எங்கள் காலங்கள்
வலி நிறைந்தவை
புதையுண்டோரை தினம் தினம் கணக்கெடுத்தபடியே
படுக்கைக்கு போகிறோம்
நீளும் இரவினை கடக்கவியலா – மா பாவிகள் ஆனோம்
தூங்கவே முடிவதில்லை
தயைகூர்ந்து கேட்கிறேன்
புதைகுழியில் கிடப்போரை
கீறலேதும் இல்லாமல்
பவுத்திரமாய் மேலெடுங்கள்
இப் பாதகத் தீவினை – பார்த்தொருமுறை
காறி உமிழட்டும் – தூ…..

