கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே பிரதிபலிக்கிறது||

 கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!!
“கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே  பிரதிபலிக்கிறது”
            Bertolt Brecht in A Short Organum for the Theatre

கல்வி எமது சமூகத்தின் உயிர் நாடியாகும். 1945 இல் இலவச சேவையாக ஸ்தாபிக்கப்பட்ட எமது கல்வி முறைமை 1948 இல் நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது. பெருந்தொகையான எமது மக்களின் சமூக நகர்வுக்கு கல்வி உதவியுள்ளதுடன் எமது கலை இலக்கியங்களின் மறுமலர்ச்சிக்கும் அக் கல்வியே வித்திட்டது. எமது நாட்டின் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், பொறியிலாளர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், தொழின் முயற்சியாளர்கள்  முதலான தொழின்வாண்மையாளர்களின் உருவாக்கத்திற்கும் எமது இலவச கல்வி முறைமையே அடித்தளமாக அமைந்தது. இந்த கல்வி முறைமைக்குள் இயங்கும் எமது தேசிய பல்கலைக்கழகங்கள் எமது பட்டதாரிகளுக்கு உயர்தரமான கல்வியை வழங்குகின்றன. அது மாத்திரமல்லாது அவை தனியார் துறையினர் உட்பட சகல துறையினருக்கும் உயர்தரமான அறிவையும் வழங்குகின்றன. இன்று எமது நாட்டில் மிக உயர்ந்த பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலோர் எமது இலவசக் கல்வியின் பயனைப் பெற்று உயர்ந்தவர்களே! இத்தகைய பெருமைக்குரிய எமது பல்கலைக்கழகங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப எமது பெற்றோர்கள் அனைவரும் அவாவுகின்றனர். எமது பிள்ளைகளும் கூட பல்கலைக்கழக அனுபவங்களைப் பெற்று வாழ்வில் உயர்நிலை அடைய விழைகின்றனர்.

ஆனால் துரதிர்~;ட வசமாக இன்று எமது கல்வி நிலையங்கள் யாவும் பயங்கரமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன. நீண்ட காலமாக எமது சமூகத்தின் ஆதார சுருதியாக விளங்கிய இலவச கல்வியின் ஜனநாயக கட்டமைப்பு நொறுங்கி விழுந்துக்கொண்டிருக்கின்றது. எமது கல்விநிலைபற்றிய புள்ளி விபரங்கள் இன்று எமது கல்வி முறைமையானது எத்தகைய அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன. எமது நாட்டின் கல்வி ஷஇலவசமாகவே| வழங்கப்படுகின்றது என்று நாம் இன்னும் கூறிக்கொண்டிருந்தாலும் கல்விக்கான அரச நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. மோசமான திட்டமிடல், பாரபட்சம் காட்டுதல், வரையறையற்ற அரசியல்மயமாக்கம் ஆகியவை இலவசக் கல்வி என்பதை பொருளியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் அர்த்தமற்றதாக்கியுள்ளன. கிராமப்புற பாடசாலைகள் படிப்படியாக மூடப்படுகின்றன. அதே நேரத்தில்; நகர்ப்புற தேசிய பாடசாலைகள் மிதமிஞ்சிய மாணவர் தொகையினால் நிரம்பி வழிகின்றன. மாகாணங்களில் உள்ள சுமார் 1945 பாடசாலைகள் அரச நிதியீட்டத்தில் சுமார் 20 வீதத்தை மட்டுமே பெறுகின்றன. ஆனால் தேசிய பாடசாலைகள் எனப்படும் சுமார் 340 பெரிய பாடசாலைகளை சார்ந்தே எல்லாவிதமான ஆராவாரங்களும் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. கல்வி மீதான அரசமுதலீடு 2005 இல் புனுP இன் 2.9 வீதமாக இருந்தது. 2010 இல் இது 1.9 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை 2005 ஆம் ஆண்டில் 0.5 வீதமாக இருந்த  உயர்கல்விக்கான அரச நிதியீட்டம் 2010 இல் 0.27 வீதமாக வீழ்ச்சியடைந்தது. தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் குருவுயு வின் தொழிற்சங்க போராட்டமானது எமது கல்வி நெருக்கடியின் பல்வேறு பரிமாணங்களுக்கும் தீர்வு காணும் உயரிய நோக்கைக் கொண்டுள்ளது. துரதிர்~;டவசமாக எமது அரசாங்கமானது குருவுயு முன்வைத்துள்ள முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக சிலவற்றிற்கு நழுவல் போக்கையும் வேறு சிலவற்றிற்கு வெளிப்படையான எதிர்ப்பு நிலையையும் மேற்கொண்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் கலைஞர்களாகிய நாமும் எமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டும். டீசநஉhவ கூறியுள்ளதைப் போல நவீன சமூகத்தில் கலைஞர்களாகிய நாம் விசேட கண்ணாடிகள் மூலம் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியவர்களாக உள்ளோம். வரலாற்றில் கலைஞர்கள் என்போர் மாற்றுக்கருத்துகளுக்கும் சமூக மாற்றத்திற்கும் முன்னணி காவலரண்களாக இருந்து வந்துள்ளனர். மக்களின் அபிலாசைகள், அச்சங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு உருவம் தந்து வெளிப்படுத்தியுள்ளனர். எமது சகோதர சகோதரிகள், எமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் இன்று கல்வி முறைமையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் சீரழிவுகள் காரணமாக தமது எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளை இழந்துள்ளனர். இத்தனை காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்தவைகள் யாவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இந்த போக்கினை நிறுத்தி இந்த நிலைமையை உடனடியாக நாம் மாற்றியாகவேண்டும். அதற்காக நாம் ஒரே குரலில் உரத்து முழங்குவோம் :

எமது நாட்டின் சகல மக்களுக்கும் உரிய இலவசக் கல்வியின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்போம். சகலருக்கும் இலவசக் கல்வியை உறுதிப்படுத்தக் கூடியதாக கல்விக்கான முதலீட்டை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவோம்.

ஜனநாயகத்தின் சகல விழுமியங்களுடன் இணைந்ததாக புலமையறிவு மற்றும் கலைகளுக்கான சுதந்திரங்களை உறுதிப்படுத்;தக்கூடிய ஜனநாயகச் சூழலை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கமும் மக்களும் ஆதரவு வழங்கவேண்டும் எனக் கோருவோம்.

1 Comment on “கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே பிரதிபலிக்கிறது||”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *