உழைக்கும் பெண்கள் முன்னணி மே தினத்தினத்தில் எடுத்த 13 தீர்மானங்கள்.

ராமதுரவத்த,, நிவ்டன் குணசிங்க ஞாபகர்த்த நிலையத்தில் இடம் பெற்ற மேதினக் கூட்டத்தில் உழைக்கும் பெண்கள் முன்னணி கீழ் காணும் தீர்மானங்களை ஏகமனதாக முன்வைத்தது

 

 
1. அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவினை கருத்திற் கொண்டு அரசாங்கம் சம்பள உயர்வு அதிகரிப்பை அரசதுறைக்கும் தனியார் துறைக்கும் பிரகனப்படுத்த வேண்டும்.
2. இன்று தனியார் துறையில் பல்வேறு வகையில் அடிப்படை சம்பளம் வழங்கபடுவதால்இ நாட்டின் ஒட்டு மொத்த தொழிலாளர்களுக்கும் அடிப்படை சம்பளமாக இருபதாயிரமாக பிரகனபடுத்த வேண்டும்.

. 3.உலக தொழிலாளர் ஸ்தாபனம் அண்மையில் வீட்டுப்பணிமனைத் தொழிலாளர்களுக்காக பிரகடனப்படுத்திய ஊ189 சமவாயத்தில் கைச்சாத்திட்ட எமது அரசாங்கமானது உடனடியாக தேசிய ரீதியில் வீட்டுப் பணியாளர்களுக்கான சட்டமொன்றினைக் கொண்டுவரும்படி அரசாங்கத்தை கோருகின்றது.

4. நாட்டின் ஏற்படும் பணவீக்கத்தை கருத்தில்கொண்டு, சம்பள நிர்ணய சபையை உருவாக்க வேண்டும்.

5. நாட்டின் அனைத்து தொழில் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து செல்வதனை கவனத்தில் கொண்டு ஐ.எல்.ஓ ILO பிரகனப்படுத்தியுள்ள கௌரவமான வேலைச் சூழலை ( Environment for Decent Work ) நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டமூலம் ஒன்றை கொண்டு வர வேண்டும். 


 

 

 

 

 6.தொழில் புரியும் இடங்களில் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் பாலியல் வன்முறைகளை விசாரிக்க விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும். 

7. பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை உள்ளுராட்சி மன்ற நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தோட்டபுற மக்களுக்கும் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும். 

8. கடை பணிமனைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தொழில் உரிமைகளை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசாங்கத்தை கோருகின்றது. 

9. தோட்டத்துறை பெண் தலைவிகள் தமது பிரச்சினைகளை தோட்ட முகாமையாளருடன் பேசுவதற்கு வசதியாக அவர்களுக்கு அரை நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை பெண் தலைவிகளுக்கு வழங்கும்படி தொழில் வழங்குனர் சம்மேளனத்தினை அரசாங்கம் கோர வேண்டும்.

10. தோட்டத் தொழிலாளர் தமது சிறப்பு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக பெண் அதிகாரியை நியமிக்கும்படி அரசு தோட்ட முகாமைத்துவத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்.

11. அரசாங்க பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பிரசவ விடுமுறை நாட்களையும், பிரசவ சகாய நிதியையும் தோட்டத் தொழிலாளருக்கும் ஏனைய தனியார்த்துறை தொழிலாளர்களுக்கும் வழங்குவதற்காக சட்ட திருத்தமொன்றினை கொண்டுவரும்படி அரசை கோருகின்றது.

12. பெண்கள் முகம் கொடுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளிலிருந்து நிவாரணம் பெறும் வகையில் சிறப்பு பெண் பொலீஸ் பிரிவொன்றினை உருவாக்கும்படி அரசை வலியுறுத்துகின்றது.

13. நாட்டின் ஏனைய பிரஜைகளைப் போல் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கும், தோட்டத் தொழிலாளப் பெண்களுக்கும் காணி உரிமையும் வீட்டுரிமையும் உறுதி செய்ய அரசை வலியுறுத்துகின்றது.

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 Comment on “உழைக்கும் பெண்கள் முன்னணி மே தினத்தினத்தில் எடுத்த 13 தீர்மானங்கள்.”

  1. நல்ல முயற்சி! இக்கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் பெண்களின் குறிப்பாக, மலையகப் பெண் தோட்டத் தொழிலாளர்களின் நிலையில் காத்திரமான மாற்றங்களைக் காணலாம் என நம்புகின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *