தலைப்பிலி கவிதை – கௌசல்யா (மலேசியா)

நிராகரிப்பின் கசப்பை தொண்டை அறியும் போதெல்லாம்

பிரக்ஞையின் குரல் என்னிடம் கேட்கிறது.

காதல் என்று நீ சொல்வது

என்றாவது ஒரு நெற்றி முத்தத்தை இட்டதுண்டா

விரல்களை தழுவியதுண்டா

கண்களை பார்த்தபடி தலை கோதியதுண்டா

ஒருதடவையாவது “போகாதே” என்றதுண்டா

ஒரு நேசத்தின் தழுவலுக்கு நூறு சவுக்கடி கொடுத்த இவர்களுக்கா நான் கண்ணீர் சிந்துகிறேன்

சிறு மலரையேனும் பறித்து தர மனமற்றவர்களுக்கா நான் கவிதைகள் எழுதுகிறேன்

இதுபோல் எத்தனை எத்தனை தகுதியற்ற கரங்களில் என்னை வழங்கியிருக்கிறேன்

19/12/2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *