ISISக்கு எதிராக “#NotInMyName” என முஸ்லிம் இளைஞர்கள் பிரச்சாரம் -வீடியோ இணைப்பு

 தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்)

 ஏற்கனவே தாம் பிடித்து வைத்திருந்த சர்வதேச பிணைக் கைதிகளை சிரச் சேதம் செய்து அவை தொடர்பான வீடியோக்களை யூ டியூப்பிலும்  டுவிட்டர் மூலம் தொடர்ந்து அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளுக்கு அச்சறுத்தலை  ISIS விடுத்து வருகின்றது

இதனையடுத்து இணையத் தளம் மூலமாகவே ISIS இயக்கத்தின் வன்முறையுடன் கூடிய கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் விதத்தில் உலகம் முழுதும் வசிக்கும் முஸ்லிம்கள் டுவிட்டரில் #NotInMyName என்ற இணைய மற்றும் யூ டியூப்ப மூலம் தமது கருத்துக்களைப் பகிர்ந்து ISIS இன் நடவடிக்கைகளை எதிர்க்குவும்,விமர்சிக்கவும் இளைஞர்கள் உட்பட பலர்  ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதில் முக்கியமாக ISIS இயக்கம் தமது மதமான இஸ்லாமைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்பதில் ஒரே கருத்துடன் உறுதியான மனப்பான்மையுடன் முஸ்லிம் இளைஞர்கள் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#NotInMyName பிரச்சாரத்தை செப்டம்பர் 10 ஆம் திகதி லண்டனை மையமாகக் கொண்ட ஆக்டிவ் சேஞ்ஜ் அறக்கட்டளை (Active Change foundation)) இனால் தொடங்கப் பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் ஸ்தாபகரான ஹனிஃப் காதிர் Mirror பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கையில் ‘ISIS  யினர்உண்மையான முஸ்லிம்கள் அல்ல! அவர்கள் ஒருபோதும் இஸ்லாமின் உண்மையான போதனைகளான சமாதானம், இரக்கம் ,மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவதில்லை.’ என்றும் தெரிவித்திருந்தார். #NotInMyName பிரச்சாரம் கடந்த ஒரு வாரத்தில்  65 000 இற்கும் அதிகமானோரை உள்வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *