“எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை”

கவிஞர்  ச.விஜயலட்சுமியின் கவியுலகம் குறித்து…கமலாலயன்-

    தமிழ்ப் பெண் கவிஞர்களின் சமகாலச் செல்நெறிகள் தொடர்பாகப் பெரும்பாலும் ஆண்களே வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வந்திருந்த ஒரு சூழல்தமிழலக்கியப் பரப்பில் இருந்தது.  சங்ககாலப் பெண் கவிஞர்கள் ஒரு நாற்பது பேர் என்றால் இடைக்காலத்தில் ஆண்டாள், காரைக்கால் அம்மையார் என ஒருசிலரையே காண முடிகிறது. தொண்ணூறுகள் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரையிலும்கூட நவீன சமகாலப் பெண் கவிஞர்கள் என்றால் விரல்விட்டு எண்ணிவிடுகிற அளவில்தான் வெளிப்பட்டுத் தெரிகின்றனர்.

    இருபத்தியோராம் நூற்றாண்டுஇ இந்த தேக்க நிலையைப் பேரளவில் உடைத்தெறிந்திருக்கிறது எனலாம்.  இன்றைய சமகாலப் பெண் கவிஞர்களின்பட்டியல் ஒன்றைத் தயாரிக்க  முற்படுவோமானால் அதில் தவறாமல் இடம் பெறுபவர்களுள் ஒருவர் ச.விஜயலட்சுமி. 

    ‘பெருவெளிப் பெண்’ என்ற தன் முதல் தொகுப்பையடுத்து இப்போது ‘எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை’கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்  தவிரஇ தனது முன்னோடிகளாகவும்இ சமகாலத்தவராகவும் இருக்கிற பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்து‘பெண்ணெழுத்து – களமும் அரசியலும்’  என்ற கட்டுரைத் தொகுதியையும் சமீபத்தில் தந்துள்ளார்.

   

ஞாபக அலைகளில் கால் நனைப்பதற்கும் நீந்தித் திளைப்பதற்கும் அவற்றோடு இழுபட்டுக் கொண்டு போய் நினைவுப் பெருங்கடலுள் மூழ்கிமுத்தெடுப்பதற்கும் விரும்பாதவார்கள் யார்? விசயலட்சுமியும் இதில் உற்சாகமடையவே செய்கிறார் “ஞாபக அலைகளில் சந்தோசமானவைகளையும்கொண்டாட்டங்களையும் பகிர்ந்து கொள்ள எழுதுவது உண்மையில் உற்சாகமளிக்கவே செய்கிறது “என்பது அவரின் பதிவு”. பக்குவப்படாமலிருக்கும் மனத்தைப்பக்குவப்படுத்தும் முயற்சிகளுள் ஒன்றாகவே கவிதையை இவர் அறிகிறார்.

    மரபிலக்கிங்களிலும் சமகால  நவீன இலக்கியங்களிலும், பிற அயலக மொழிப் படைப்பிலக்கியங்களிலும் தீவிர வாசகராகவும் விசயலட்சுமி இருப்பவர்என்பது இவரின் கட்டுரைகளைப் படிக்கையில் அறியக் கிடைக்கிற செய்தி.  ஆனால் கவிதைகளில் இவரி இந்தப் பின்புலம் வெளிப்படாதவாறுபார்த்துக்கொள்கிறார்;.

    வலிகளை மட்டுமே பேச வேண்டுமெனவும், விருப்பங்களை நிராகரித்தும் விரிகின்ற நிர்ப்பந்தங்கள் எல்லாவற்றையும் மீறி அன்பால் மட்டுமே வாழ்வுசாத்தியப்பட்டிருப்பதாக நம்புகிற கதாபாத்திரங்களின் நிலை குறித்துத்  துயருறும் கவியுள்ளம் இவருடையது. நம்பிக்கைகள் சிதைந்து கொண்டே போகிறகாலத்தில் வாழ்கிறவர்கள் நாம். இந்தச் சிதைவு இறப்பிற்கு இட்டுச் சென்று அதுவரையிலான சந்தோசங்களைப் புதைத்தும் விடுகிறது. பரஸ்பரம் ஒருவர் மீதுமற்றவர் கொண்டிருக்கிற நம்பிக்கைகளை விலக்கிக் கொண்டு விடுகிற கணங்களும் தொடர்கின்றன.  அன்பு  கழுத்தறுபட நேர்கையில் அதன் பலத்தினைவேறு எப்படி எங்கிருந்து பெறமுடியும்? – இவ்வாறுதான் நம்பிக்கைகள் மீதும், அவநம்பிக்கைகள் மீதும் மனிதர்களின் வாழ்க்கைகள் மலையுச்சிமீதுதடுமாறுவதைப் போன்று ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.   கவிஞரின் பார்வையில்இ இன்றைய நவீன வாழ்வின் நெருக்கடிகள் வெவ்வேறு சூழல்களின்  பின்னணியில் பல்வேறு கவிதைகளிலும் பதிவாகியிருக்கின்றன.

    ஆர்ப்பரிப்பதென்னவோ நேசக்கடல்தான்: ஆனால் வெகுமதியாய் அவனளிக்கிற கோபத்தீயில், பொசுங்கிப் பிடிசாம்பலானதைக் கரைக்க முற்படுகையில்இநேசத்தின் பெருந்தீவிரத்துடன் அது  எப்பொழுதும்போல் காற்றில் சிதறிப் பறக்கத் தொடங்கி விடுகிற ஆச்சர்யத்தை ஒரு கவிதை பேசுகிறது. ‘நேசமறப்பதில்லை நெஞ்சம்இ அல்லவா?’

    ‘ஆந்தை உறையும் வீடு’ கவிதை ஒருவகையில் குறும்படம் போல், ஒரு நல்ல – ஆனால் துயரந் தோய்ந்த – சிறுகதையைப்  போல் நம் மனத்திரையில்ஓடிப்பதிகிறது. ‘பொய்யுரைத்தல் எனும் கலை’ கவிதை இதற்கு மாறாக வோறொரு சித்திரத்தைத் தீட்டிக் காட்டுவதாய் அமைகிறது.  மகளும் தாயுமாய் ஒளிந்துவிளையாடும் பொழுதுகளில்இ தாயைக்கண்டுபிடிக்க வேண்டுமென நீண்ட நேரம் தேடித் தவித்து ஓய்ந்த மகள் வீட்டின் சுவர்களில் தாயின் சுவடைக்கூட அறியமுடியாத சோகத்தில் அல்லது கோபத்தில் அம்மாவிற்குச் சூட்டும் புதுப்பெயர் ‘அம்மா நீ ஒரு ஃப்ராடு’? கவிதையின் முற்பகுதி அம்மாவிற்கு வேறுபலவசைமொழிகளையே சமூகம்  பெயர்களாகச் சூட்டுவதைப் பதிவு செய்கிறது.  குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளால் தாய்பெறுகிற சின்னச்சின்னதானஇஇத்தகைய சந்தோஷங்களும் இல்லாமற்போக நேர்ந்தால் அந்த வாழ்க்கையில் ‘லெச்சணம்’ என்னவாக இருக்கும் என்று நம்மைப் பதறச் செய்கிற முரண்இஇதில் இழையோடுகிறது.

    முகத்திற்கு நேராகப் புன்னகைகள் வந்து குவிவதில் யாதொரு குறைவுமில்லை; நமது செயலற்ற பொழுதுகளில் புன்னகையில் ஒடுங்கியிருக்கும்கூராயுதங்கள் நம் முதுகில் இறங்கிப் பதிவதற்கு ஏற்ற தருணங்களுக்காகக் காத்திருக்கின்றன.  அவற்றை எதிர்கொள்ளத் தயங்கி இயலாமையிற் துவண்டுபோவது ஒரு நேரம் என்றால் கடல்கன்னியாயிருந்த அவள் பெருங்கடலாகி ஆர்ப்பரிப்பது இன்னொரு நேரம்.  பெண்ணுடலில்இ உயிர்களின் நீந்துதலுக்கான ஒருபெருங்கடல் கொந்தளித்துக் கொண்டேதான் இருக்கிறது.  உடலின் புதிர்ப் பிரவாகத்தின் அந்த அடித்தளத்தில் கடற்பாசிகளையும்இ கூழாங்கற்களையும்மீன்களுக்கு  இணையாக நிரப்பிஇ இன்னும் ஏராளமாய் ஜீவராசிகளைத் தனது நீர்மையின் பேருடலில் நீந்திச் செல்ல அனுமதிக்கிறாள் பெண்.  ஆணின்ஆதிக்கவெறி கொண்ட மனமோஇ நம்பிக்கையின்மையின் எல்லாத் துளைகளிலும் நிரம்பி வழியும்.  மூர்க்கத்துடன் வன்மங்கொண்டு அலைகிறது. பெண்ணுடலையும்இ அவளின் மனத்தையும் புரிந்து கொள்ள முடியாத இயலாமையின் மறுபக்கமே ஆணின் கோபமாய் வெடிக்கிறது. இம்மாதிரியான நுட்பமானஉளவியற் சிக்கல்களின் வௌப்பாடுகளாக விசயலட்சுமியின் பல கவிதைகள் அமைந்திருக்கின்றன. ‘தோற்றப்பிழை’ கவிதையும் இவ்வாறே பெண்ணுடலின்புதிர்த் தன்மையையே பேசுகிறது.

    பெண்ணுக்கு உவமைகளாக உதிர்க்கப்படுகிற சொற்கள் ஓராயிரமோ இன்னும் கூடுதலாகவோ கூட இருக்கின்றன.  எல்லாச் சொற்களும் பெண்ணின் இயல்புகளில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒன்றின் பகுதியை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன. தென்றல் நிலம் நீர் ஆகாயம் மாயப்பேய்  மழைத்துளி சிலந்திவலை – அல்லது காலத்தை மீறி வளர்ந்து நிற்குமொரு செடிஇ குருதியின் ஈரம் குடித்த மலர்…. இப்படியே இந்த உவமைச்சொற்களை அடுக்கிச் செல்கிறதுவிசயலட்சுமியின் கவிதை.  பதிலுக்கு இதே போன்ற ஏதேனுமொரு வார்த்தையில் ஆணைச் சுட்டி அழைத்து அன்பு செய்ய எவ்வளவு முயன்றும் முடியாமற்போகிறது பெண்ணுக்கு. எப்பொழுதும் ஆண் உடலாக மட்டுமே இருப்பவன் என்ற நிலையில்இ பெண்ணின் உடலுக்குள்ளிருக்கும்  இன்னோர் உடலை அல்லதுஉணர்வுக்கூட்டை உணர்வதற்குப் பெரும்பாலும் ஆண்களால் முடிவதே இல்லை.

    ‘சுதந்திரத்தின் விதி’ கவிதை மிக ஆழமானதொரு பிரச்சனையின் பரிணாமங்களைச் சித்தரிக்கிறது.  பொதுவாக கண்காணிப்புகள் எல்லாமே பாதுகாப்பின்பெயரால் தொடங்கப்படுகின்றன.  அதன் பெயராலேயே அடக்குதலும் நசுக்குதலும் இன்னபிற ஒடுக்குமுறைகளும்  கிளை விரிக்கின்றன.  கண்காணிப்புவளையங்களை மீறி வளர்ந்து விடாமல் அல்லது அழகுபார்ப்பதற்கு என்ற சாக்கில் வெட்டப்பட்டு தொட்டிகளுக்குள் முடக்கப்படும் குரோட்டன்ஸ் செடிகளுக்கு  இணையாகஇ கண்காணிக்கப்படும் வீட்டைக்  காண்கிறார் கவிஞர் ஆனால் கண்காணிப்புகளை அடிமைத்தளைகளை உடைத்து வெளிப்படுவதேசுதந்திரத்தின் விதி. எனவே பாதுகாப்பின் பொருட்டு கண்காணிப்பது என்கிற சொல்லாடல்களைஇ யாருக்குப் பாதுகாப்பு யாரிடமிருந்து – எதற்காகப் பாதுகாப்புஎன்பதை போன்ற எதிர்ச் சொல்லாடல்களின் மூலம் எதிர்கொள்வதும்இ போராடுவதும்தான் விடுதலை  வேண்டுவோரின் கடமையாக இருக்க முடியும்.

    ‘செவ்வக வனத்தின் காற்று’ இரகசியங்களின் விதை’ ‘யாருக்காகவுமில்லாத காத்திருப்பு’ ‘ஒரு ரகசியக் காதலின் அனுபவக்குறிப்புகள்’ ‘என்றைக்குமான சில சொற்கள்’ ‘நேசத்தின் பிரதிகள்’- இப்படியான கவிதைகளில் வெளிப்படுகிற சோகமும்இ வாழ்வனுபவங்களும் செறிவானவை.  நம்மைநாமே சரிபார்த்துக் கொள்ள உதவும் மன நிலைக்கண்ணாடிகள்.

    ‘ஒரு மூன்றாம் உலக தேசத்தவனின் குரல்’ கவிதை ‘உலகமயச் சமையலறை’ களின் உன்னதத் தயாரிப்புகளின் பெருவள்ளமாகிய அணைநீருக்குஎதிர்நீச்சல் போட முற்படும் எளியவர்களின் இளங்குரலாய் ஒலிக்கிறது.  பெரும் பூகம்பங்களைப் போல் உலக நிலப்பரப்பு முழுவதையும் தலைகீழாகப் பரட்டிப்போட்டுக் கொண்டிருக்கிற இந்த நிதிமூலதனச் சந்தைப் புயலை மிகச் சன்னமான குரல்களில் எதிர்கொள்ள முற்படுகிறவர்களின் சிறிய படைவரிசையில்கவிஞரும் இணைந்து கொண்டிருக்கிறார்..  எதிர்க்குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பது முதற்படி. அவை மிக வலுவான போர்ப்பறையாக ஒலிக்க வேண்டும்என்பதே அடுத்த கட்டம்.  அதை நோக்கி நகருவதே முக்கியம்.  கவிஞர் நகர்ந்திருக்கிறர்.

    ‘எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை’ – தொகுப்பின் தலைப்புக் கவிதை பன்முக வாசிப்பிற்கு இடமளிக்கிற ஒன்று இது. சூரிய நிஜம் பொசுக்கியமாலை அது.  அந்தியின் பொன்துகள் சூடி மழைச்சாரலில் குளிர்ந்த நினைவு பனிமூட்டத்திற்கெனக் காத்திருக்க பேரவா தாங்கிய கண்கள் பொய்மையோடுகைகுலுக்கும். நெருப்பில் வாட்டிய இறைச்சியின் பதம் விரும்பிய மனம்இ சமரசத்திற்கு நெகிழாததாயிருக்கிறது.  தீப்பிடித்த குடிசையொன்று கண்முன் எரிந்துகொண்டிருக்கையில் நெருப்புக்குளியல் ஒன்றிற்கு நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளச் சொல்கிறார் கவிஞர். ‘சேர்ந்திருக்கவியலாத பட்சத்தில் உபயோகமற்றுஎரியுமதை மறக்காமல் அணைத்து விட்டுப் போ’ – என்று முடிக்கிறார் அவர்.  அவரவர் கண்ணோட்டத்தில் அவரவர் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும்பார்வைகளின் அடிப்படையில் இக்கவிதை வெவ்வேறு பொருள் தருவதாய்க் கிளைக்கும்.

    ‘கூட்டியக்கம்’?  ‘நீலத்தாமரை படர்ந்த ஆறு’ ‘முடிவற்ற வெற்றிகள்’ – இந்தக் கவிதைகளின் உள்ளார்ந்த சோகத்தொனிஇ தொகுப்பைப் படித்து முடித்துப்பலநாட்கள் ஆனபின்னும் நெஞ்சில் இழையோடிக் கொண்டேதானிருந்தது. மிக எளிய நேரடியான வார்த்தைகள்; ஆனால் இவற்றைத் தொகுப்பாகப் படித்தாலும்இதனித்தனியாகப் படித்தாலும்   இவை காட்டும் மனஉலகம் நம்மைப் பதறச்செய்வதாகவே இருக்கும்.  அறிமுகம் செய்யப்படுகிறஇ நம்மை எதிர்கொள்கிற எதார்த்தஉலகம் வேறாகவும் – நமது கனவுகளில் நாம் கட்டி எழுப்பி வைத்திருக்கிற உலகம் வேறாகவும் அமைந்து விடுவதே இன்று நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறவாழ்க்கை. ச. விசயலட்சுமியின் இக்கவிதைகளில்  இந்த இருவேறு உலகங்களுக்கிடையிலான இடைவிடாத போராட்டம் வெவ்வேறு களங்களின்பின்னணியில்   மீண்டும் – மீண்டும் நம் முன் விரிகிறது.  மனம் ஒன்றி இவற்றை வாசிக்கிற எவரொருவரும் இவற்றால் மனம் உளையாமல் தப்ப முடியாது. ‘உயிர்எழுத்து’ பதிப்பகத்தினர் இக்கவிதைகளை அர்த்தம் மிகுந்த அட்டையுடனும்  நேர்த்தியான வடிவமைப்புடனும் வெளியிட்டிருக்கின்றனர்

1 Comment on ““எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை””

  1. இவற்றை வாசிக்கிற எவரொருவரும் இவற்றால் மனம் உளையாமல் தப்ப முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *