மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களை தண்டிப்பது

மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களை தண்டிப்பது என்பது குற்ற உணர்வோடு இருப்பவர்களே என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐ நா வின் விசேட அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பேனிஸ் தெரிவித்துள்ளார். அவர் சமூக ஊடகங்களின் கருத்து தெரிவிக்கையில் காசா மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி மனிதாபிமானம் உள்ள எல்லோருரினதும் கண்களாலும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

தொடரும் யுத்தத்தினால் பிள்ளைகள் பட்டினி காரணமாக தாய்மாரின் கரங்களில் உயிரிழக்கும் தருணங்கள். உணவு தேடும் போது அவர்களின் தந்தைமாரும் சகோதரர்களும் குண்டுவீச்சில் துண்டு துண்டாக்கப்படுறார்கள் போன்ற காட்சிகள காசாவில் மக்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள் ஐக்கிய நாடுகளால் அதனை நிறுத்த முடியாமல் உள்ளது என்பதே எனது கரிசனை என குறிப்பிட்டுள்ளார்.
காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிராஸ்ன்சிகா அல்பேனிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *