தலைப்பிலி கவிதை

சுதாஜினி சுப்ரமணியம் (கொட்டகல மலையகம் இலங்கை)

 

ஓர் மழை நாளில் தான்
மலர்ந்தது இதுவம்
கலாசார வேலிகளை
தகர்த்தெறிந்தும்
எல்லைக்குள்
இழுபட்டுக் கொண்டேன்

தூரத்தில்
எத்தனையோ
கனவுகள்
தொலைந்திருந்தன
என்றும் நிதர்சனமாய்
நீ மட்டும்
என்னருகில்

எப்போதும்
உன் இனம் குறித்தான
கோபமும்
வெறியும்
அக வேட்கையில்
அறிவை
மக்கச் செய்தன

என் பெண்மை
மௌனம்
சூழ்நிலை
காதல்
அவைகள் உனக்கு
அந்நியமானவை
என் இனத்தைப்போல்
எண்ணமும்
வேட்கையும்
எல்லை மீறிக்கொண்டிருக்கின்றன
என் இன அடையாளத்தை
தகர்த்து
உன்னுடனான உறவாடலுக்கு
மட்டும்
என் ஒட்டு மொத்தர குழுமத்தை
அடகு வைக்க
நான் தயாரில்லை
நானும் உன்னைப் போல ஓர்
இறுதி நிலை இனவாதியே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *