தவிர்க்கப்பட்டவர்கள் : இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்

இந்தியா முழுதும் உலர் கழிவறைகளில் கைகளால் மலம் அள்ளும் பணி புரியும் சாதி மக்களை தொடர்ந்து சந்தித்ததில் ஒரு ஒத்த தன்மையைக் கண்டறிய முடிந்தது. அவர்கள் நம்மோடு பேசவும் பழகவும் சில தேர்வுகளை வைப்பார்கள். முதலாவது அவர்கள் வீட்டில் தண்ணீர் தருவார்கள். நாம் அதை குடிக்கத் தயாரா என்பதையும் நம்மை அறியாமல் அந்த உபசரிப்பிர்க்கு நம் உடல் மொழி வெளிப் படுத்தும் தன்னிச்சை செய்திகளையும் உற்று நோக்குவார்கள். அந்தத் தேர்வில் தேறி விட்டால் அடுத்து தேநீர். அதை நாம் தயக்கமின்றி குடிக்கிரோமா என்று. அதிலும் தேறி விட்டால் அடுத்து உணவு. இப்படி மூன்றிலும் நாம் தேறினால் மட்டுமே அவர்கள் நம்மோடு மனம் விட்டு பேசவும் பழகவும் செய்கிறார்கள். நாற்றத்திலும் அருவருப்பிலும் நாள் முழுதும் வேலை செய்யும் இந்த மலம் அள்ளும் பெண்கள் சமையலில் மிகுந்த கெட்டிக்காரிகள். மணக்க மணக்க காரசாரமாக சமைக்கத் தெரிந்தவர்கள்.

ஆனால் இதில் சோகம் என்னவென்றால் சமையலில் இவர்கள் மஞ்சள் பொடி மிகக் குறைவாகவே சேர்த்துக் கொள்கிறார்கள். மேலும் பருப்பை சுத்தமாக தவிர்க்கிறார்கள். மஞ்சள் நிறம் அவர்களுக்கு ஒரு அருவருப்பை உண்டாக்கும் நிறமாயிற்று.

 

 

– பாஷாசிங்

இராஜஸ்தானில் ஜூன்ஜூனு மாவட்டத்தில் தொடர்வதை அவர் தெரிவித்தார். அத்துடன் அங்கு நிலவும் நிலைமையை விவரிக்கையில், ” மலம் அள்ளி சுத்தம் செய்வதற்கு கூலியாக அப்பெண்களுக்கு ரொட்டிகள் தான் அளிக்கப்படுகின்றன. அதுவும் எப்படித் தெரியுமா, மலம் அள்ளிச் சுத்தம் செய்து முடித்ததும் அவ்வீட்டின் புழக்கடையில், அப்பெண்கள் தரையில் மண்டியிட்டு காத்திருப்பார்கள், வீட்டு உரிமையாளர் வந்து அவர்களின் மேல் ரொட்டித் துண்டுகளை வீசி எறிவார். அவற்றை அந்தப் பெண்கள் பொறுக்கி எடுத்துக் கொண்டு செல்வார்கள்.” என்று ஸ்ரீலதா சொல்லக் கேட்டு எனக்கு ஏற்ப்பட்ட அதிர்ச்சியை வார்த்தைகளால் வடிக்க இயலாது. பரிதாபத்திற்குரிய அப்பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுதையும், அடுத்தவர் கழித்துப் போட்ட மலத்தை தங்களின் கைகளால் அள்ளி சுத்தம் செய்வதிலும் அள்ளிய மலத்தை தொலைவுக்கு தலையில் தூக்கி சுமந்து கொண்டு செல்வதிலுமேயே கழிக்க வேண்டியதாகி விட்டது. ஆனால் இந்த கொடூர வழக்கமானது இச்சமுதாய மக்களிடம் பொதுவாக எவ்வித அசவுகரியத்தையும் ஏற்ப்படுத்தவில்லை என்பதை அறிந்து நொந்தேன்; கோபமும் கொண்டேன்.
– பாஷாசிங்

பாஷாசிங் எழுதிய ” தவிர்க்கப்பட்டவர்கள் : இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள் ” என்ற புத்தகம் படிக்கத் துவங்கியுள்ளேன். பாஷாசிங் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து தவிர்க்கப் பட்டவர்களுடன் பேசி, புகைப்படம் எடுத்து ஆவணங்களை திரட்டி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் OUTLOOK இந்தி பதிப்பு செய்தியாளர். பெண். தலித் அல்லாதவர். பத்து வருட உழைப்பு.

நன்றி : ரஸ்கல்நிகோவ் 
black & white புகைப்படங்கள் நன்றி

https://www.facebook.com/yogendrakumar.swaminathan?fref=nf&pnref=story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *