நீண்ட கனவு

சந்திரலேகா கிங்ஸிலி

அது ஒரு நீண்ட கனவு
நிஜங்களால் ஆன கனவு
அந்த கனவுக்குள்
புதையல்கள் இல்லை
திடீரென உணர்வுகள் மாறாது
உணர்ச்சி வெடித்து சிதறாது
எப்பொழுதோ நடப்பது போல்
எதுவும் நடக்காது
ஜிலு ஜிலு நடைகள்
மினு மினு இராஜாக்கள் இல்லை
இரட்டை வேடமாய்
யாருமே வரமாட்டார்கள்
இரவு பகல் மாறி நடவாது
சினிமாவின் “டிசும்”“டிசும்” இருக்காது
ஜனத்திரள் கோடியாய் இருக்காது
கொலை, கொள்ளை, கலவரம்
தூக்குமேடை, துஸ்பிரயோகம்
இரத்தக்கரை, துப்பாக்கி
வேட்டுச்சத்தம், ஆட்கடத்தல்
அடக்குமுறை, ஆர்ப்பாட்டம்
பதுங்கு குழி, பங்கர்
காக்கிச் சட்டை,‘சென்றி’ போட் ”ட்ஸ்
ஆட்லெறி குண்டெறிகள்
சுண்டை விமானங்கள் கிரணைட்கள்
கீறீஸ் ”தம் – வெள்ளை வேன்
இதில் எதுவும்
அங்கு காணமுடியாது
அப்பாயென்றால் அது ”ஞ்சோல கனவா?
அதுவுமில்லை..…
விசித்திரமும் இல்லை
அதிசயமும் இல்லை
தேவதைகள் இல்லை
தேவர்கள் இல்லை
அர்ச்சிஸ்டவர்களும் இல்லை
முகமதியர்களும் இல்லை
சொர்க்கம் நரகம்
எதுவும் கிடையாது
தூதர்களுமில்லை – பாப்பரசர்களுமில்லை

தூங்கிய பிறகோ
நடு சாமத்திலோ
விடியற் காலையிலோ
இந்தக் கனவு வராது
இது ”மியின் புதிரா?
அதுவுமில்லை

உணர்வடன் – உதிரத்துடன்
வாழ்வின் அர்த்தங்களிலிருந்தும்
எதிர்பார்ப்புகளிலிருந்தும்
அடக்கி ஒடுக்கப்பட்ட
ஆத்திரங்களுடன்
இதயத்துக்குள் எரிமலையின் கனவு
எப்பொழுதும் நிஜமாகி நிற்கின்ற
நீண்ட பெரும் நிஜக’ கனவு
புதிரான ”மியை
புரட்டிப் போடும் கனவு
இந்தக் கனவை சொல்லுவதும்
வெல்லுவதும் கூட
போராட்டக் கனவு
அது ஒரு நீண்ட கனவு
எப்பொழுதாவது
”மியை பிளந்து, புதிர்களை கடந்து
”கம்பமாய் பலித்துவிடும் பெருங்கனவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *