மரணமூறும் கனவுகள் – றஞ்சி

dec2011-2 022yali canadaயாழினி- இன்று புலம்பெயர் பெண் எழுத்துக்கள் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்களால் அதாவது இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தவர்களின் எழுத்துக்களாக வீரியமாக எல்லாவற்றையும் கேள்விக்குட்படுபவையாகவும் உள்ளன.

சமூகப் பிரக்ஞையுடைய இளம் தலைமுறையினர் புதிய பாய்ச்சலூடாக மிக துல்லியமாக சமகால வாழ்வியலுக்கூடாக பகிர்ந்த-பகிரப்படாத பெண் அனுபவங்களை பல் துறைகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயற்படுவதை நாம் காணலாம். அதனை மொழிவதற்கான சாத்தியம் தென்படும் குரல்களாக அவர்களின் எழுத்துக்கள் உள்ளன.இவர்கள் தனி மனித மனத்துயரத்தை, பரிவை காதலை,பெண் உடல் மீதான ஆக்ரமிப்பை,சுயமழிப்பை அடையாள மீள் உருவாக்கத்தை அந்நியமாதலை இன அழிப்பை மற்றும் புலம்பெயர் வாழ்வு சிக்கல்களை இவர்களின் எழுத்துக்கள் மூலம் பேசுகின்றன. அத்துடன் உலக அரசியலை உலக மயமாக்கல் பிண்ணனியிலான பண்பாட்டு அரசியலை பேச முயல்கின்றனர் துருத்திக் கொண்டு இல்லாத உணர்வு வெளிப்பாடு பாசாங்கு அற்ற உண்மை நிலையை எடுத்துரைக்கின்றனர். குறியீடுகளும் படிமங்களும் உதாரணங்களும் புதிய தளத்திலிருந்து கையாளப்படுகின்றன.

~பெண்மொழியைப் பற்றி மட்டுமே பேசுவதை விடுத்து பெண்மொழி, பெண்ணிய அனுபவங்கள் என்கிற சாளரத்துக்கூடாக விரியும் புதிய வடிவங்கள், புதிய உறவு நிலைகள், புதிய பண்பாட்டுக் கோலங்கள், புதிய கலாசார இலக்கணங்கள், புதிய பாலினஃ பாலியல்பு உறவுகள் என்பவற்றைப் பற்றிப் பேசுகின்றனர் இரு மொழிக் களங்களை அதீத மனிதமையப்படும் எதார்த்த மொழிக் குறிகளாக பிரசவிக்கின்றனர். பரந்த சமூக அளவில் வாழ்தலுக்கான குரல்களாக இவர்களது மொழிக்களம் அவர்களின் மொழிக்குள் புதிய வெளிப்பாட்டை புலம்பெயர் பெண் எழுத்துக்களுக்கும் எமக்கு அறிமுகம் செய்கின்றன. பெண்ணிருப்பை முன்னிறுத்தி முரண் என்னும் சொல்லாடல் வழியே பெண் எழுத்து தளத்தில் இயங்கும் புலம்பெயர் பெண் மொழியை பெண்ணியம் குறித்த படிமங்களை அடுத்தவர்களுக்கு அளிக்கும் முக்கிய படைப்புகளாக வடிவமைக்கின்றனர்.

அந்த வகையில் என் வாசிப்பில் அடையாளம் கண்டதில் சிலர் உள்ளனர் அதில் ,நிவேதா முக்கியமானவர் அவரின் எழுத்துக்கள் வாழ்வியல் அனுபவத்தை தனது மொழி வெளிப்பாட்டின் மூலம் பெண் எழுத்துக்களை பிரதியாக்குகினறார்  எழுத்துக்கள் அணங்கு வெளியீடாக மரணமூறும் கனவுகளாக வெளிவந்துள்ளது வாழ்த்துக்கள் யாழினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *