பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சி தொடர்பான கருத்துரை –

நிர்மலா கொற்றவை

ஊடறு.காம் பகிர்ந்திருந்த “பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. ’இன்றைய’ தலைமுறைப் பெண்களின் (மேட்டுக்குடி பெண்கள்) சமூகப் புரிதலை, பாலினப் புரிதலை அவர்கள் வாயாலேயே எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக அது இருந்தது. அப்பெண்களின் புரிதலின்மை நமக்கு சற்று வருத்தத்தையும், எரிச்சலையும் அயர்ச்சியையும் கொடுத்தாலும், உண்மையில் புறச் சூழலின் தாக்கம் அல்லது ஆளும் வர்க்க கருத்தியல் எவ்வாறு மனங்களை ஊடுறுவி, ‘அடிமை’ கருத்தியலை எவ்வாறு நிலைத்திருக்கச் செய்கிறது என்பதை கருத்தில் கொண்டு, குட்டி ரேவதி சொன்னதுபோல் நாம் அவர்களுக்காகப் ‘பரிதாபப்ப்ட’ வேண்டியுள்ளது.


பெண்ணியவாதிகள் என்றாலே அவர்கள் இருக்கும் ஒரு ‘அமைப்பை’ குலைப்பதற்காகப் பேசுபவர்கள், ஆண் வெறுப்பாளர்கள் (ஓரினச் சேர்க்கையாளர்கள்), பெண் ஆதிக்கம் என்ற ஒரு பொதுப் புரிதலில் இருந்து அப்பெண்கள் பேசினார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நமக்கு பரிச்சயமான தோழர்கள் அனைவரும் சரியாக, பொறுமையாக பதில் அளித்திருந்தார்கள். பல இடங்களில் அவர்களின் பதில்கள் கூர்மையாகவே இருந்தது. அவ்விவாதம் தொடர்பான எனது கருத்துரை பின்வருமாறு:

பெண்ணியம் வேண்டாம் எனும் பக்கம், வைக்கப்பட்ட பதில்கள், கேள்விகள்:

1. சமரசம் இன்பமளிப்பது, ஆகவே எங்கள் வீடுகளில் ஒருவருக்கொருவர் நாங்கள் விருப்பு வெறுப்புகளைப் பேசி சமரசம் செய்து கொள்வோம். வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுப்போம். அது எங்களக்கு போதுமானது.

2. எங்கள் வீட்டில் என் அம்மாவின் ‘கை ஓங்கியிருக்கும்’, சித்தியின் ‘கை ஓங்கியிருக்கும்’ஞ் சம்பளத்தை அப்படியே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார்கள்ஞ்.

3. பெண்களை ஏன் ஏதோ பலவீனமானவர்களாக சித்தரிக்கிறீர்கள்? அவர்களை ஏன் எப்போதும் பாதிக்கப்பட்டவர்போல் சித்தரிக்கிறீர்கள்?

4. நான் இராணுவத்தில் சேர்ந்துள்ளேன். அங்கு ஆண்களுக்கு நிகராக எனக்கும் இடம் கிடைத்திருக்கிறதே.

5. போஸ்ட் ஃபெமினிசம் – வேண்டிய உரிமைகளை பெற்ற பின்னர் – போதும் என்ற மனதோடு ‘ஒதுங்கிக் கொள்ள வேண்டும்’

6. என் கணவருக்காக நான் முழித்திருப்பது, காத்திருப்பது, சோறு ஊட்டுவது, சேவை செய்வது இவையெல்லாம் எனக்கு மகிழ்வைத் தருகிறது. அவரும் எனக்கு முடியாதபோது காலையில் எழுந்து பாத்திரம் துலக்குவார்ஞ்.

7. சொடக்கு போட்டு கூப்பிட்டால் எனக்கு கோபம் வரும்ஞ்

8. எனக்கு டென்ஷ்ன் வேண்டாம், இருக்கும் இந்த நிலைமையே நிறைவாக இருக்கிறது. ரெவெல்யூஷனெல்லாம் வேனாம்ஞ்பெண்ணியம் பேசி அதை என் சந்தோஷத்தை குலைக்க விரும்பவில்லை.

9. கல்வி, மாப்பிள்ளை தேர்ந்தெடுக்கும் உரிமை எங்களுக்கிருக்கிறது.

10. குழந்தைப் பெற்றுக்கொள்ளும் முடிவை / மறுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்று இவர்கள் பேசுகிறார்கள்ஞ்.

11. பெண்கள் உடலியல் / உயிரியல் பூர்வமாக பலவீனமானவர்கள்ஞ்..சிலவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்ஞ்இரவில் வெளியே போகக்கூடாது

உண்மையில், ஒரு மூன்று வருடத்திற்கும் முன்னர் நானும் அப்பெண்களில் ஒருவளாகவே இருந்தேன் எனும் குறிப்போடு எனது கருத்துரையை நான் முன்வைக்கிறேன்.

அன்புத் தோழிகளே,

உங்களது பேச்சுக்களில் பெண் விடுதலை என்பதை முழுக்க முழுக்க ஒரு குடும்பம் எனும் அமைப்பிற்குள் சுருக்கி, அதனோடு தொடர்புடைய சில உறவு பரிமாற்றங்கள் சார்ந்த பிரச்சினைகளையும், அதில் கிடைக்கும் அல்லது மறுக்கப்படும் உரிமைகளை மட்டுமே கணக்கில் கொண்டு பேசியது வருத்தம் தரக்கூடிய விசயமாக இருக்கிறது. ஒருவேளை நிகழ்ச்சி தயாரிப்பாளர் ‘கருவை’ அங்கணம் வடிவமைத்தாரா என்பது தெரியவில்லை.

பெண்களுக்கான பிரச்சினை என்பதில் வெறும் குடும்பப் பிரச்சினை மட்டுமே விவாதிக்கப்படுவதிலிருந்தே உங்களுக்கு விளங்கவில்லையா இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்னவென்று?

மேலும் பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்திப் போராடுவதற்கு ஒரு இயக்கம் (பெண்ணியம் என்பது ஒரு சமூக ஒருங்கிணைப்புக்கான இயக்கச் செயல்பாடு) தேவையா இல்லையா என்பது ஒரு விவாதப் பொருளாக இருப்பதிலும், ஆண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி போராடுவது தேவையா இல்லையா என்று விவாதிக்கும் ஒரு நிலைமை இல்லாதிருப்பதிலிருந்தும் உங்களுக்கு ஏதும் கேள்விகள் எழவில்லையா? – மனித உரிமை என்ற ஒரு பொதுச் சொல் நிலவுகிறது அதில் – ஆண், பெண், குழந்தை, மாற்று பாலினம் ஆகிய அனைவருக்கும் போராடுதல் என்று பொருள்படுகிறது. ஆண்கள் சமூக வன்முறைக்குள்ளானாலோ அல்லது குடும்ப வன்முறைக்கு உள்ளானாலோ அது மனித உரிமையின் கீழ் வர, பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கு ஏன் பாலின அடையாளம் கொடுக்கப்படுகிறது? பெண்கள் மனிதர்கள் இல்லையா? அல்லது பெண் என்பதினாலேயே (பாலின அடிப்படையில்) அவள் ’கூடுதலான’ ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறாளா எனும் கேள்வியே உங்களுக்கு எழாதிருப்பதேன்?

சொல்லப்போனால், பெண்ணியம் என்றால் பெண்களுக்கு மட்டுமான போராட்டம், பெண்கள் போராட்டமெல்லாம் பெண்ணியம் என்பதும் ஒரு தட்டையான பார்வை. பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி எத்தனையோ ஆண்களும் போராடியிருக்கிறார்கள். பெண்கள் ஆதிக்கம் செலுத்த விரும்பும், சொல்லப்போனால் ஆண்களுக்கு அனுகூலமாக இருக்கும் குடும்ப அமைப்பை குலைக்கும் எண்ணத்தோடு முன்னெடுக்கப்படும் ஒரு போராட்டத்தை ஆண்கள் ஏன் ஆதிக்கிறார்கள் என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா?

குறிப்பிட்ட சாரார் எந்த அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்களோ, அந்த அடிப்படையை மறுத்தலித்து, அந்தக் குறிப்பிட்ட கூட்டத்தினரை ஒருங்கிணைக்க, இயக்கமாகச் செயல்பட அழைப்பு விடுப்பது, உரிமைகளை வலியுறுத்துவதும், ஒடுக்கப்பட்ட பிரிவின் கண்ணோட்டத்திலிருந்து சமூகத்தை (நிலைமைகளை) ஆய்வு செய்வது, மறுக்கப்படும் உரிமைகளை எடுத்துரைப்பது, அவ்வுரிமைகள் வேண்டி போராடுவது என்று வரும்பொழுது, அக்கூட்டத்தினர் ஒரு ’அடையாளத்தை’ முன்வைப்பதென்பது ஒரு தவிர்க்கவியலாத தேவை. தங்களுக்கான கோட்பாடுகளை வகுத்து – சமூகத்தோடு உரையாடுவதற்கு, ஒருங்கிணைப்பதற்கு, வழிகாட்டுவதற்கு, போராடுவதற்கு அப்படி ஒரு ’அடையாளம்’ அவசியமாகிறது.

அப்படித்தான் பாலின அடிப்படையில் ஒடுக்கப்படுபவர்கள் ‘பெண்ணியம்’ எனும் ஒரு கோட்பாட்டு வடிவத்தை உருவாக்கினார்கள். பெண்கள் களத்தில் இறங்கி தமது உரிமைகளை வலியுறுத்தி போராடவும் தொடங்கினர். சாதிய ரீதியில் ஒடுக்கப்படும் மக்கள் ‘தலித்’ எனும் ஒரு அடையாளத்தின் கீழ் போராடுகின்றனர். இது போல் மாற்று பாலினத்தவர், குழந்தைகள், மதம் – அதன் உட்பிரிவு, இனம், மொழி, நிறம், நாடு, பிரதேசம், வட்டாரம், ஏழை, பணக்காரன் (தொழிலாளி, முதலாளி) இப்படியாக பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவும் தமக்கென ஒரு அடையாளத்தை வகுத்துக்கொண்டு தம்மைப்போல் ஒடுக்கப்படும் மக்களை ஒருங்கிணைத்து (அல்லது ஒருங்கிணைக்க) போராட்டங்களை தொடுத்துக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் எத்தனை பிரிவுகள் நிலவினாலும், வர்க்க பார்வையோடு சமூகத்தை அனுகுபவர்கள், அடிப்படையில் தொழிலாளி, முதலாளி என்று இரண்டு வர்க்கமே நிலவுகிறது. சமூகத்தில் அடிக்கட்டுமானம், மேல்கட்டுமானம் என்று இரண்டு கட்டுமானங்கள் நிலவுகிறது. பொருளாதாரம் எனும் அடிக்கட்டுமானம் – அதன் செயல்பாடுகள், அதன் தாக்கங்கள் என்று அனுகுவர். அதை நாம் ஒரு தனிக்கட்டுரையாகப் பார்ப்போம்.

அடிப்படையில் அனைத்தும் வர்க்கப் பகைமைகளே (நீறீணீss நீஷீஸீயீறீவீநீts) ஆயினும் நிலவும் பிரிவினைகள், ஒடுக்குமுறைகளுக்கேற்ப போராடும் பிரிவுகள், அமைப்புகள், கூட்டங்கள் தமக்கென ஒரு ’அடையாளத்தை’ முன்வைத்து தம்மைப் போன்றோரை ஒருங்கினைக்க முற்படுகிறது. இதன்படி, பாலின அடிப்படையில் ஒடுக்கப்படும் பிரிவினரை ஒருங்கினைக்க சமூக ஆய்வுமுறையோடு செயல்படுவோர், அழைப்புவிடுப்போர் பெண்ணியவாதிகள். இது ஒரு குற்றச் செயல்பாடா?

நிதர்சனம் இதுவாக இருக்க, பெண்ணியம் என்ற சொல்லைக் கேட்டு ஏன் இத்தனை அச்சம்? (பெண்ணியவாதிகள் = வேசிகள் என்று ஆணாதிக்க சமூகத்தின் பெரும்பான்மை சொல்வதாலா?)

பெண்ணியம் பேசுபவர்கள் வெறும் குடும்ப உறவுகளை மட்டுமா மையப்படுத்தி போராடுகிறார்கள். பெண்களை ஒடுக்குவதில் குடும்பம் என்பதே பிரதான ஒடுக்குமுறை அமைப்பு என்பதில் மாற்று கருத்தில்லை, எனினும் பெண்ணியவாதிகளின் செயல்பாடு குடும்ப அமைப்பை சீராக்குவதில் (உங்கள் சொற்களில் குலைப்பதில்) மட்டுமே சுருங்கிவிடுகிறதா? சமூகத்தில் நிலவும் எத்தனை அநீதிகளுக்கெதிராக, ஏற்றத்தாழ்வுகளுக்கெதிராக, உரிமை மறுப்புக்கெதிராக பெண்கள் (பெண்ணியவாதிகள்) போராடிவருகிறார்கள். அதுபற்றி உங்களுக்கேதும் கருத்திருக்கிறதா?

இரண்டு வயது சிறுமி வன்புணர்வு செய்யப்படும் சூழல், பொது வெளியில் ஒரு பெண் தனியாகவும் சரி, துணையோடும் சரி பாதிகாப்பாக சென்று வரவியலாத ஒரு சூழல், 33% இடஒதுக்கீடு அப்படியே கிடப்பில் கிடக்கிறது, குடித்துவிட்டு கணவன்மார்கள் பெண்டாட்டிகளை அடித்துப் போடுகிறார்கள், இன்னும் கூட பல வீடுகளில் அதிகாலை எழுந்து வாசல் கூட்டி, கோலம் போடும், ஃபில்டர் காபி போடும் வேலை பெண்களுக்கான துறையே, ஒருபக்கம் இப்படி இருக்க, பெண்களின் உடலை ஒரு நுகர்வுப் பண்டமாக்கும் வணிகம் – ஊடகம் (சினிமா உட்பட), பாலியல் தொழில் (பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுதல், காதலிக்க மறுத்தால் ஆசிட் வீச்சு, தலித் இளைஞரை காதலித்து மணந்தால் நேரும் விபரீதம் என்று எண்ணிலடங்கா பிரச்சினைகள் இருக்க – போஸ்ட் ஃபெமினிசம் பேசி, எல்லாம்தான் கிடைத்துவிட்டதே இனியும் எதற்கு போராட்டம் என்றொரு கேள்வி உங்களுக்கு எழுவது எனக்கு வியப்பாக இருக்கிறது தோழிகளே.

எம் தோழியர் அங்கு சொன்னதுபோல் இன்று நீங்கள் இந்த நிலையில் இருந்து பேசுகிறீர்கள் என்றால் அதற்காக எண்ணற்ற பெண்கள் போராடியிருக்கிறார்கள், உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்ஞ் உங்கள் ஒரு சிலருக்கு கல்வி மற்றும் பொருளாதாரத்தின் விளைவாக ’சில உரிமைகள்’ கிடைத்துவிட்டது என்பதற்காக ஒட்டுமொத்த பெண் இனமும் விடுதலை பெற்றுவிட்டது என்று சொல்வது அறிவுடைமை ஆகுமா?

1. // சமரசம் இன்பமளிப்பது, ஆகவே எங்கள் வீடுகளில் ஒருவருக்கொருவர் நாங்கள் விருப்பு வெறுப்புகளைப் பேசி சமரசம் செய்து கொள்வோம். வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுப்போம். அது எங்களக்கு போதுமானது.//

– தோழிகளே உங்களுக்கு சமரசம் இன்பமளிக்கிறது. எனக்கு இன்பமளிக்கவில்லை. இப்போது நான் போராடலாமா? கூடாதா? என்னைப்போல் சமரசம் செய்ய விரும்பாத பெண்களுக்காக நான் குரல் கொடுக்கலாமா கூடாதா? அடிமைக்குக் கூட எஜமானன் வேளா வேளைக்கு சோறு போடுகிறான், சம்பளம் கொடுக்கிறான் – மெடிக்கிளைம், பி.எஃப் எல்லாம் உண்டுஞ்.. (அதற்கும் எத்தனைப் போராட்டங்கள், உயிரழப்புகள்ஞ்தெரியுமா) கொடுக்கும் நிலையில் நீயும், பெறும் நிலையில் நானும் ஏன் இருக்கிறோம்? எனும் கேள்வி எழலாமா கூடாதா? முதலில் சமரசம் என்ற சொல்லே கொச்சையானதாகத் தோன்றவில்லையா? சுயத்தோடு வாழ எதற்காக நாம் ஒருவரோடு சமரசம் செய்ய வேண்டும்ஞ் அந்நிலையில் இருப்பதே அடிமைத்தனம் இல்லையா? நீங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறீர்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினால் எஜமானன் அச்சப்படுவதில் பொருள் இருக்கிறது, ஆனால் இங்கு அடிமைகள் அச்சம் கொள்கிறார்களேஞ். இதற்குப் பெயர்தான் மூளை சலவை.

//எங்கள் வீட்டில் என் அம்மாவின் ‘கை ஓங்கியிருக்கும்’, சித்தியின் ‘கை ஓங்கியிருக்கும்’ஞ் சம்பளத்தை அப்படியே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார்கள்ஞ்.//

இக்கேள்விக்கு நம் தோழர்கள் சரியான பதில் அளித்தார்கள். கூடுதலாக, அப்படி ஒருவர் கை ஓங்கி இருந்தால் அது ஆணாயினும், பெண்ணாயினும் – தவறே – பெண்ணியவாதிகள் (பொதுவுடைமைவாதிகள்) வேண்டுவது சமத்துவமே அன்றி ஆதிக்கமில்லை. பெண்களின் கை ஓங்கி இருந்தால், மீண்டும் ஆண்களுக்காகப் போராடுவதும் நமது கடமை என்று உணர்ந்தவர்களே பெண்ணியவாதிகள்.

இருப்பினும், உங்களது கேள்வியில், குற்றச்சாட்டில் பொருளிருக்கிறது. ஏனென்றால் ஒரு பிரிவினர் அப்படி விரும்பிகிறார்கள், ஆனால் அவர்கள் பெண்ணியவாதிகள் அல்ல. மடை திறந்து விடப்படும் வெள்ளம் எத்திசையில் பாய்கிறது என்பது சொல்ல முடியாததுபோல், ஒடுக்கப்படும் ஒவ்வொரு பிரிவினரும், தமக்கான விடுதலையாக ஒவ்வொன்றை கண்டடைகின்றனர். அப்படி ஒரு பிரிவு ஆண் வெறுப்பு, ஆணை விட பெண் மேலானவள் எனும் ஒரு நிலைப்பாட்டை கையிலெடுக்கின்றனர். (இதுபோன்ற தவறுகள் அனைத்து போராட்டங்களிலும் காண முடியும்) அதைத் தீவிரவாதப் பெண்ணியம் என்று அழைக்கின்றனர். இதை நாம் ஆதரிக்க முடியாது எனினும், அவர்களை அந்த எல்லைக்குத் தள்ளிய சமூகக் காரணிகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அப்படிப்பட்ட வழிமுறைகளை நாம் விமர்சிக்கலாமே ஒழிய, பெண்ணியம் என்பதே அதுதான் என்று முத்திரை குத்துவது அறிவுடையச் செயலாகாது. அதுவும் ஒருவகையில் ஆணாதிக்க மனோபாவமே.

// பெண்களை ஏன் ஏதோ பலவீனமானவர்களாக சித்தரிக்கிறீர்கள்? அவர்களை ஏன் எப்போதும் பாதிக்கப்பட்டவர்போல் சித்தரிக்கிறீர்கள்? //

சகோதரிகளே, நாங்கள் அப்படிச் சொல்லவில்லையம்மா. மத நூல்கள்தான் பெண்களை பலவீனமானவர்கள், பாவத்தின் மூட்டை, நரகத்திற்கு செல்லவேண்டியவர்கள், அழகைக் காட்டி மயக்குபவர்கள், சூனியக்காரிகள் என்று சொல்கிறதுஞ் சந்தேகம் இருந்தால் மத நூல்களை எடுத்துப் பார்க்கவும். அப்படி பிறப்பின் அடிப்படையில் பலவீனமானவர்கள் என்று சொன்னதை மறுப்பவர்களே நாங்கள். பலம், பலவீனம் என்பதெல்லாம் வெறும் கற்பிதமே. அது அது அதன் தன்மையில் இருக்கிறது, அதற்குப் பெயர் வைப்பது, அதற்கு குணாதிசயங்களை வடிவமைப்பது மனித குணம். அப்படிப்பட்ட குணமானது சமூகத்தின் ஆளும் வர்க்க கருத்தியலால் கட்டமைக்கப்படுகிறது (sஷீநீவீணீறீ நீஷீஸீstக்ஷீuநீtவீஷீஸீ தீஹ் tலீமீ க்ஷீuறீவீஸீரீ நீறீணீss) . அதை நாம் ஒவ்வொருவரும் அப்படியே உள்வாங்கிக் கொள்கிறோம். வெகு சிலர் அந்த உண்மையை புரிந்து கொண்டு கலகம் செய்கின்றனர். மற்றவர் அதைக் கண்டு அஞ்சுகின்றனர். உண்மையில் அந்த அச்சமும் கட்டமைக்கப்படும் ஒன்றே.

// நான் இராணுவத்தில் சேர்ந்துள்ளேன். அங்கு ஆண்களுக்கு நிகராக எனக்கும் இடம் கிடைத்திருக்கிறதே.//

வாழ்த்துக்கள் தோழி. இராணுவத்தில் பெண் அதிகாரிகள் எத்தகைய பாலியல் துன்புறுத்தலுக்காளாகிறார்கள்? இராணுவத்தினர் வன்புணர்வு செய்த பெண்களின் எண்ணிக்கை தெரியுமா உங்களுக்கு? இராணுவத்தில் இடம் கிடைக்கிறதா அல்லது அடுக்களையில் இடம் கிடைக்கிறதா என்பதல்ல இங்கு பிரச்சினை, எங்கு இடம் கிடைத்தாலும் ’பெண்’ எனும் அடிப்படையில் அவளின் இடம் என்ன? எல்லை என்ன? வரையறை என்ன என்பதே பிரச்சினை.

பெரும்பாலான தொழில்களில் ஆணுக்கு என்ன கூலி, பெண்ணுக்கு என்ன கூலி வழங்கப்படுகிறது என்று சற்று ஆய்ந்து பார்க்கலாமே?

// என் கணவருக்காக நான் முழித்திருப்பது, காத்திருப்பது, சோறு ஊட்டுவது, சேவை செய்வது இவையெல்லாம் எனக்கு மகிழ்வைத் தருகிறது. அவரும் எனக்கு முடியாதபோது காலையில் எழுந்து பாத்திரம் துலக்குவார்ஞ். சொடக்கு போட்டு கூப்பிட்டால் எனக்கு கோபம் வரும்ஞ்//

தோழி, அன்பின் அடிப்படையில் நீங்கள் இதைச் செய்வதும் உங்கள் கணவர் ஒன்றைச் செய்வதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதே. ஆனால் மனைவியாக இருப்பவள் பின் தூங்கி முன் எழ வேண்டும் என்று ஒரு விதியை எழுதி வைத்திருக்கிறார்களே அதுதான் எங்களைப் போன்றோருக்கு பிரச்சினை. ஒவியா அழகாக பதில் சொன்னார் இரு தரப்பும் ஒரே மாதிரி அன்பைப் பரிமாரிக் கொண்டால் மகிழ்ச்சி. அதை வேண்டித்தான் நாங்கள் போராடுகிறோம் என்றுஞ் இப்போது சொல்லுங்கள் இதே மகிழ்ச்சி மற்ற பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று போராடும் பெண்ணியம் உங்களுக்கு தேவையற்றதா?

சமூகத்தில் ஆண் பெண் என்பதற்கு வகுக்கப்பட்டிருக்கும் குணாதிசயங்கள், கடைமைகள், பொறுப்புகள் இவற்றை பட்டியலிட்டு, அதில் ஏதும் பாகுபாடு நிலவுகிறதா இல்லையா என்று உங்களுக்கு நீங்களே கேள்வி எழுப்புங்கள்.

சொடக்கு போட்டு கூப்பிட்டால் உங்களுக்கு கோபம் வருகிறது, அதை நீங்கள் எதிர்க்கிறீர்கள்… உங்கள் வரையில் எதிர்க்கிறீர்கள்… மகிழ்ச்சி…. பெண்களை அப்படி சொடக்கு போட்டு அழைக்கும் பொது வெளியில் பெண்ணியவாதிகள் மற்றவர்களுக்காகவும் போராடுகிறார்கள்…. அவ்வளவுதான்…

//எனக்கு டென்ஷ்ன் வேண்டாம், இருக்கும் இந்த நிலைமையே நிறைவாக இருக்கிறது. ரெவெல்யூஷனெல்லாம் வேனாம்ஞ்பெண்ணியம் பேசி அதை என் சந்தோஷத்தை குலைக்க விரும்பவில்லை.//

இந்த சுயநலத்தைவிட பெண்ணியம் ஒன்றும் ஆபத்தானதில்லை தோழியே. அண்டை வீட்டில் ஒரு கணவன் தன் மனைவியை போட்டு அடித்துக் கொன்றாலும் எட்டிப்பார்க்காத ஒரு ‘அடக்கம்’ எங்களுக்கு வாய்க்காது. அதில் தலையிட்டால் போலீஸ் ஸ்டேஷன் போகணும்ஞ்.இருந்தாலும் பரவாயில்லை என்று பெண்ணியவாதிகள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல் குடும்ப உறவில் நிலவும் ஏற்றத்தாழ்வு மட்டுமன்றி, பல்வேறு மட்டங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் பெண்ணியவாதிகள் குரல் கொடுக்கின்றனர் – வன்புணர்வு, குடும்ப வன்முறை, சம கூலி, சொத்துரிமை, (சவுதியில் கார் ஓட்டும் உரிமை வேண்டி), கருத்துச் சுதந்திரம் (தஸ்லிமா நஸ்ரின்), கூடங்குளம் அனு உலைக்கு எதிராக, தமிழ் தேசிய விடுதலை, திருமண உரிமை, அரசியல் உரிமை, வாழும் உரிமை (பெண் குழந்தை கருவிலேயே அழிப்பதற்கு எதிராக) இத்யாதி, இத்யாதிகளுக்கு எதிராகவெல்லாம் பெண்ணியவாதிகள் போராடுகின்றனர் – லத்தி சார்ஜ் வாங்கனும், சில வேளைகளில் ஜெயிலுக்குகூட போகனும் – இதுபோன்ற ‘ஆபத்துகள்’ தெரிந்தாலும் பெண்ணியவாதிகள் ஏன் தெருவில் இறங்கி போராடுகிறார்கள் – யோசித்திருக்கிறீர்களா?

// குழந்தைப் பெற்றுக்கொள்ளும் முடிவை / மறுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்று இவர்கள் பேசுகிறார்கள்ஞ்.//

ஆம் அந்த உரிமையை வலியுறுத்துகிறோம். அதன் பின்னணியை ஓவியா அவர்கள் அழகாக விளக்கினார். அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பாக தற்போது நிலவும் குடும்ப அமைப்பு இருக்கிறது. குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றத்தை ஒருவர் அறிந்து கொண்டால் மட்டுமே பெண்கள் ஏன் அந்த உரிமையை மனதில் கொள்ள வேண்டும் என்பது புரியும். வெறும் பிள்ளை பெரும் இயந்திரமாக பெண் கொடுமைப்படுத்தப்படுவதிலிருந்து அவளை விடுவிக்க இது அவசியமாகிறது. ‘பெண்மை’ எனும் கருத்தியலின் ஆளுகைக்கு உட்பட்டு பெண்கள் எத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் பெண்கள் விலக்கு செய்யப்பட்டு ஆண் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான் (பல வேளைகளில் பெண் குடும்பத்தாருக்கு தெரியாமல்)ஞ். ஆண்மை குறைபாடு காரணமாகப் பெண்களும் இப்போது ஆண்களை விவாகரத்து செய்யும் சூழல் உருவாகி இருக்கிறது.. .. ஆண் பெண் உறவு எதற்கு வெறும் குழந்தை பெறுவதற்கு மட்டுமா? சிந்திக்க வேண்டாமா? அப்படியென்றால் ஓரினச் சேர்க்கையாளர்களின் காதலுக்கு எது அடிப்படையாக இருக்கும்? அவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள். குடும்ப அமைப்பில் பங்கெடுக்கிறார்கள்ஞ்??

கால் பிடித்துவிடுவது, சோறு ஊட்டி விடுவது, நகை நட்டு வாங்கிக் கொடுப்பது, கணவனும் அவ்வப்போது பாத்திரம் துலக்குவது இவ்வளவுதானா பெண்ணின் தேவைகள்? தோழியே, உன் கணவன் வீட்டிற்கு வரும்போது, அவரைக் கண்டுகொள்ளாமல், விழுந்தடித்து சேவை செய்யாமல்ஞ் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால் தெரியும் ‘அன்பு’ எப்படிச் செயல்படுகிறது என்றுஞ். (குறிப்பாக பெரியாரின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால் தெரிந்துவிடும்)ஞ் ஆனால் ஆண் ஒருவன் அப்படி கண்டுகொள்ளாமல் போனால், அதை ஏற்றுக்கொள்ளும் சமாதானமே நிலவும், அதாவது பாவம் வெளில போய் வேலை செஞ்சிட்டு களைப்பா வராருஞ்.ஆம்பிளைன்னா அப்படித்தான் இருப்பான்ஞ் பொம்மனாட்டின்னா அனுசரிச்சுன்னா போகனும்ஞ்..

// பெண்கள் உடலியல் / உயிரியல் பூர்வமாக பலவீனமானவர்கள்ஞ்..சிலவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்ஞ்இரவில் வெளியே போகக்கூடாது//

இப்படி ஒரு பெண்ணைச் சொல்ல வைத்ததுதான் ஆணாதிக்கத்தின் வெற்றி. பலம் என்றால் என்ன பலவீனம் என்றால் என்ன? ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. அது அதன் தன்மைக்கேற்ப செயல்படுகிறது. சில (பல) வேளைகளில் குணாதிசயங்களும் புறச்சூழலின் காரணமாக கட்டமைக்கப்படுகிறது. பலம் பலவீனம் என்பது எல்லாம் மனிதன் கண்டுபிடித்த ஒரு கற்பிதம். மிts ழீust ணீ னீஹ்tலீ.

’பலமாக’ இருப்பதாலேயே ஒருவருக்கு ஒடுக்கும் அதிகாரம் வந்துவிடுமா? ’பலவீனமாக’ இருப்பதால் ஒடுக்குமுறையை விதி என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா?. ’பலவீனமாக இருந்தாலும்’ எவருக்கும் ஒடுக்கும் உரிமை கிடையாது, பலம் என்பதை முன்னிறுத்தி, அடுத்தவருக்காக தீர்மானிக்கும் உரிமையும் எவருக்கும் கிடையாது.

”இருட்டில் வெளியே போகக்கூடாது என்று சொல்வார்கல் இல்லையா” – ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் அந்தச் சூழலுக்காக சொல்லப்பட்டிருக்கும். அது இயற்கையான ஆபத்துகளுக்கெதிரான பாதுகாப்பு நடவடிக்கை என்றால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருக்கும். ஆனால் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆபத்து என்றால், அது ஒரு சிலருக்கு மட்டுமே கட்டுப்பாட்டை விதிக்கும். அப்படித்தான், ஆண்கள் தம் அதிகாரத்திற்காக ‘வெளியை’ ஆக்கிரமித்து, பெண்களை ஒடுக்குவதற்காக அவர்களுக்குப் பல்வேறு முத்திரைகளைக் குத்தி, அடக்கி வைத்தனர். பல்வேறு காரனங்களால் இப்போது அந்த வெளி சீர்கெட்டு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு சூழலை உருவாக்கி விட்டதுஞ் ஆனால் உற்று நோக்கினால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்குவது ஆண்களேஞ். ஆனால் ஒருபோதும் அறிவுள்ள, சமூக அக்கறை உள்ள பெண்ணியவாதிகள் அதற்கு ஆண்களைக் குற்றம் சாட்டுவதில்லை, ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியலைத்தான் அவர்கள் சாடுகிறார்கள்ஞ். பெண்ணியவாதிகள் ஆண்களுக்காகவும், அந்த ஆண்களின் குழந்தைகளுக்காகவும் சேர்ந்துத்தான் போராடுகிறார்கள்.

2 Comments on “பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சி தொடர்பான கருத்துரை –”

  1. இந்த கட்டுரையில் இருப்பதுபோல:
    ஒவவொரு முறையும் நீங்கள் வேறு எழுத்துருவிலிருந்து யூனிக்கோட்டிற்கு மாற்றுகிறபோது மாறிவிடுகிற ஆங்கில சொற்களை ஆங்கிலத்திலும் கொமா (,) வரவேண்டிய இடத்தில் வருகிற ‘இ’-க்களையும் அகற்றி edit பண்ணி விட்டு போட்டால் வாசிப்பவர்களுக்கு பயனளிக்கும். பழைய கட்டுரைகளிலும் இதே பிரச்சினைகள் காணக் கிடைக்கிறது.
    கட்டுரைகளை யூனிக்கோட்டிற்கு மாற்றிய பிறகு ஒரு முறை வாசித்துவிட்டு போட்டீர்கள் என்றால் வாசகர்களது வாசிப்பில் ஏற்படுகிஙற தடங்கல்கள் புரியுது. நன்றி.

    கட்டுரைகளை மாற்றுகிறபோது ஆங்கில-கொமாப் பிரச்சினைகளுக்கு இது நல்ல தளம்: http://www.islamkalvi.com/web/invertedcomma_correction.htm

  2. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோபிநாத்தின்“நீயா நானா” நிகழ்ச்சியில் “பெண்ணிய வாதிகள் மற்றும் தற்காலப் பெண்கள்” பற்றிய அந்த விவாதம் குறித்த எனது பதிவையும் பார்க்க வேண்டுகிறேன். நாம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது தோழியரே! – எனது பதிவு இணைப்பிற்குச் செல்ல – http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post_21.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *