மதுபான விலையேற்றங்களும் மயங்காத குடிகளும்,,,,

எஸ்தர் – (மலையகம்) திருகோணமலைகளிலிருந்து

drinking-manalcol

2016 ம் ஆண்டின் தனது முதலாவது வரவு செலவுத்திட்டத்தை கடந்தக்pழமை அரசாங்கம் முன்மொழிந்திருந்தது. 2016 ம் ஆண்டுக்கானதும் புதிய அரசாங்கத்தின் வரவு செலவு தி;ட்டம்மென்பதால் அனைவரும் வாய்பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் நமக்கு என்ன கிடைக்கும் நமக்கு உன்ன கிடைக்கும் என்று அவ்வப்போது சாதகமான நலனோம்புத் திட்டங்களை கண்டு வாய்விட்டு சிரித்தனர் இந்நிலையில் அரசாங்கம் மதுபானத்தின் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசு வருடம் ஒன்றில் அதிகமான வருவாயைப் பெறுவதும் உள்ளுர் வெளியூர் சரக்குகளினால்தான் அரசாங்கத்தின் கஜானாக்களும் நிரம்பி வழிகின்றது. 2016 ம் ஆண்டின் ஒரு Nபுhத்தல் சாராயத்தின் விலை 1500.00 இந்நிலையில் இதுப் பெரும் அதிர்ச்சியை மதுபாவனையாளர்கள் மீது இறக்கியுள்ளது. இருந்தாலும் அரசாங்கம் எவ்வளவு கூட்டினாலும் கூட்டட்டும் நான் குடிப்பேன் குடிச்சிக்கிட்டே இருப்பேன் என்ற கூட்டத்தாரும் சமுகத்தின் மத்தியில் இருக்கிறார்கள்.அந்த வகையில் ஒருக் கூலித்தொழிலாளியின் நாட்கூலி 1200 ஆக இருந்தது. அதில் 200 குடிப்பதற்க்கு எடுத்துக் கொண்டு 1000 ருபாவை வீட்டாருக்கு கொடுப்பது வழக்கம். இப்போது மது விலைகளால் அந்த 1000 ருபாவிலிருந்து இன்னும் சில நூறு நோட்டுக்களை உருவவேண்டி இருக்கும். இதனை அறியாத குடும்பத்தலைவிகள் உழைப்பவர்களுடன்

வீணாண வார்த்தைமோதல்களும் பின்னர் போதை அதிகரிக்க அவை குடும்ப வன்முறைகளாக நேர்கின்றது.அரசாங்கம் போதையற்ற சமூகத்தை உருவாக்குகிறோம் என்கின்றது அரசாங்கத்தின் வருவாiயையுமே கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால் நிலைமை இந்தப் புள்ளியில் இருந்துதான் விசுவரூவமெடுக்கின்றது. குடிப்பவர் தனது வருவாயில் அதற்குரிய தொகையை உருவிக் கொண்டே தரும்போது அங்கே பொருளாதார சிக்கல்கள் தலைதூக்குகினறது.குடும்பச்சண்டை ‘வீட்டுக்கு பணம் கொடுப்பதில்லை எல்லாவற்றையும் சாராயத்துக்கே எடுத்தாச்சி” என்ற குடும்பங்களின் சலிப்புக்களை காண கூடும் இது குடும்ப தலைவிகளினதும் குடும்ப உறுப்பினர்களின் நியாயம.
நிரந்தரமாய் குடிப்பவாகளோ ‘அது எப்படி சாமி குடிள திடிரென்னு நிப்பாட்டுன்னா முடியுமா?அது என்ன பஸ்ஸா நிப்பாட்டுன்னா நிக்க? அரசாங்கம் அவங்க வேலைய செய்யுது நாம அவ்வளவு கஸ்டப்பட்டு குடிக்காம இருக்க ஏலுங்களா”? என்று குடிக்கின்ற கூட்டம் தம் பக்கம் நியாயத்தையும் அள்ளி வைக்கின்றது. கடைளில் மதுபான விற்பனையாளர்களும் அரசாங்கமும் வருவாயை இரடடிப்பாக பெறறுக் கொள்கின்றது. குடும்பத்தையோ வெறும் வாயாக்கி விட்டது.

ஒரு பியர் டின் ஒன்றின் விலை ஆரம்பத்தில் 220 ஆக இருந்து பின்னர் 250 ருபாய் என்ற வெற்றி மட்டத்தை அடைந்துள்ளது,சதாரணமான ஒருவர் 02 பியர் டின்களை குடிக்கக் கூடும் அவருக்கு இப்போது 300 ருபாவைத் தேவைப்பபடுகின்றது. பியர் போத்தல் ஒன்றின் விலை 250 ருபாவாக மாறியுள்ளது.நிலையான ஒரு மட்டத்துக்கு மேற்பட்ட பணம் உழைக்கும் தரப்பினருக்கு இந்த விலையேற்றங்கள் ஒன்றும் செய்வதிலைலை அவர்களின் பொருளாதாரத்தை ஆட்டிப்பார்ப்பதில்லை ஆனால் பாதிக்கப்படுவது நாடகூலி அடிப்படையில் வாழ்க்கையை நகர்த்தும் சாதாரண கூலித்தொழிலார்களும் மலையக மக்களுமே. மது ஒருக்கட்டாய தேவையாக மக்கள் மத்தியில் மலிந்துக் கொண்டு வருவதும் 100 இல் 90 வீதமானோர் இன்று குடிப்போதைக்கும் அடிமைப்பட்டு கிடப்பதும் கவலையளிப்பதும் இதற்கான மாற்றுத்தீர்வுகளும் இடியப்ப சிக்கலாகவும் உள்ளமை மறுக்க இயலாத சழுக உண்மைளுமாகும். சாராய விலையேற்றத்தால் தள்ளாடுவது குடிமகன் அல்ல குடும்பங்களே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *