மலையக அரசியலும் பெண்களின் பங்கேற்பும்

 சை.கிங்ஸ்லி கோமஸ்

மலையக நாட்டுப்புறப் பழ மொழிகளில் அடிக்கடி உச்சரிக்கப் படும் சில பழ மொழிகளில் ஆணாதிக்க சிந்தனையின் வரட்டுத்தனங்களை எடுத்தியம்பும் அர்த்தங்களைக் கொண்டவையாக காணலாம்.பொம்பல சிரிச்சா போச்சி போயல விரிச்சாப் போச்சி,பெண் புத்தி பின் புத்தி,கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன். என்பவை சில உதாரணங்களாகும்.இவ்வாறான அறிவுக்கு ஒவ்வாத கருத்தியல்களால் ஆகர்சிக்கப்பட்ட சமுகமாகவே இன்றைய  நவ நாகரீக காலக்கட்ட சமுகமும் காணப்படுகின்றது. மலையக அரசியல் கலாச்சரத்தினை நிதானமாக அவதானிப்பதனூடாக மலையக பெண்கள் தொடர்பான அரசியல் உரிமைகளை அளவீடு செய்யக் கூடியதாக இருக்கும்.எதிர் வரும் மாகாண சபைத் தேர்தலுக்காக கட்சிகளும் தொழிற்சங்கங்களும் சுயேற்சைக்குழுக்களும் சில அரசசார்பற்ற நிறுவனங்களும் ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் கடந்தகால மாகாண சபைத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு மலையக அரசியலும் பெண்களும் தொடர்பான ஆய்வினை செய்வது எதிர்கால மலையக அரசியலில் பங்கேற்க போகும் பெண் வேட்பாளர்கள் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் மாற்றம் தொடர்பான பார்வையினை திசைமுகப் படுத்த  உதவியாய் அமையும்.

கடந்த காலங்களின் மாகாண சபைத் தேர்தல்களும் அவற்றில் பங்கேற்ற பெண் வேட்பாளர்களை  நோக்கும் போது 1989 ஆம் ஆண்டு 1327 இற்கு 38 பெண்வேட்பாளர்கள் , 1993 ஆம் ஆண்டு 2351- 12 1999 ஆம் ஆண்டு 3677-198 2004 ஆம் ஆண்டு4863- 373 2008 09 ஆம் ஆண்டு 9356-711

என்னும் வகையில் பெண் வேட்பாளர்களின் தொகை காணப்படுவதாக தேர்தல் திணைக்களத்தின் தரவுகள் கூறுகின்றன்.

இதில்2004 ஆம்  ஆண்டு மத்திய மாகாணத்தில் 708 மொத்த வேட்பாளர்களில் 74 பெண் வேட்பாளரகளும் 2008 09 ஆம்  ஆண்டு 1310 மொத்த வேட்பாளர்களில் 127 பெண் வேட்பாளரகளும் போட்டியிட்டுள்ளனர். இதில் 4 பெண் வேட்பாளரகள் வெற்றி பெற்றுள்ளனர். இறுதியாக மலையக தொழிற்சங்க பிரதிநிதிதிதுவத்திற்காக பெரும்பான்மைக் கட்சியுடன இணைந்து போட்டியிட்ட ஒரு பெண் அமைச்சு பதவிகளுடன் அங்கத்துவம் கிடைத்தது அதுவும் மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் பாராளுமன்ற பிரவேசத்தின் காரணமாகும.;

எமது அரசியல் கட்சிகள் கடந்த காலங்களில்  மலையகப்  பெண்களின் குறைந்தப்பட்ச தேவைகளையாவது தீர்ப்பதற்கு முயற்சி செய்ததா? உழைப்பு அதிகமாக சுரண்டப்படும் மலையக பெண்களின் தேவைகளை ஆய்விற்குட்படுத்தியுள்ளதா? மலையகப் பெண்களுக்கு தங்களின்  உரிமைகள் தொடர்பாக கருத்துக்களை கூற சந்தர்ப்பம் வழங்கப் பட்டதா? பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் நடந்த போது அவற்றிற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதா? பெண்ணொடுக்குமுறை பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக செயற்பட்டுள்ளனவா?

2013 ஆம் ஆண்டுக்கான மத்திய மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தினை சற்று நோக்குவோமாயின் ஆளும் கட்சியில் இரண்டு பெண்வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர் ஒருவர் ரெற சார்பாக சிவகுரு சரஸ்வதி இரண்டாமவர் விமாலி கருணாரத்ன முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜக்கிய தேசிய கட்சி சார்பாக ரேனுகா ஏரத் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இவர்கள் தவிர்ந்து  மக்கள் விடுதலை முன்னனி சார்பாக நான்கு பெண் வேட்பாளர்களும் ஊடகங்களில் பிரசுரிக்கப் பட்ட தகவல்களுக்கு அமைய மொத்தமாக 27 பெண் வேட்பாளர்கள் சகல அரசியல் கட்சிகள் சார்பாகவும் சுயேட்சை குழுக்கள் சார்பாகவும் போட்டியிடுகின்றனர்.

அதிகமான தோட்டத்தொழிலாளர்களை கொண்டுள்ள இ.தொ.கா பல ஆயிரம் பெண்களை கொண்டு மகளிர் தினங்களை கொண்டாடிய போதும் மாகாணசபையில் போட்டியிட ஒரு பெண் வேட்பாளரை வளர்த்தெடுக்காமல் விட்டது வருந்தத்தக்க விடயமாகும். இது தவிர்ந்து பெண்ணைத் தலைமையாகக் கொண்ட மலையக மக்கள் முன்னணியில் தேர்தலில் போட்டியிட ஒரு பெண் இல்லாமல் போனது விமர்சனத்துக்குரிய விடயமாகும். மலையக தொழிற்சங்கங்களுக்கு சந்தா வழங்கும் தொழிலாளர்களில் அதிக வீதத்தினர் பெண் தொழிலாளர்களேயாகும் இவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க பெண் அரசியல் ஆளுமைகள் அவசியமாகும். மலையகத் தோட்ட பெண் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் சட்டரீதியான சிக்கள்களுக்கும் மற்றும் உடல் ரீதியான பலபிரச்சனைகளையும் வெளியில் கூற முடியாமல் தவிக்கும் நிலை இன்று காணப்படுகின்றது

இந்த நிலைமை மாற வேண்டுமாக இருந்தால் மலையக அரசியல் தலைமைகள் அவர்களின் ஆணாதிக்க அடக்கு முறைக்கு அப்பால் சுதந்திரமாக இயங்கக் கூடிய பெண் தலைமைகளை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *