கணவனையிழந்த பெண்களின் உலக தினம்

SriLanka_Civil_Wars copy

கணவனையிழந்த பெண்களின் உலக தினம் இன்றாகும்! – ஈழத்தில் கணவனையிழந்த பெண்கள் 90 ஆயிரம் பேர் என கணக்கீடுகள் குறிக்கின்றன. பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் கணவனையிழந்தவர்கள் வாழ்கின்றனர்.யுத்தம், வன்முறை, அசாதாரண காரணங்கள், இயற்கை மரணம் என்பவற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் கணவன்மாரை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள கணவனையிழந்த பெண்களின் இன்னல்களைத் துடைக்கும் நோக்கைக் கொண்ட இந்தநாளில் இலங்கையின் பல்லாயிரக்கணக்கான கணவனையிழந்த பெண்கள் குறித்தும் போரால் கணவனையிழந்த பெண்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.போரால் 90 ஆயிரம் பேர் வரை கணவனையிழந்த பெண்கள் உள்ளதாக மகளிர் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.கிழக்கில் சுமார் 49 ஆயிரம் பெண்களும் வடக்கில் 40 ஆயிரம் பெண்களும் கணவனையிழந்து உள்ளதாகவம் யுத்தத்தினால் கணவனையிழந்த பெண்களில் 12 ஆயிரம் பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் 8000 பெண்கள் மூன்று வயது பிள்ளைகள் கொண்டவர்கள் என்றும் இலங்கை மகளிர் விவகார அமைச்சின் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. வடக்கு கிழக்கின் ஏழைத் தமிழக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் கொல்லப்பட்ட பிறகு அனாதைகளாக்கப்பட்டுள்ள இந்த பெண்களையும்  அநாதாரவாக விடப்பட்டுள்ள அவர்களது பிள்ளைகளையும் காப்பாற்றுவது, பெண்களின் நிர்க்கதியற்ற முகங்கள் நம்மை அமைதியாக கேள்வி கேட்கின்றன. , அவர்களது வாழும் உரிமை நசுக்கப்பட்டுள்ள நிலையில் நம்முடைய மனிதாபிமான மூச்சின் வெளிப்பாடு என்ன ? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *