சுவிசில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பெண்

 தகவல் சண் தவராஜா

tharshika 1புலம்பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறை தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும்  நிலையில் அந்தந்த நாட்டின் உள்ளூர் அரசியலிலும் பிரவேசித்து வருகின்றனர். சுவிற்சர்லாந்து நாட்டின் பேர்ண் மாநிலத்தில் உள்ள தூண் நகர நகராட்சித் தேர்தலில் இளம் தமிழ்ப் பெண் தர்சிக்கா கிருஸ்ணாணந்தம் (வடிவேலு) சோசலிச ஜனநாயகக் (SP) கட்சியின் வேட்பாளராக  தேர்தலில் போட்டியிடுகின்றார்.இவர் கணக்காளராகப்  பட்டம் பெற்றதுடன் தர்சிக்கா ஒரு தொழில்முறை மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கி வருகின்றார். 

tharshika 2

நவம்பர் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள சுவிஸின் தூண் நகரசபைக்கான தேர்தலில்  40 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இவர் சார்ந்த சோசலிசக் கட்சி சார்பில் கடந்த தேர்தலில் 8 உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தனர். இந்தத் தேர்தலில் சுவிஸ் பிரஜா உரிமை பெற்றவர்களும் ‘சீ”  வதிவிட உரிமை பெற்றவர்களும் வாக்களிக்க முடியும். எனவே, இந்த நகரப் பிரதேசத்தில் வாழும் நூற்றுக் கணக்கான தமிழர்கள் ஏகோபித்த ரீதியில் ஒற்றுமையாக தர்சிக்காவிற்கு வாக்களிக்க  வேண்டும் என அம் மாநகர தமிழ் மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *