவலுக்கும்இத்திரைப்படத்துக்கும்பெரியஇடைவெளிஇருப்பதாகபேசப்படுகிறது.

அரசியல்அகதிகள்விடயத்தில்ஐரோப்பாவின்அக்கறையற்ற,மனிதநேயமற்றபோக்கைவிபரிக்க  படத்தின்இறுதியில்சிலகாட்சிகள்வருகின்றன.எல்லைகளைஉடைத்துஒருபொருளாதாரசந்தைக்காக  இணைந்தவர்கள்அகதிகள்நுழையாமல்இருக்ககம்பிவேலிகள்கட்டுவது, அனைவரும்,,முஸ்லிம்கள்பயங்கரவாதிகள்,, கருத்து, அகதிமுகாம்கள்தீபற்றிஎரியும்என்பவைஉதாரணங்கள் .

மனிதநேயம்கொண்டோர்,இனவாதிகள்,இரண்டுக்கும்இடைப்பட்டவர்கள்,அரசியல்ஆதாயம்தேடும்கட்சிகள்,இனவாதத்தைஎதிர்ப்போர்,நுகர்கலாச்சாரத்தில்ஊறிவாழ்வோரின்அரசியல்அக்கறையற்றதன்மை……..இப்படிநிறையவேதிரைப்படத்தில் வெளிப்படையாகமுகங்கள்பேசுகின்றன.

பல்வேறுமீடியாக்களிலும்விவாதபொருளாகஐெர்மனியின்,ஜரோப்பாவின்இனவாதத்தைபேசவைத்திருக்கிறது .இனவாதத்தைமுன்னிலைபடுத்திஅரசியல்லாபம்தேடும்கட்சிகளின்உண்மையானஉருவங்களைஅந்நியருக்குஎதிராகநடைபெறும்நாசிஊர்வலங்களில், அங்குஓங்கியிருக்கும்கோஷங்களில்காணமுடியும்.  அகதிகளைஐரோப்பாவுக்குவரவிடாமல்அந்நியவெறுப்புஜரோப்பாமக்களிடம்மட்டுமல்லாமல்இங்குநிரந்தரமாகவாழும்பலவெளிநாட்டவர்-பலவருடங்களுக்குமுன்அகதிகளாகவந்தவர்கள்- மத்தியிலும்வெளிப்படுகிறது. திரைப்படத்திலேயும்இதனுடையபதிவுகள்கருத்துகேட்டல், பேட்டிகள்முலமும்காணக்கிடைக்கின்றன.

இத்திரைப்படம், ஒருமோசமான இனப்படுகொலையை ஒளிவுமறைவு இன்றிசெய்தஹிட்லருக்கு மேல்ஒருஇரக்கம் வருகிறமாதிரி உணர்வைபார்வையாளருக்குதருகிறது. அவன்இரக்கத்துக்கு  உரியவனா.,, மக்கள்தான்என்னைதெரிவுசெய்தார்கள்,,என்கிற ஹிட்லரின் வாக்குமூம் வெளிப்படுத்தும் உண்மை, மக்கள் பலவீனத்தை புரிந்து அதனை தன் அரசியல் உத்தியாய் பயன்படுத்திய பின்னர் எவ்விதகுற்ற உணர்வின்றிமக்களையே குற்றம்சாட்டுவதும் அரசியல் தந்திரத்தின் உச்சம்.

ஜரோப்பாவில்இனவாதத்தைமுன்வைத்துபலஅரசியல்கட்சிகள்செயல்படுகின்றன. இவைகளுக்குதற்போதுபெரும்ஆதரவுகிடைக்கிறது. ,,அந்நியநாட்டவர்எம்கலாச்சாரத்தை,மதத்தைகுலைக்கிறார்கள். சட்டம், ஒழுங்குமதிக்கபடாமல்போகிறது.பொருளாதாரம்சீர்குலைகிறது.வேலைவாய்ப்புகளைஅந்நியர்ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள்,அகதிஇரக்கம்எம்பாதுகாப்பைஅழிவுக்குஇழுத்துபோகிறது.பெண்வன்முறை, கொள்ளை,போதைமருந்துவியாபாரம் நடைபெறுகிறது.,, போன்ற கோஷங்களோடும் இனவாதகட்சிகள்மெருகு பெற்றுவருகின்றன.இதுவிடயங்கள் பயங்கரமாகசித்தரிக்கப்படுகின்றன. மொத்தமாய்,,அந்நியர்ஊடுருவுபயம்,,ஜரோப்பாவில் வளர்கப்படுகிறது என்பதுதான் உண்மை.

திரையிலே தோன்றும் காட்சிகளில் பலவும் சரித்திர உண்மைகளை ஓத்திருக்கும் ஓழுங்கோடு வருகின்றன. ஹிட்லரின் பழம் கொள்கைகளை கேட்கின்றவர்கள்- போரை வரலாறு மூலம் படித்திருந்தோர் அவனை ஓரு,,வினோதபிராணியைப்,, போல கவனிக்கிறார்கள்.

2ம் உலகப்போர் ஆரம்பகாரணிகளான இனப்பற்றை ஊக்குவிக்கும் சர்வாதிகாரத்திலே,,ஆரியஇனம்பெருகவேண்டும்என்றால்கலப்பில்லாதஆரியபெண்நிறையவேகுழந்தைகள்பெற்றுக்கொள்ளவேண்டும்,,சட்டம்இருந்தது. ஆனால்ஹிட்லர்பிள்ளைபெற்றுகொள்ளவில்லை. குழந்தைவண்டியோடுபோகும்தாயைப்புகழ்கின்றான்.

தாய்நாட்டுபற்றுகோஷங்கள், மீண்டும் எழுப்படவேண்டுமென வற்புறுத்துகின்றான். நாசிக்கட்சியின் அலுவலகம் செப்பனிடப்படவேண்டுமென ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றான்.

இயக்குனரிடம்,,உன்தோழியுதஇனத்தவள்,,என்கிறான்.இப்படி இவன் தான் போகும் வழியெல்லாம் இனதுவேச விதையை விதைக்கிறான்.

ௐரு காட்சி இப்படி வருகிறது :ஒருகுட்டிநாயின்தொந்தரவைபொறுத்துகொள்ளமுடியாதஹிட்லர்அதனைசுட்டுவிடுகின்றான் .இக்காட்சிஹிட்லரின்வன்முறையை வெளிப்படுத்துவதாக -அதை பொறுத்துக்கொள்ளவேமுடியாத,,மிருகஇரக்க சிந்தனையாளர்கள் ,, ஆத்திரப்படுகின்றனர். அவன் டெலிவிசஉலகிலிருந்து தூக்கி எறியப்படுகின்றான்.

ஹிட்லர்பற்றிஇன்றுவரைஎத்தனையோதிரைப்படங்கள்வெளியாகியுள்ளன.இத்திரைப்படம்தற்கால இனவாதசராசரி சிந்தனைகளைவெளிப்படுத்தியுள்ள அதேசமயம்,,அந்நியர்நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்,அவர்களுடைய கலாச்சாரங்கள்,மதம் (உன்னிபாக விவாதங்களை தொடக்கி வைக்கவும்,சர்ச்சைக்குரியபேசு பொருளாக குறிவைத்துஎடுக்கப்பட்டுள்ளது கவனிக்கப்படவேண்டிய விடயம்.

இந்தகாலகட்டத்தில்நுகர்வுகலாச்சாரபுலம்பெயர்தலைமுறைஎவ்வாறுஇனவெறியைஎதிர்கொள்கிறது?பொதுவாகவேஇவர்களினதும்,ஜரோப்பிய(கேள்வியைஇங்கிருந்துதொடங்கலாம்)இளம்தலைமுறையும்கல்விவேலைதுறைகளில்இணைந்துசெயல்படுபவர்கள்.இவர்களுடையஎதிர்ப்புமுனைப்புமுகப்புத்தகத்தோடுமுற்றுப்புள்ளிஆகிறதா .இவர்களுடையதாயகம்ஐரோப்பிய,அவுஸ்திரேலிய,அமெரிக்க,கனடாநாடாய்இருப்பதுமறுக்கமுடியாதது .  தாய்மொழியும்கூடதமிழ் இல்லை!இவர்களுக்குஇனவாதம்எவ்வாறு தன்முகத்தை காண்பிக்கிறது.தோலின்நிறம் திறமைகளை பின்னுக்குதள்ளும் அபாயம்எதிர்காலத்தில் இருக்கும்.ஏற்கனவே ஏதாவது ஒரு காரணமற்ற காரணத்தைமுன்வைத்து வேலை,கல்விவாய்ப்பு க்களை மறுக்கும்,,ஒருவெள்ளைஒடுக்குமுகம்,, ஐரோப்பாவில் செயல்பட்டுக்கொண்டுதானிரு க்கிறது. அது மறுக்கமுடியாதது.

சினிமா நிறுவுகின்ற நிசம்:

ஹிட்லர் இறந்துபோகவில்லை. அவன்இன்றுஉயிர்தெழுந்துவரவில்லை. அவன் இன்னும் நம்மிடையே வாழ்கிறான். இனத்துவேசம் உயிர்ப்போடு வாழுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *