வ. கீதாவுடன் ஒரு நேர்காணல்

 றஞ்சி (சுவிஸ்)(நன்றி : பெண்கள் சந்திப்பு மலர் (1996))

 

va_geetha

?.இனஒடுக்கு முறைக்கு உள்ளாகும் தேசத்தில் ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்படும் பெண்களுக்கு போராட்டம் என்பது இரட்டை நிலைப்பட்ட ஒன்று  எனும் போது தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் உதிரிகளாகச் செயற்படுவதா? அமைப்புகளாக கலந்து போராடுவதா சிறப்புடையதாக இருக்கும்?

தமிழகத்திலும் சரி ஈழத்திலும் சரி தேசிய அடையாளம் என்பது ~இனமானம்| ~இனப்பெருமை| என்பன போன்றவற்றினுடாக வெளிப்படுவதாகக் கொள்ளப்படுகிறது. இங்கு ~மானம்| என்பது பெண்களின் ~கற்பு, மானம்| போன்றவற்றுடன் தொடர்புப்படுத்தி பேசப்படுகிறது. தமிழகத்தை கன்னித்தாயாக உருவகிக்கும் சொற் பிரயோகங்களைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறு விளக்கப்படும் தேசிய அடையாளம் பெண்கள் ஏற்று தமதாக்கிக் கொள்ளக் கூடிய அடையாளமாக  இருக்க முடியாது. ஏனெனில் பெண்ணின் பாலியலை குறிப்பிட்ட வடிகால்களுக்குள் செலுத்தி முடக்கி செயல்படும் இவ் விளக்கம் பெண்களை அந்நியப்படுத்தும் ஒன்றாக விளங்குகிறது. எந்தவொரு சிந்திக்கும் பெண்ணாலும் இந்த அடையாளத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

தேசிய இனப் பிரச்சினை அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை பெண்ணிய நிலைப்பாட்டிலிருந்து விளக்குவதும் தேசிய இனப்போராட்டத்திற்கு பெண்ணிய உள்ளடக்கம் வழங்குவதும் தான் பெண்களை ஆக்கபூர்வமான வகையில் போராட்டத்துடன் இணைக்க உதவும். ஆனால் இதற்கு முன்நிபந்தனையாகவும் போராட்டத்தின் போதும் குடும்பம், சாதி,மதம், தமிழ்ப்பண்பாடு, முதலியவற்றை  மறுவிளக்கம் செய்வதும் மாற்றியமைக்க முயற்சி செய்வதும் அவசியம்

?.தமிழ் நாட்டில் பெண்ணிய இயக்கங்களின் பலம், பலவீனம் மற்றும் அதன் செயற்பாட்டுத்திறன் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? தமிழ் நாட்டில் எந்தளவு பெண்ணியம் சம்பந்தமான வேலைப்பாடுகள் அமைந்துள்ளன? இது எவ்வாறு சாதாரண பெண்களை சென்றடைகிறது?

தமிழ் நாட்டில் தற்சமயம் இயங்கிவரும் பெண்ணிய இயக்கங்களை ஒரு வசதிக்காக மூன்று வகையாகப் பிரிக்கலாம். கட்சி சார்ந்த அமைப்புகள்,ஏனைய அரசியல் கட்சிகளின் மகளிர் அணிகள். இவற்றுள் நெடுங்காலமாகக் செயல்பட்டு வரும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் (இது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு உடையது) அடங்கும். தன்னார்வக் குழுக்களின் முயற்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள மாதர் சங்கங்கள், பெண்கள் தலைமை தாங்கி நடத்தும் மகளிர் விடுதலை அமைப்புகள், மகளிரை மட்டுமே உறுப்பினராகக் கொண்டு இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள் ஆகியன இரண்டாவது வகை இயக்கத்தில் அடங்கும். இவற்றுள் பல அயல் நாட்டிலிருந்து பெறப்படும் உதவித்தொகை கொண்டு இயங்கி வருகின்றன. சில உள்நாட்டு நன்கொடைகள் திரட்டிச் செயல்பட்டு வருகின்றன. மூன்றாம் வகை இயக்கத்தில் கட்சிசாராத சுயாதீனமான வகையில் செயல்பட்டு வரும் பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைப்பு முயற்சிகள் அடங்கும். இவற்றின் உறுப்பினர்கள் தாம் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை அமைப்புப் பணிகளுக்கு ஒதுக்குவர்.


பெண்ணிய இயக்கங்கள் கிராமப்புறங்களிலும் சில நகரங்களிலும், சிறு நகரங்களிலும் செயல்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிக்குரிய பிரச்சினைகள் – சுற்றுச்சூழல் ,சாதி,மதப் பிரச்சினைகள், கொத்தடிமை என்பன போன்ற பிரச்சினைகள் முதல் பெண்கள் பெண்களாக இருப்பதால் எதிர்கொள்ளும் பிரத்தியேகப் பிரச்சினைகள், ஈறாகப் பெண்ணிய அமைப்புகள் பலவற்றில் தலையிட்டு பெண்விடுதலை, சமத்துவம் என்ற அடிப்படையில் தீர்வுகளை உருவாக்க முயற்சி செய்து வருகின்றன.

கோட்பாட்டளவில் ஒருமித்த கருத்துக்கள் மகளிர் அமைப்புகளுக்கிடையே இல்லை என்றாலும், பெண்கள் சகித்து வாழும் அன்றாட வன்முறைகள,; பாலியல் பலாத்காரம், சாதி, மதக் கலவரங்கள் உருவாக்கும் வன்முறைச் சூழல் சாதி,வர்க்கம் காரணமாக சில சமூக வகுப்புக்களைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் தனிச் சிறப்பான பிரச்சினைகள், சுமைகள் ஆகியன குறித்த சில நிலைப்பாடுகள் ஏறக்குறைய அனைத்து அமைப்புகளுக்கும் பொதுவானவையாக உள்ளன. அதாவது பெண் பெண்ணாக இருப்பதால் சந்திக்கும் வன்முறை பெண் தலித்தாகவும், முஸ்லிமாகவும், உழைக்கும் வர்க்கப் பெண்ணாகவும் இருப்பதாலும் சந்திக்கும் பொருளாதார, பண்பாட்டு, சமூக ஒடுக்குமுறைகள் ஆகியனவற்றை எதிர்கொண்டு புதிய விழுமியங்கள், புதிய உறவுகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு பெண்ணிய அரசியலின் தேவையை அனைத்து மகளிர் அமைப்புகளும் உணர்ந்து செயல்பட்டு வருகின்றன.
பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் அனைத்துப் பெண்களுக்கும் பொதுவானவைதான் என்றாலும், பெண்களும் கூட சாதி,மத, வர்க்கப் பிரிவுகளைக் கடந்தவர்கள் அல்லர் என்ற கருத்து பெண்கள் அமைப்புகளின் விவாதங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சாதிப்பிரச்சினை, வர்க்கப் பிரச்சினை ஆகியவற்றுடன் தொடர்புடையது தான் பெண்கள் பிரச்சினையும் என்ற புரிதல் இன்று பல இடங்களில் காணப்படுகிறது. பல்வேறு வகையான காரசாரமான ஆனால் ஆக்கபூர்வமான விவாதங்கள் பெண்கள் அமைப்புகளில் பெண்களுக்கிடையே நடைபெற்று வருவது எமது நாட்டு பெண்ணிய இயக்கத்தின் பலம்.

பலவீனம்:- சில பொதுப் பிரச்சினைகளில் வன்முறை,பஞ்சாயத்து, தேர்தலில் பெண்கள், பெண்களும் குடும்பக் கட்டுப்பாடும் (இதன் அரசியலை விமர்சித்தல்) பெண்கள் அமைப்புக்கள் அவ்வப்போது இணைந்து செயல்பட்டாலும், தொடர்ந்து ஒரு அணியாக இயங்க முடிவதில்லை. இரண்டாவதாக பெண்ணியம் பற்றிய கோட்பாட்டுரீதியான விவாதங்கள் பெண்கள் அமைப்புகளிடையே நடைபெறாமை (குறிப்பிட்ட தலைப்பில் குறிப்பிட்ட பிரச்சினையை ஒட்டி கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றாலும் There is no Serious and Susatained Dialogue on Politics power Sexuality.

? பெண்ணியம் சம்பந்தமான புதிய கோட்பாட்டுப் புரிதல்கள் அல்லது புதியபோக்குகள் தமிழகச்சூழலில் எந்தளவில் உள்ளன?

பழைய வரலாற்றுரீதியான புரிதல்கள்கூட எடுத்துக்காட்டாக பெரியார் சுயமரியாதை இயக்கத்தினர் முன்வைத்த பெண்ணியக் கருத்துக்கள் நமது கூட்டு நினைவில் தெளிவாக இடம்பெறாத நிலையில் புதிய புரிதல்களைப் பற்றி என்ன சொல்வது? சில தனிப்பட்ட நபர்கள் அமைப்புகள் முதலியன பாலியல்,குடும்பம், ஆண்-பெண் உறவு,பெண்-பெண் உறவு, தோழமை குறித்து பேசியும் விவாதித்தும் வருகின்றனர். இருந்தாலும் இயக்கங்களின் செயல்பாட்டினை செய்பாடுகளை பாதிக்கும் அளவுக்கு இவ் விவாதங்கள் அமையவில்லை. பெண்கள் இயக்கங்களின் அக்கறைகள்,செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி அறியமாட்டாமல் சிலர் குறிப்பாக ஆண் அறிவாளிகள் புதிய பெண்ணியக் கருத்துக்களை விவாதித்தும் அவற்றைப் பற்றி எழுதியும் வருகின்றனர் ஒரு பெண்ணிய அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் இத்தகைய விவாதங்களின் அரசியல் பொருத்தப்பாட்டை என்னால் சரிவர உணரமுடியவில்லை. செயல்பாடும் சொல்லும் பிண்ணிப் பிணைந்த நிலையில் ஒன்றை மற்றொன்று வடிவமைக்கும் பெண்ணிய அரசியல் சூழலில் ~சொல்| அதுவே(வும்)சிறந்த ~செயல|; என்ற கருத்து வினோதமாக எனக்குப் படுகிறது.

V. Geetha.jpg itok=_Dnq0q8C? உங்களுக்கும், தலித் பெண்ணிய அமைப்புகளுக்கும் இடையில் கூட்டு வேலைமுறைகள் ஏதாவது உண்டா?

நான் சார்ந்து பணிபுரியும் சிநேகிதி பெண்கள் அமைப்பு குடும்ப வன்முறைக்குப் பலியாகும் சகித்து வாழும், பெண்களுக்கான ஆதரவு மையமாக இயங்கிவருகிறது. பல்வேறு சகப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களின் தலித் பெண்களின,; வன்னியர் இனப்பெண்களின், ஆசாரி வகுப்பைச் சேர்ந்தவர்களின், பார்ப்பன பெண்களின், கிறிஸ்துவப், முஸ்லிம்பெண்களின், குடிசைவாழ் பெண்களின், நடுத்தர வகுப்புப் பெண்களின் பூர்சுவா மேட்டுக்குடிப் பெண்களின் வாழ்க்கை அவலங்கள் அன்றாட தொல்லைகள் குறித்து நேரடியாக அறிய வாய்ப்புப் பெற்ற எங்களுக்கு சாதி, மதம், வர்க்கம் ஆகியன எல்லாப் பெண்களையும் ஒடுக்கு விதத்தைக் காணமுடிகின்றனது.

உயர் சாதிப் பெண்கள் , நடுத்தர வர்க்கத்துப் பெண்களுக்கு இது உடனடியாகப் பிடிபடுவதில்லை. தலித் இனப் பெண்களுக்கும், உழைக்கும் பெண்களுக்கும் இது ஒரு சாதாரண உண்மை. பெண்கள் என்ற அடிப்படையில் நாங்கள் தோழமையை, கூட்டுறவை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். சாதியை கடந்து வந்துவிட்டோம் என்று நான் கூறவரவில்லை. நான் எதிர்கொள்ளும் ஆணாதிக்கமும் தலித் பெண் ஒருவர் எதிர்கொள்ளும் வன்முறையும் ஒன்றாக இருக்க முடியாது. நான் அப்பெண்ணின் வேதனையை முழமையாக உணரக்கூடியவளா என்பது கூட எனக்குத் தெரியாது. எனக்கு வாய்த்துள்ள சலுகைகள் நான் சுவீகரித்துள்ள செல்வாக்கு (படிப்பு,வேலை) இவை என்னைப் பொறுத்தவரை Merely Accidental தான் . எந்த வகையிலும் நான் என்னளவில் அவற்றுக்கு உரியவள் அல்ல. ஆனால் ஒரு பெண் என்ற வகையில் பிற பெண்களையொத்த உடலமைப்பை உடையவள் என்ற வகையில் என்னால் பிற பெண்களுடன் பாசம், நேசம், காதல்,தோழமை கொண்டாட முடிகிறது. அவ்வாறு கொண்டாடுவதில் அடங்கியுள்ள ஆனந்தத்தை, நிம்மதியை சொற்களால் விவரிக்க முடியாது. சாதி, வர்க்க வேறுபாடுகள் கொண்ட சமுதாயத்தில் ஒரு சிறிய பெண்ணிய தோழமை உலகை உருவாக்குவதில் A womans Space -நானும் எனது தோழிகளும் முனைந்துள்ளோம்.

? குடும்பம் என்பது ஆணாதிக்கம் செயற்படும் ஒரு நிறுவனம் என்ற வகையில் குடும்ப அமைப்பு முறையை எப்படி எதிர்கொள்வது என்பதைக் கூறமுடியுமா??

குடும்ப அமைப்பின் அடித்தளம் வன்முறை. ஆண்,பெண் உறவின்,குறிப்பாக கணவன்-மனைவி உறவின் பாலியல் உறவின் தன்மை இவ் வன்முறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்க குடும்ப அமைப்புக்குரிய பாலியல் தத்துவம் வன்முறையை தனது ஒவ்வொரு கோட்பாட்டிலும் செயலிலும் ஏன் மொழியிலும் கூட கொண்டுள்ளது. இத்தகைய வன்முறையை அடித்தளமாகக் கொண்ட சமூக அமைப்பானது பெண்ணை பாலியல் கருவியாகவும் சமூக பொருளாதார மறுஉற்பத்தியை சாத்தியப்படுத்தும் மிக அவசியமான (ஆனால் இழிசெயலாகக் கருதப்படும்)குடும்ப உழைப்பை மேற்கொள்ளும் குடும்ப உழைப்பாளியாகவும் பாவிக்கிறது. இதை குடும்பத்தை மாற்றி அமைப்பதும் எதிர்கொள்வதும் -Requires nothing none or less than a war between the sexes.The familiy is the ultimate site of the class struggle in the final analysis , every man has to fight this war himself with his masculinity , his partiarchal conscience – பெண்கள் தமது தோழமையின் அடிப்படையில் புதிய பாலியல் உறவுகளை (திருமணம் என்ற சட்டகத்துக்குள் புக விரும்பாத உறவுகளை) உருவாக்கிக் கொள்வதன் மூலம் இருக்கக் கூடிய குடும்ப அமைப்பை ஜனநாயகப்படுத்துவதன் மூலம் ஆணாதிக்கக் குடும்ப அமைப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

? சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான மதிப்பீடுகள் மாற்றத்திற்குட்படாத நிலையில் குடும்பக் கலைப்பை முன்வைப்பது பெண்களை இன்னமும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிடும் என்ற கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உண்டா??

கருச்சிதைப்பை ஒரு சிசுக்கொலையாக உருவகிப்பது மதரீதியான மரபுவழிப்பட்ட சிந்தனையின் ஒரு தாக்கம் எனக் கொள்வதில் உங்களுக்கு முரண்பாடு உண்டா??

கிறிஸ்துவ, இஸ்லாமிய மதச் சிந்தனையின் தாக்கம் பதிந்த சமுதாயங்களில் கருச்சிதைவு இவ்வாறு விவரிக்கப்பட்டு ஒரு மாபெரும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் இங்கு முற்றிலும் வேறானதொரு Politics of Reproduction – நிலவுகிறது. கருச்சிதைவானது குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் ஏழைப் பெண்களின் மீது திணிக்கப்படும் ஒன்றாக பெண் கருவை அழிக்கும் முறையாக ஆண்பிள்ளை ஆசையை நிவர்த்தி செய்ய (மறைமுகமாக) உதவும் வழியாகக் காணப்படுகிறது. இங்கு  Choice Politics Cஎன்பதற்கு என்ன பொருள் இருக்க முடியும்- மூன்றில் ஒரு பெண்ணிற்கு கூட தனது பாலியல் வாழ்வின் தன்மையை போக்கை நிர்ணயிக்க இயலாத- முடியாத போது?

ஆண்களின் பாலதிக்கத்திற்கு எதிராக ஓரினச் சேர்க்கையை முன்மொழிவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
ஓரினச் சேர்க்கை என்பது ஆண்களைப் பொறுத்த வரை குதவழியான உடலுறவு முறையை பிரதானமாய் உள்ளடக்கிய ஒன்று. எனவே ஓரினச் சேர்க்கை மூலம் ஒருவன் தன்னை ஒரே நேரத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் உணர முடியும் என்று சொல்லப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை இந்த உணர்வை நிறைவு செய்ய முடியுமா? முடியாது எனின் ஓரினச் சேர்க்கையை ஆண்கள் முன்மொழிவது என்பது கூட ஒரு ஆணாதிக்க வகைப்பட்ட சிந்தனைதான் என்று கொள்வதில் தவறு உண்டா?

ஓரினச் சேர்க்கை என்று மொழியாக்கம் செய்யப்பட்டு வரும்  ர்ழஅழ ளுநஒரயடவைல  என்பது எல்லா நாடுகளிலும் சமுதாயங்களிலும் ஒரேபடித்தானதாக இருப்பதில்லை. இந்தியாவில் இந்தியாவின் பல்வேறு சமூக சூழல்களில் ஆண்களுக்கிடையே நெருங்கிய பிணைப்பும், நட்பும், பாலியல் உறவும் காணப்படுவதும், அவ்வாறு பெண்களுக்கிடையேயும் நெருங்கிய உறவும், தோழமையும் காணப்படுவதும் அதிசயமில்லை. We are a Segregated Society and our most intense intimate relationships are usaually learnt under one of our own  sex.

ஓரினச் சேர்க்கை என்பது ஆணை ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே சமயத்தில் அடையாளங் கொள்ள உணர முடிகிறது என்ற கருத்து எனக்கு வியப்பூட்டுகிறது. பல ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் அப்பட்டமான பெண் வெறுப்பாளராகவும் (Misogynists) இருக்கின்றனரே. !

ஓரினச் சேர்க்கையோ,வேறு எந்தவகைச் சேர்க்கையோ ஒரு நபர் மேற்கொள்ளும் தேர்வுதானேயன்றி ஒரு பாலியல் நியதியல்ல. எவ்வகை உறவாயினும் அது (ஓருவரது) ஆதிக்கத்தை நிலைநாட்டக் கூடிய உறவாக உருமாற்றப்படலாம். சேர்க்கையின் வடிவத்தைக் கொண்டு பாலியலின் அரசியலை அதன் முற்போக்கு, பிற்போக்கு தன்மைகளை மதிப்பீடு செய்வதும்  கூட உடலை  அதாவது ~மானுட உடலை|  பொருள் தன்மையுறச் செய்வதற்கு (Reification)  ஒப்பாகும் என்பது என் கருத்து

?.சாதியும் பாலியலும் சந்திக்கும் புள்ளியில் பெண் ஒடுக்குமுறையை அடையாளம் காண்பது எந்தளவில் சரியானது? இந்நிலைமையிலும் வளர்ச்சியடைந்த இந்த நாடுகளிலும் செல்லுபடியாகக் கூடிய ஒன்றா?

சாதி என்பது ஒரு விதத்தில் நிறவெறி, இறுமாப்பு போன்றது தான். பெரியார் ஒருமுறை கூறியது போல் அது நம் எல்லோரிடையேயும் ஏணிப்படி போல் காணப்படும் ஒன்று. இந்து- இந்திய சமுதாய பொருளாதார  அமைப்பினை அதன் ஏற்றத் தாழ்வுகளை முரண்களை கட்டிக்காத்து ஒடுக்கப்படும் மாந்தர் அனைவரும் ஒன்றாக இணைவதை சாத்தியமற்றதாக்கியே சாதி செயல்படுகிறது. குறிப்பிட்ட சாதியின் அடையாளத்தை, மானத்தை காப்பவள்- உறுதிப்படுத்துபவளாக இருப்பவள் பெண். அவள் சாதியின் கட்டுக்கோப்பை தகர்த்தெறிய முற்பட்டாலோ அல்லது அவள் சார்ந்திருக்கும் சாதியை இழிவுபடுத்த அயல்சாதி ஆண்கள் அவளை மானபங்கப்படுத்தினாலோ உயர் சாதி ஆண்கள் தலித் பழங்குடியினப் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினாலோ – இவை அனைத்தும் குறிப்பிட்ட சாதியின் கட்டுப்பாட்டைக் குலைக்கும் செயல்கள். எனவே சாதியும் பாலியலும் அதாவது சாதி அடையாளமும், சாதி சமுதாயத்தில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பாலியல் பாத்திரமும் ஒன்றை மற்றொன்று சார்ந்து இயங்குவதால் இவை இரண்டும் சந்திக்கும் புள்ளியானது பெண்ணியப் போராட்டத்தின் முக்கிய களன்களில் ஒன்றாகிறது. சாதியடையாளம் பெண்களின் பாலியலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அக் கட்டுப்பாட்டினூடாக உறுதி செய்யப்படுகிறது. அவ்வாறே சமய,பண்பாட்டு,தேசிய,இன,நிற அடையாளங்களும் நிலைநிறுத்தப்படுகின்றன. பொஸ்னிய முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க சேர்பியர்கள் கையாண்ட வழிமுறை முஸ்லிம் பெண்களின் மீது திணிக்கப்பட்ட மிக கோரமான பாலியல் வன்முறைச் செயல்கள் தான் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
ஈழத் தேசிய விடுதலைப் போராட்ட நிலைமையில் கவனத்திற்குட்படுத்தப்பட வேண்டிய கேள்விகளில் ஒன்று இது.

?.இன்று பெருமளவில் பெண்கள் ஆயுதம் ஏந்தியுள்ளனர். இது சமூக மதிப்பீடுகள் சிலவற்றை உடைத்து  இருந்தாலும் அடிப்படையில் பெண்கள் பற்றிய மதிப்படுகளை உடைக்கவில்லை. குறைந்தபட்சம் கேள்விக்குளாக்கியதாகக் கூட இல்லை. இந்த நிலைமையில் போராட்டம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபின் அல்லது இதிலிருந்து விலகிக் கொண்ட பெண்களை சமூக மதிப்பீடுகள் வஞ்சித்துவிடும் அபாயம் உள்ளது இது பற்றி உங்கள் கருத்து என்ன ??

இன்று ஈழத்திலும் உலகின் வேறு பல இடங்களிலும் நடைபெற்று வரும் தேசிய இனப் போராட்டங்களில் பெண்கள் பல்வேறு நிலைகளில் பங்கேற்று வருகின்றனர். ஒரு பெண் தன்னை ~பெண்ணாக| மட்டும் உணர்ந்து வாழ்வதில்லை. குறிப்பிட்ட தேசிய இனத்தைச்  சேர்ந்தவளாக  குறிப்பிட்ட மொழியைப் பேசுபவளாக குறிப்பிட்ட மதச் சார்புடையவளாக  தன்னை உணர்கிறார். எனவே தேசிய  இனப் போராட்டங்களில் அவள் பங்கேற்பதில் , அப்போராட்டத்தில் ஆயுதம் ஏந்திச் செயல்படுவதில் எந்த அதிசயமும் இருக்க முடியாது. ஆனால் போர் அது ஏற்படுத்தும் நாசவிளைவுகள், அது உருவாக்கும் எதேச்சதிகார அரசியல், பெண்களை போர்ச்சூழல் பாதிக்கும் விதம் – இவற்றைப் பற்றிய பெண்ணிய மதிப்பீடுகள் அவசியம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களால் – இன்றைய ஈழப்போராட்டச் சூழலில்  இதைச் இசய்ய முடியாது  என்றே எனக்கு படுகிறது. ஏனெனில் ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தன்மை உள்ளடக்கம் முதலியவற்றை விமர்சித்தால் அன்றி மேற்கூறிய விமர்சனத்தை அவர்களால் மேற்கொள்ள முடியாது.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *