நானும் என் கவிதயும்

முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா  –சென்னை 8

அனைத்து  ஊடறு பெண்  நண்பர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லவும்


 அக்கா வயசுக்கு வந்த பிறகு அப்பா அக்காவை  காவேரிக்கு அனுப்ப விரும்பியதில்லை. வீட்டிற்குப்பின்புரம்  குப்பைமேட்டில் சாக்கு(கோனி) கட்டி ஒரு கல்லை எடுத்துப்போட்டு அதில் உட்கார்ந்து குளிக்கப்பழகு எனக் கூறினார். பொதுவாக கிராமங்களில் பெண்குழந்தைகள் வயசுக்கு வந்த பிறகு ஆற்றிற்கு  குளிக்க அனுப்பமாட்டார்கள். அதனால் அக்கா வீட்டில் அருகில் இருக்கும் தென்னைமரத்திற்குத் தண்ணீர் விடுவதைப்போல அவள் குளிக்கும் தண்ணீர் அந்தமரத்தை வளர்த்தது. ஆனால், என் சித்தப்பா மகன் என் அக்காவை அங்கே குளிக்க்க் கூடாது எனச்சொல்லித் தடுத்தான்.  குடித்துவிட்டு வந்து என் அப்பாவையும் என் அக்காவையும் திட்டினான்.பாகம் பிரிக்கச்சொல்லி தகராறு செய்தான்.அபாவுடன் பிறந்தவர்கள்  மூவர். சித்தப்பாவின் மகன் மதியால் எங்கள் குடும்பம் மிகவும் பழிதூற்றப்பட்டது.

      பாகம் பிரித்தார்கள். தென்னை மரத்தின் மேற்குப்பகுதி விளிம்பு எங்கள் மனையுடன் இருக்கிறது. மரத்தை வெட்டசொல்லி தகராறு செய்கிறான்.என் அப்பா மரத்தை வெட்டவேண்டாம். கொஞ்ச நாளைக்கு என் எண் குளிக்க அனுமதி கொடு. நான் கூடிய சீக்கிரம் வேறு வேடு கட்டிக்கொள்கிறேன் என பஞ்சாயத்தில் அப்பா கேட்க அவன் அனுமதிக்கவே இல்லை. என் அப்பா வைத்த மரம். இளநீர் பருவம் . நாங்கள் சாப்பிட கொடுத்து வைக்கவில்லை. வீடு இல்லை. நாங்கள் தங்கி இருந்த பகுதியில் கால் பாகம் அவன் மனையோடு சேர, என் அக்காவும் நானும் (அப்பொழுது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்)  எங்கே குளிப்பதென அறியாது நின்றிருந்தோம்.பஞ்சாயத்தில் கொஞ்ச நாள் பெண் பிள்ளைகள் குளிக்க அனுமதிக்கச் சொன்னார்கள்.ஆனால் அவன் கேட்கவில்லை.

      பிறகு அப்பா மீண்டும் வேறு குப்பைமேட்டில் குளிக்க ஏற்பாடு செய்தார். எங்கள் பாகத்தில் தன்னை மரம் நட்டார். இன்றைக்கு நாங்கள் மூன்று மரங்களிலிருந்து இளநீர் குடிக்கிறோம் .எப்பொழுதும் எங்கள் வளர்ச்சியைப்பார்த்து பொறாமைப்படுபவனவன்.இன்றும் அந்த மரம் வளர்ந்து அவன் வேட்டுப்பக்கம் கிளை படர்ந்தால் சண்டைக்கு வருவான். மக்கள் பாஞ்சாலியை வேடிக்கைப்பார்த்த்தைப்போல எங்களை வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.கல்லை விட்டு அடிப்பான். கெட்டவார்த்தைகளால் திட்டுவான். மூர்க்கமாக கொலைவெறியுடன் அரிவாளை எடுத்துக்கொண்டு ஓடிவருவான் வெட்ட.அவனுடைய அப்பா மற்றும் அம்மா தடுப்பார்கள். அவர்களையும் அடிப்பான். இவற்றிற்கெல்லம் காரணம் நாங்கள் அந்த கிராமத்தில் முதல் தலைமுறை  சார்ந்த முதுகலைப்பட்டதாரிகள். பெற்றோர் படிக்காதவர்கள். முதன்முதலில் அக்கா எம்.ஏ படித்துவிட்டு வானொலி நிலைய நிகழ்ச்சிப் ம்பொறுப்பாளராக இருந்தார். அலுவலக்க் கார் வீட்டிற்கு  வந்து அழைத்துச்செல்லும். இதையெல்லம் பார்க்கும் அவன் பொறாமையால் குடித்துவிட்டு வந்து தகாத வார்த்தைகளால் திட்டுவான். நாங்கள் மரம் போல் வளர்ந்து நிற்கிறோம்.அவன் குடி இருக்கக்கூட வீடில்லாமல் இருக்கிறான்.

     இன்றைக்கும் நாங்கள் வருவோர் இளைப்பாற புங்கை வளர்க்கிறோம். வேம்பு வளர்க்கிறோம். இன்றைக்கும்  மர நிழல் அவன் வீட்டுப்பக்கம் வரக்கூடாதென எச்சரிக்கிறான்.அவன் பகைமை வளர்க்க நாங்கள் மரங்களின் மூலம் ஆக்சிஜன் கொடுக்கிறோம் .

       கல்வி எங்களைச் சமூகத்தில்  அடையாளப்படுத்தி இருக்கிறது. வானொலி அதிகாரியாக என் அக்கா நேயர்களின் பாரட்டுதலுக்குரியவளானாள். நான் பேராசிரியகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறேன்.ஆனால், என் உறவினர், ஊர் மக்கள் எங்களை தூர நின்று வேடிக்கைப்பார்க்கிறார்கள்.

       மரம் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.இப்பொழுதும் கூட அப்பாவிடம் வயலில் மரம் வளர்க்கச்சொன்னேன். வயலில் வேலை செய்பவர்கள் சற்றே இளப்பாற புங்கை நிழல் காற்றோடு தாலாட்டுகிறது. அப்பா எப்பொழுதும் இயங்கிக்கொண்டேஇருப்பார்.வயது இன்றைக்கு 84 ஆகிறது. அவர் சொல்கிறார். நான் இன்னும் 10 ஆண்டுகள் இருப்பேனென.

அவருடைய தன்னம்பிக்கை எனக்கு ஆச்சரியமளிக்கும்.அவர் மாட்டுவண்டி ஓட்டினால் மாடு ஒவ்வொரு அவர் எழுப்பும் ஒலிக்கும் வேறுவேறு வேகத்தில் ஓடும். நிறைய கடலை மிட்டாய், பன், வாழைப்பழம் வாங்கி மாட்டுக்குக் கொடுப்பார்.வயலில் வேலை பார்க்கும் போது விவசாயி சோறு கொண்டுவரவில்லைஎன்றால், அவருடைய சோற்றைக் கொடுத்துவிட்டு தான் பட்டினியாக வீட்டில் வந்து சாப்பிடுவார்.

நேர்மையானவர். ஒருமுறை போலிசு அவரை வண்டியை குறுகலானசந்தில் போக்க் கூடாது எனம் அமரிக்க செங்கல்லை இந்த வழியில் தான் எப்பொழுதும் கொண்டுபோவது வழக்கம். அதனால்மரிக்கவேண்டாம் எனக்கேட்டுக்கொண்டார்.ஆனால் போலிசு விடவில்லை.அவரைத் தாக்கிப்பேசியதுடன், அடிக்கமுயன்றிருக்கிறார்.உடனே என் அப்பா வண்டியில் அமர்ந்தவாறே அவரை எதிர்த்திருக்கிறார். போலிசுக்கு கோபம். ஸ்டேசனுக்கு வரச்சொல்லிவிட்டுபோய்விட்டார். ஆனால் அவர் போகவில்லை.      மறுநாள் அந்த போலிசு பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லவில்லையாம். யாருக்காகவும் பொய் பேசமாட்டார்.     அவருடைய அனுபவம் என்னை மிக்கவர்ந்தது .நானும் அதைகடைபிடிக்கிறேன். 

  ஒரு பெண்ணியவதியாக,நிறைய பெண்களுக்கு வழிகாட்டியாகருக்கிறேன்.         பெண்கள் படிக்க விரும்பினால் படிக்க உதவுகிறேன்.ஏழைமாணவர்களுக்கு கல்வி உதவி செய்வதோடு, வேலை வாய்ப்பும் முடிந்தவரையில். ஏற்பாடு செய்து தருகிறேன்.குறிப்பாக தலித் மாணவிகளின் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன்.   நிறைய தலித் சார்ந்த படைப்புகளைத் தருகிறேன். ஆனால் திட்டமிட்டு சமூக தலித் எழுத்தாளர்களாலேயே புறக்கணிக்கப்படுகிறேன்.இருந்து என் பணி தொடர்கிறது. மாணவிகளுக்கு வழிகாட்டலும் ஆலோசனைக்கூறலும் என்ற ஒரு நூல் எழுதிஉள்ளேன் .இது பல மாணவர்களால் படிக்கப்படுகிறது.  

 மலடு

நெடு நேரம் காத்திருக்க

நேர்ந்தது எப்போதும் போல.

புரவழிச்சாலையில்

ஒரு மரத்தின் கிளைகளில்

பறவையின் கூடடையும் குரலுடன்,

கானல் நீரென பரவும்

காமத்தைத் தீண்ட

அலகு சுமந்து திரிகிறது கழுகு.

வனாந்தரத்தில்மேய்ந்துகொண்டிருக்கும்

மனவெளிதேடி திரிந்து களைத்துபோகும்

அது

பிழியப்படாத தேன்கூட்டை

உற்றுப்பார்க்கும்..

வெப்பம் சிதரத்

தயாராகும் உடலைக் கடத்துகிறது

தீண்டாதமுத்தங்கள்.

வேகமாய் நகரும் வாகனங்களில்

பால்சூரியன் இரங்க

சிவந்த முகத்தில்

கோடையின் உக்கிரம் மலடாகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *