நியோகா : சில பகிர்தல்கள்

niyoga niyoga001

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சர்வதேசதிரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்படவிழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் ஆக வெவ்வேறு திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டிருந்த பின்னரே கனடாவில் திரையிடலுக்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  கனடாவில் கலை இலக்கியத் துறைகளில் பல்வேறுதுறைகளிலும் பங்களித்துவரும் நண்பர்கள் பலரது பங்களிப்பு இத்திரைப்படத்தில் இருக்கின்றது என்பது திரைப்படத்தினைப் பார்ப்பதற்கான ஆர்வத்தைக் கூட்டியிருந்தது.  அத்துடன் தனிப்பட்ட முறையில் எமக்கான கலை இலக்கிய வெளிப்பாடுகள் குறித்து அக்கறை அண்மைக்காலமாக அதிகரித்து இருப்பதாலும், திரைப்படங்கள், குறும்படங்களில் நாம் தமிழகத்தை விட்டு தனியான துறையாக வளரவேண்டும் என்ற நோக்கு அதிகரித்து இருப்பதாலும் இத்திரைப்படத்தைக் காணவேண்டும் என்பதில் ஆர்வமேற்பட்டிருந்தது.  தவிர்க்கவே முடியாத காரணங்களால் படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களின் பின்னரே திரைப்படத்தினைப் பார்க்கும்படியானது.  அந்தக் குறைபாட்டுடனேயே இப்பதிவு தொடர்கின்றது.

இத்திரைப்படம் போருக்குப் பின்னரான விளைவுகளின் பாதிப்பைப் பற்றிப் பேசுகின்றது.  கதையின் ஆரம்பப்பகுதி ஈழத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.  பிரதான கதாபாத்திரமான மலர் என்கிற பெண் திருமணமாகி சிலநாட்களிலேயே அவளது கணவன் கடத்தப்பட்டு காணாமற்போகின்றான்.  அதன் பின்னர் அவளது குடும்பம் அவளுடன் கனடாவிற்குப்இத்திரைப்படம் போருக்குப் பின்னரான விளைவுகளின் பாதிப்பைப் பற்றிப் பேசுகின்றது.  கதையின் ஆரம்பப்பகுதி ஈழத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.  பிரதான கதாபாத்திரமான மலர் என்கிற பெண் திருமணமாகி சிலநாட்களிலேயே அவளது கணவன் கடத்தப்பட்டு காணாமற்போகின்றான்.  அதன் பின்னர் அவளது குடும்பம் அவளுடன் கனடாவிற்குப் புலம்பெயர்கின்றது.  அவளது இளைய சகோதரன் கனடாவில் படித்து, “கனடியத் தன்மை கொண்டவனாக” (புறவயமாகவேனும்) கனடிய நீரோட்டத்தில் கலந்துவிடுகின்றான்.  அவனுக்குத் திருமணமாகி அவனும் அவன் மனைவியும், பெற்றோரும் மலரும் ஒரே வீட்டிலேயே வசிக்கின்றனர்.  மலரின் உடைகளின் ஊடாகவும் உடல்மொழி மூலமாகவும் அவள் தயக்கங்கள் நிறைந்த, கிட்டத்தட்ட ஈழத்திலேயே தேங்கிவிட்டவளாகவே காண்பிக்கப்படுகின்றாள்.  அவளது ஒரே பொழுதுபோக்காக வீட்டில் பூமரத் தோட்டம் அமைப்பதும் அவற்றைப் பராமரிப்பதும் இருக்கின்றது.  தவிர, காணாமற்போன அவளது கணவனைக் கண்டுபிடிக்கக் கோரியும், காணாமற்போனவர்கள் பற்றி பொதுவாகவும் மனித உரிமை அமைப்புகள் நடத்தும் கூட்டங்களுக்கு அவளது பெற்றோருடன் அவள் சென்று வருகின்றாள்.  இன்னொரு பக்கமாக கோயில்கள், வேண்டுதல்கள் மற்றும் சோதிடர்களிடம் சென்று ஆலோசனை கேட்பது என்பதாக காலம்போகின்றது.

read more:-  https://arunmozhivarman.com/2016/06/16/niyoga/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *