10 லட்சம் ரூபா செலவில் நூலகம் நடாத்த உள்ள தமிழ் ஆவண மாநாடு -ம் எழும் கேள்விகளும்

அடுத்த மாதம் ஏப்ரல்27, 28 ஆம் திகதிகளில்  தமிழ் ஆவணமாநாட்டை நூலகம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு  10 இலட்சத்திற்கு மேல் செலவாகிறது என  நூலகத்திற்கு பங்களித்த நண்பர்  ஒருவர் கவலையோடு கூறியதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஊடறு ஆர் குழு

 

அடுத்த மாதம் ஏப்ரல்27, 28 ஆம் திகதிகளில்  தமிழ் ஆவணமாநாட்டை நூலகம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு  10 இலட்சத்திற்கு மேல் செலவாகிறது என  நூலகத்திற்கு பங்களித்த நண்பர்  ஒருவர் கவலையோடு கூறியதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதுவெளிநாடுகளில் இருந்து பங்குபற்றுவோருக்கு கூட  விமான ரிக்கட் உட்பட அனைத்து செலவுகளையும் நூலகமே வழங்குவதாக கூறிய நண்பர்  நூலகத்திற்கு நிதி இல்லாமல்  தான் ஒரு லட்சம் கொடுத்ததாகவும்  ஆனால் நூலக நிர்வாக இப்படி அடாவடித்தனமாக செலவு செய்தன் மூலம் தமது பங்களிப்புக்களை தாங்கள் இனி நிறுத்தப்போவதாகவும் அந்த நண்பர் மேலும் கூறினார்.

 

பல தனிப்பட்டவர்கள் தங்களது பங்களிப்பை செலுத்தி வரும் நிலையில் வெளிநாட்டில் வசிக்கும் எழுத்தாளர்கள் அல்லது இந்த ஆவண மாநாட்டில் பங்கு பற்றும்  பலருக்கு நூலகம் விமான ரிக்கட் கொடுத்து அவர்களை இந்த மாநாட்டுக்கு அழைப்பதன் மூலம் நூலகத்திற்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகின்றது  என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும்  நூலகத்திற்கு பங்களித்தோர் உழைத்தோர் என்ற முறையில் இந்தக் கேள்வியை தான்  முன் வபை;பதாகவும்  அந்த தோழர் மிகவும் கவலையுடன் தெரிவித்தார்.

இத்தகைய சூழ்நிலையில் கலைஞர்களாகிய நாமும் எமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும். எனவும் கேட்டுக்கொண்டார்.

. வரலாற்றில் கலைஞர்கள் என்போர் மாற்றுக்கருத்துகளுக்கும் சமூக மாற்றத்திற்கும் முன்னணி காவலரண்களாக இருந்து வந்துள்ளனர். மக்களின் அபிலாசைகள், அச்சங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு உருவம் தந்து வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில்  இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சியாக 2005 ம் ஆண்டிலிருந்து  (சரியான ஆண்டா எனத் தெரியவி)ல்லை  நூலகம்  செயற்பட்டு வருகின்றது இந்த நூலகம் செயற்படுவதற்கு பல எழுத்தாளர்கள், சமூக ஆhவலர்கள், இளைஞர்கள் என பலர் தங்களது பங்களிப்புக்களை  செய்து வந்துள்ளனர் அவர்களது கேள்வி நியாயமானவையே.
     

1 Comment on “10 லட்சம் ரூபா செலவில் நூலகம் நடாத்த உள்ள தமிழ் ஆவண மாநாடு -ம் எழும் கேள்விகளும்”

  1. ஊடறு நண்பர்களுக்கு,

    இம்மாநாட்டுக்கான நிதிசேகரிப்பிற்காகச் சில முயற்சிகளை செய்தவன்; என்ற வகையில் சில குறிப்புக்களைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

    1. முதலாவது இம்மாநாடு நூலகத்திற்கான பங்காளர் நிதியில் இருந்து செய்யப்படுவதாக உங்களுக்குத் தகவல் தந்தவரின் தகவல் தவறானது. பங்களிப்பாளர்களின் நிதியில் ஒரு சதமும் இம்மாநாட்டுக்காக எடுக்கப்படவில்லை.

    2. இரண்டாவது பத்துலட்சத்திற்கு மேல் செலவு என்ற தகவலும் தவறானது.

    3. இம்மாநாட்டுக்கான நிதி மக்கள் பங்களிப்புடன் நடாத்தப்பட வேண்டும் என்பதற்காக ரிக்கற் விற்பனை மூலமும் தனிப்பட்ட கொடையாளர்கள் மூலமும் திரட்டப்பட வேண்டுமென்பதாகவே தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ரிக்கற் விற்பனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வி;ற்பனையில் ஈடுபட்ட நான்கு நூலக உறுப்பினர்கள் சாவகச்சேரியில் வைத்து இராணுவத்தினரால் விசாரணைக்குள்ளாக்கப்பட்டனர். அத்தோடு அம்முயற்சி கைகூடாமல் போனது.

    4. மாநாட்டிற்கு நூலகம் அழைக்கும் வெளிநாட்டவர் தமிழ்நாட்டிலிருந்து வரும் ஒருவரே. அவருக்கு மட்டுமே ரிக்கற் செலவு வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அவர் நூலக நிறுவனத்திற்கான பயிற்சி உட்பட பல்வேறு உதவிகளை வழங்கிய ஒருவர் என்பது சுட்டத்தக்கது. இவரைத் தவிர வேறெவரையும் ரிக்கற் கொடுத்து அழைப்பதாகத் தீர்மானித்ததாக நான் அறியவில்லை.

    5. இம்மாநாட்டிற்கு தனிப்பட்ட கொடையாளர்கள் சிலர் நிதி தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்களே தவிர அந்நிதி கூட இதுவரை வந்து சேர்ந்ததாகத் தெரியவில்லை.

    6. இவ்வாறான நிதிப்பிரச்சினை காரணமாக மாநாட்டிற்கான மண்டபத்தையும் வருபவர்களைத் தங்க வைப்பதற்கான இடவசதியையும் இலவசமாகப் பெறுவதற்காக தமிழ்ச்சங்கத்துடன் உரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நிலைமை இவ்வாறிருக்கிறது. ஊடறுவுக்குத் தகவல் தந்தவர் முற்றாகத் தவறான தகவல்களையே தந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவதூறையே தொழிலாகக் கொண்ட தமிழ் இணையங்கள் ஏதாவதொன்றில் இவ்வாறான தகவல்கள் வந்தால் ஆச்சரியம் தருவதற்கு எதுவுமில்லை. அவ்வாறான இணையங்களிலொன்றாக ஊடறு இல்லை என்பது பொய்த்துப் போகக் கூடாது என்று விரும்புபவன் நான். எனவே இவை குறித்து திருத்தமான தகவல்களை வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நீங்கள் பெற்றுக்கொண்ட தகவல்களை வெளியிடுவதற்கு முன்னராக குறைந்த பட்ச ஊடக தர்மத்தின்படி உத்தியோகபூர்வமாக நூலக நிறுவனத்தைத் தொடர்பு கொண்டீர்களா எனவும் அறிய விரும்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *