புதிய மாதவி: மாற்றுத் தொன்மங்களை அர்த்தமாக்குபவர்

 Thanks -http://ramasamywritings.blogspot.ch/2017/01/blog-post.html

puthiayamathavi-book

mathavi1ஆடுபாம்பே

அந்தநாகப்பாம்புஅடிக்கடிஎன்தோட்டத்திற்குவருகிறது

பிச்சிப்பூவின்வாசனைக்குவருகிறதுஎன்கிறான்

தோட்டக்காரன்

பாம்பாட்டியைஅழைத்துமகுடிவாசித்து

பெட்டிக்குள்அடைத்துவிடத்திட்டமிட்டேன்.

அவனுக்குப்புரியவில்லைஇப்போதெல்லாம்

பாம்புகள்மகுடிஇசைக்குமயங்குவதில்லைஎன்பது

நேற்றுஅதேபாம்புஎன்கழுத்தில்மாலையாகி

என்னைஅலங்கரித்தது

அந்தமயக்கம்தெளிவதற்குள்என்அரைஞாண்கயிற்றில்

சுற்றிக்கொண்டுஆட்டம்போட்டது.

விடிவதற்குள்பாம்பைஅடக்கிவிடவேண்டும்.

வெறிகொண்டுஎழுகின்றேன்.

கண்விழித்துப்பார்க்கும்போதுபாம்புகாணவில்லை

என்உடலில்இருந்துசிதறிய

நீலநிறஒளியில்அந்தஅறைஎங்கும்

ஆகாயத்தின்துண்டுகள்சிதறிக்கிடந்தன.

இதுபுதியமாதவியின்ஒருகவிதை. எழுத்து வெளியிட்ட மௌனத்தின் பிளிறல் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கவிதையை மாணாக்கர்களிடம் வாசிக்க்க் கொடுத்தபோது அவர்கள் புரியவில்லை என்று சொன்னார்கள். புரியவில்லை என்றால் எது புரியவில்லை என்று கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “ கவிதை, நவீனக் கவிதை புரியவில்லை” எனச் சொல்லும் பலரிடமும் ‘எது புரியவில்லை ‘ என்ற கேள்விக்குப் பதில் இருப்பதில்லை.மரபானமுறையில்செய்யுளைஅர்த்தப்படுத்துவதற்காகத்தேடிக்கண்ட்டையும்அருஞ்சொல்எதுவும் இக்கவிதையில்  இல்லை. அப்படிஇருந்தால்அதன்பொருளைச்சொல்வதன்மூலம்கவிதையைஅர்த்தப்படுத்தலாம். அப்படிப் பொருள் சொல்வது அல்லது அர்த்தப்படுத்துவதுதான் கவிதையின் புரிதலா? என்ற அடுத்த கேள்வி எழும்.

இந்தக் கவிதைச் செயலை அறிதல் அல்லது புரிதல் என்பதைத் தொடங்க அதன் தலைப்பு தொடங்கி நகர்ந்துகொண்டே இருக்கும் செயலின் வினையைப் பின்பற்றவேண்டும். இதனைக் கவிதையை ரசித்தல் என்றுகூடச் சொல்லலாம்.புதிய மாதவி இந்தக் கவிதையில், கவிதையின்தலைப்புதொடங்கிஒவ்வொருவரியிலும் “பாம்பு” நகர்ந்துகொண்டேஇருக்கிறது என்பதாகக் கவிதைச் செயலை உருவாக்குகிறார். பாம்பு, பிச்சிப்பூவின்வாசனை, பாம்பாட்டி, மகுடிஇசை, கழுத்தில்வாசம், இடுப்பில்  அரைஞாண்கயிறுஎனப்பலநிலைகளில், பல உருவங்களில் பாம்பு நகர்கின்றது. அப்படி உருமாறும்போது,பாம்புவெறும்பாம்பாகஇல்லாமல், இன்னொருஅரூபமாக – கருத்தாக அக்கருத்தின் விளைவாக அல்லதுசெயலாக மாறிக்கவிதைச்செயலை முழுமையாக்க நினைக்கிறது.அக்கவிதைச்செயல்உடலின்நிறத்தைநீலவண்ணஆகாயமாகவும், அதில்ஜொலிக்கும்நட்சத்திரக்கூட்ட்த்தின்சேர்க்கையையும்காட்சிப்படுத்துகிறது.இப்படியானகாட்சிப்படுத்தலைநினைத்துக்கொள்ளும்ஒருபாத்திரம்அக்கவிதைக்குள்வாழ்கிறதுஅல்லதுஇயங்குகிறதுஎனப்புரிகின்றபோதுகவிதைரசனைக்குரியஒன்றாகவும், அக்கவிதைக்குள்இயங்கும்மனிதத்தன்னிலைஒருவிதச் சிறப்பானமனநிலைகொண்டதன்னிலையாகவும்ஆகிவிடுகிறது.

இந்தத்தன்னிலைகவிபுதியமாதவியா? என்றகேள்வியைக்கேட்டு, ‘ஆம்’ என்றுவிடையைஉருவாக்கிக்கொண்டால்கவிதையின்வாசிப்புத்தளத்தைஒருநபருக்குள்சுருக்கிவிடும்வேலையைச்செய்தவராக நாம்ஆகிவிடுவோம். எந்தவொருபொருளும்உருவாக்கியவருக்குமட்டுமேஉடைமையானதுஎன்றநிலையிலிருந்துஉருவாகும்மனநிலைஅது. அதற்குமாறாக, அந்தக்கவிதைச் செயலும், அதனைச்செய்பவரும்நானாகவும், என்னைப்போன்றஇன்னொருவராகவும், ஒருவருக்குப்பதிலாகப்பலராகவும்ஆகமுடியும்எனநம்பினால்அந்தக்கவிதை, பலரின்கவிதையாகமாறிவிடும்.

நவீனத்துவக்கவிஒருவரால்எழுதப்படும்ஒருநவீனக்கவிதையைஅவரின்கவிதையாகஇல்லாமல், பலரின்கவிதையாகஆக்குவதற்குமுதல்படியாகச் செய்யவேண்டியது அக்கவிதைக்குள்இயங்கும்குறியீட்டுச்சொற்கள்தரும்அர்த்தத்தைஅதன்நேரடிப்பொருளில்மட்டும்யோசிக்காமல், அவரவர்அறிவுத் தளத்திற்கேற்பநகர்த்தவேண்டும்என்பதே. அப்படிநகர்த்திவாசிக்கும்போதுதான்கவிதையின்பரிமாணங்கள்விரிவடையும். கவிதைக்குள் இருக்கும் குறியீட்டுச் சொற்களுக்குக் கவி உருவாக்கிய சூழல் அர்த்தம் ஒன்று இருக்கும். அதைக் கண்டுபிடித்துக் கொள்வதும், அதிலிருந்து வாசிப்பவர் உருவாக்கும் சூழல் அர்த்தத்திற்கு நகர்த்துவதும் கவிதைச் செயலில் விரிந்த பரிமாணம். இப்படியொரு விரிந்த பரிமாணம் கவிதை வாசிப்பில் இருப்பதால்தான், கவிதை வாசிப்பும் கவிதை எழுதுவதற்கிணையான செயலாக ஆகிறது என்கிறோம்.

குறியீடுகளை அதிகம் பயன்படுத்தும் இலக்கியவடிவம் கவிதை. எல்லாக்குறியீடுகளும் எல்லாருக்கும் நேரடியாகச் சூழல் அர்த்தங்களைத் தந்துவிடுவதில்லை. ஒரு சொல்லின் குறியீட்டு அர்த்தம் என்பது எந்தத்துறை சார்ந்த பயன்பாடு என்பது தெரியாத நிலையில் அந்தச் சொல்லைக் கடத்தல் இயலாமல் போய்விடும். ”விரிவாகச் சொல்லக்கூடாது; விளக்கிச் சொல்லக்கூடாது; ஒற்றைச் சொல்லின்வழியாக வாசிப்பவர்களின் மனதை வேறொரு வெளிக்கும் காலத்திற்கும் அழைத்துச் செல்லும் தன்மைகொண்டது கவிதை” போன்ற நெருக்கடிக்குள் தவிக்கும் கவி, அதனைச் செறிவாக்கவே நினைக்கிறார். செறிவாக்கும் மனநிலையில் தான் ஒரு கவிதையில் மையமாக ஒரு சொல்லை உருவாக்குகிறார். ஆனால் அதே ஒரு சொல் கவிதைகளைவாசிக்கும்போது பலருக்கும்தடைகள்என்ற  நினைப்பையும் உண்டாக்கும். அந்தத் தடையைத்தாண்டிவிட்டால் கவிதையைப் போல வாசிப்பு அனுபவம் தரும் இன்னொரு இலக்கியவடிவம் இல்லையென்றே சொல்லலாம்.

மரபுக்கவிதைகளும்கூட குறியீடுகளைப் பயன்படுத்தவே செய்தன. உவமை, உள்ளுறை, உருவகம் போன்ற அணிகளாக அறியப்பட்டவையே நவீன கவிதையில் குறியீடுகளாகவும் படிமங்களாகவும் ஆகிவிடுகின்றன. அத்தோடு அவை உருவாகும் களன்களும் விரிவாகியிருக்கின்றன. வினை, பயன், மெய், உரு என்ற நான்கின் அடிப்படையாக உவமை உருவாகும் என வரையறைகள் இருப்பதால் மரபுக்கவிதை வாசகர்களுக்குப் புரிதலில் பெரிய அளவு சிக்கல் ஏற்படுவதில்லை. அத்தோடு அவை அறியப்பட்ட வரலாறு, தெரிந்த தொன்மம், படித்த நிலவியல், வாழ்ந்தபண்பாட்டுத்தளங்கள் என அறிந்த நிரந்தரங்களிலிருந்தே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. ஆனால் நவீனக் கவிதைகள் உருவாக்கும் குறியீடுகள் அறியப்பட்டவைகளாக மட்டும் இருப்பதில்லை. சமகால அரசியல், வரலாறு, நிலவியல், பண்பாட்டுக்கூறுகளை மட்டுமல்லாமல் அவற்றால் ஏற்படும் முரண்பாடுகளையும் எழுப்பும் கேள்விகளையும் குறியீடுகளாக்குகிறார்கள் கவிகள், அந்தக் குறியீடுகளைக் குறிப்பான பின்னணியில் நிறுத்துவதற்காக அவர்களின் மனவெளிக்குள் உருவாகும் காட்சிக்கூறுகளைப் படிமங்களாக மாற்றுகிறார்கள். அப்படிமங்கள் விரிவான தளத்திற்கு வரும்போது வெவ்வேறு அர்த்தங்களைத் தருவனவாக மாறிவிடும் வாய்ப்புகள் இருப்பதால், கவிதையின் புரிதல் மேலும் சிக்கலாக மாறிவிடுகிறது. இவையெல்லாம் கவிதைகளின் பொதுவான புரிதல் சிக்கல்கள். இவையில்லாமல் சில கவிகளின் பாணிகாரணமாகச் சிறப்பான தடைகளும் சிக்கல்களும் உருவாவதும் உண்டு.

 

நவீனத் தமிழ்க் கவிதைகளில் இடம்பெறும் குறியீடுகளிலும் படிமங்களிலும் பெரும் மாற்றத்தைத் தொடங்கிவைத்த இலக்கியப்போக்குகளாகத் தலித்தியமும் பெண்ணியமும் இருக்கின்றன.  இவற்றின் வரவால், அதுவரை அதிகமாகப் பயன்பட்டுவந்த இந்தியத்தனம்/ இந்து சமயத்தன்மைகொண்ட  புராணப்பாத்திரங்களும் தொன்ம நிகழ்வுகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வட்டாரத்தலைவர்களும் குறிப்பான வெளிகளின் நிகழ்வுகளும் படிமங்களாக மாறின. புதிய மாதவி தனது கவிதைகளில் இந்தியத் தொன்மங்களுக்குப் பதிலாகத் தமிழ் இலக்கிய மரபிலிருந்து அதற்கேயுரிய தொன்மங்களையும் நிகழ்வுகளையும் தேடிக்கண்டுபிடித்துப் பயன்படுத்துவதன் மூலம், மற்றவர்களின் கவிதைகளிலிருந்து தனது கவிதையை -கவிதை பாணியை வேறுபடுத்திக் காட்டுகிறார். அப்படிப்பட்ட கவிதைகள் பலவற்றை அவரது மௌனத்தின் பிளிறல் தொகுப்பில் வாசிக்க முடிகிறது. சிவதாண்டவம், ??? சிவனின்வெற்றி, ஓம்நமச்சிவாய, பராசக்திசிவகாமிஆனாள், புனிதவதிதொலத்தமாங்கனி, மூவுடையா, நான்முகன், திருமகளாய்நானும், விறலியின்சபதம், நெய்தல்தலைவி, பாம்பாட்டிஇந்தத்தலைப்பில்இருக்கும்கவிதைகள்எல்லாம்அத்தகையன. இன்னொருகவிதையைஉங்களுக்குவாசிக்கத்தருகிறேன். அதன்தலைப்பு : காக்கைகள்

 

விழித்திருக்கும்போதும்தூக்கத்திலும்

என்னைத்துரத்துகின்றன

காக்கைகள்

தனியாகவோகூட்டமாகவோ.

 

விழித்திருக்கும்போது

சிறகுகளைவிரித்து

என்னைச்சிறைப்பிடிக்கவருகின்றன

தூக்கத்திலோஎன்கபாலத்தைப்பிளந்து

நினைவுகளின்

ஒவ்வொருரகசியஅறைக்குள்ளும்

பூட்டுகளைஉடைத்துக்கொண்டு

புகுந்துவிடுகின்றன.

அணுஅணுவாய்க்கொத்திக்குதறி

சிடுக்குகளைமேலும்சிடுக்குகளாக்கி

நரம்புமண்டலத்தைநாசப்படுத்திவிடுகின்றன

என்செயல்பாடுகளைஎன்கட்டுப்பாடுகளை

இழந்துவிடும்அச்சத்தில்

கனவுகளைவிலக்கிவைக்கநினைத்து

தோற்றுப்போகிறேன்.

என்தோல்வியைத்

தன்வெற்றிக்குஅடையாளமாக்கி

விழாஎடுக்கின்றனகாக்கைகள்

 

என்முப்பாட்டிகாக்கைப்பாடினிக்கு

விருந்தினர்வருகையை

அறிவித்தகாக்கைகள்

இப்போதெல்லாம்மாறிவிட்டன

மனிதர்களைப்போல

===================

இந்தக்கவிதையைவாசிக்கதமிழ்ச்செவ்வியல்கவிதைத்தொகுப்பிலிருக்கும்காக்கைபாடினிநச்செள்ளையின்12 கவிதைகளையும்வாசித்திருந்தால்நல்லது. சேரமன்னன்ஆடுகோட்பாட்டுச்சேரலாதனைப்பாடியபதிற்றுப்பத்தில் 10 கவிதைகளில்நிலவியல்சார்ந்ததகவல்கள், அவனின்பெருமைகள், வீரம், இல்லறவாழ்வில்பின்பற்றஅறம்போன்றனவெளிப்படுகின்றன.  இன்னொருபுறப்பாட்டில்தான்ஈன்றமகன்முதுகில்புண்பட்டுஉன்மகன்இறந்துபட்டான்என்றுகேள்விப்பட்டுப்போர்க்களம்சென்றுதேடச்சென்றஒருதாயைக்காட்டுகிறார். அச்செய்திஉண்மையாயின்அவனுக்குப்பாலூட்டியமுலையறுத்திடுவேன்என்பதுஅவளதுசபதம். ஆனால்மகனோ, உடல்முழுக்கச்சிதைந்துகிடந்தான். அதைக்கண்டுஈன்றஞான்றினும்பெரிதுஉவந்தன்றேஎனவியப்பவளாகஇருக்கிறாள். இதையும்கூடநீங்கள்வாசிக்காமல்விட்டுவிடலாம். ஆனால்நச்செள்ளையின்

குறுந்தொகைப்பாடலை (210),

திண்தேர்நள்ளிகானத்துஅண்டர்

பல்ஆபயந்தநெய்யின்தொண்டி

முழுதுடன்விளைந்தவெண்ணெல்வெஞ்சோறு

எழுகலத்துஏந்தினும்சிறிதுஎன்தோழி

பெருந்தோள்நெகிழ்ந்தசெல்லற்கு

விருந்துவரக்கரைந்தகாக்கையதுபலியே

 

என்ற ஆறுவரிகளின் கவிதைச் செயலை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தலைவனின் வரவைச் சொல்லும் காக்கைக்குப் பலியாக – தனது மகிழ்ச்சியின் வெளிப்பாடாகச் சிறப்பான உணவை விருந்தாகத் தர நினைக்கிறாள் அந்தக் கவிதையின் செயல்படு பாத்திரமாக இருக்கும் தோழி. நச்செள்ளையால் கொண்டாடப்பட்ட காக்கைகள் கூட நிகழ்காலத்தில் பெண்களுக்கு ஆதரவாக இல்லை; எதிர்நிலையிலேயே இருக்கின்றன என்பது புதிய மாதவி உருவாக்கும் குறியீட்டின் எதிர்நிலை. தலைவனைப் பிரிந்திருக்கும்போது ஆறுதலாக இருந்த காக்கைகள் இப்போது இல்லை. அந்தக் காக்கைகள் மனதில் தோன்றும் அலைகளாகவும் நினைவுகளாகவும் மாறிவிட்டன. தனித்திருக்கும் ஒரு பெண்ணிற்குத் துன்பங்களையே வலிகளையே தருகின்றன. இரவு பகல் எனக் காலம் பார்க்காமல், என்னுடலுக்குள் புகுந்து ரணப்படுத்துகின்றன; கொத்தித்துளைத்து எனது தோல்வியில் அவை கூத்தாடுகின்றன என்கிறாள் தனிமையில் இருக்கும் ஒருபெண்.

நச்செள்ளையால் உருவாக்கப்பட்ட பெண் தனித்திருத்தலில் காக்கையின் கரைதலில் ஆறுதலோடு இருக்கிறாள். புதிய மாதவி உருவாக்கும் பெண் தனித்திருத்தலில் வலியோடும் தவிப்போடும் இருக்கிறாள். இந்த மாற்று மனநிலையை அறிய ’முப்பாட்டி காக்கைப்பாடினி’ என்ற சொல்லைக் குறியீடாகவும் , தொன்மப் படிம்மாகவும் மாற்றிப் புரிந்துகொள்ளவேண்டும். புரிந்துகொள்ளுதல் என்பது வேறொன்றுமில்லை அதனை ரசிப்பதுதான். ரசிக்கத்தக்க கவிதைகள் பலவற்றைக் கொண்ட தொகுப்பாக இருக்கிறது புதிய மாதவியின் மௌனத்தின் பிளிறல்.

=============================================================

மௌனத்தின்பிளிறல்

புதியமாதவி

 

எழுத்து, 3 சி, எல்டோரடா, 112, நுங்கம்பாக்கம்ஹைரோடு, சென்னை, 600 034

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *