இமாமி நிறுவனம் ‘பயில்வானை’ வைத்து பெண்களை இழிவு படுத்துகிறது

-கொற்றவை-

வணக்கம்,

 மாசெஸ் அமைப்பு மீண்டும் ஒரு விளம்பரத்தைக் கடுமையாக எதிர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த விளம்பரத்தின் ஒளிபரப்பு கூடிவிட்டது. அவ்விளம்பரத்தில் சூர்யாவின் ஆண்மை பற்றிய கர்ஜனை (இந்தியில் ஹாருக் கான்) பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது. முதலாளித்துவ ந்லனுக்காக அத்தகையப் பெண்மையையும் ஆணாதிக்கம் தானே புனைந்தது. நிச்சயமாக இது ஒரு தனிநபர் விளம்பர உத்தியல்ல… ஊடகம் சித்தரிப்பு செய்யும் கதாப்பாத்திரத் தன்மையே நிஜம் என்று பொது புத்தியில் பதிந்து வரும் போக்கு ஆபத்து நிறைந்ததாய் உள்ளது. அதனால் இந்த மனுவில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  வரும் மார்ச் 8 – பெண்கள் தினமன்று ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்ய திட்டமிட்டு வருகிறேன்.  நிறைய கையெழுத்து விளம்பரத்திற்கு தடை விதிக்க உதவும்.  (ஏற்கணவே கையெழுத்திட்டோர் தொந்தரவுக்கு மன்னிக்கவும்)இமாமி நிறுவனம் ‘பயில்வானை’ வைத்து பெண்களை இழிவு படுத்தும் ஆண்களுக்கான இமாமி ஃபேர் & ஹாண்ட்ஸம் முகப்பூச்சு விளம்பரத்தை’ திறும்பப் பெற கோருகிறது மாசெஸ் எனும் அமைப்பு.

பாலின பாகுபாடு போற்றும் விளம்பரத்தை ஒளிபரப்புவதை இமாமி குழுமம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

“ஃபேர் & ஹாண்ட்ஸம் ஆண்களுக்கான முகப்பூச்சு விளம்பரம் மூலம் ஒரு பயில்வான் பெண்களுக்கான பண்டத்தை உபயோகிப்பது இழிவானது என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் சொல்வது ‘பெண்மை’ குறைபாடுடையது, ஆண்களுக்கு இழிவு தரக்கூடியது என்பதாகும். ’ஆண்மை’ உள்ள ஒருவனையே பெண் விரும்புவாள் என்று முதலாளித்துவமும், ஆணாதிக்கமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதே பெண்கள் பற்றிய தவறான பார்வைக்கு காரணமாய் இருக்கிறது. இது ஆண்களின் மனதில் ‘ஆண்மையுடன்’ இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், வெள்ளைத் தோலோடு இருக்க வேண்டும் எனும் வேட்கையை விதைக்கிறது.மூன்றாம் பாலினத்தவர் அவமதிக்கப்படுவதற்கு இது போன்ற ஆண்மை வாதங்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. முதலாளிகள் உருவாக்கும் பண்டங்கள், ஆணாதிக்க சமூக ’ஆண், பெண்’ எனும் இருமைவாத கருத்தாக்கங்களையே சுமந்து வருவதால் மூன்றாம் பாலினத்தவர் நிராகரிக்கப்படுகின்றனர். மேலும் அவை கருப்பு நிறத்தை இழிவு படுத்துகின்றன, நிற வெறியை ஊட்டுகின்றன. பெண்களை வெறும் பாலியல் பண்டமாக தயார் படுத்துகின்றன. பெண்களுக்கும் அழகு ஒன்றே வெற்றிக்கான திறவுகோல் என்று அச்சுறுத்துகின்றன. அதேபோல் அறிவுக்கும், பண்புக்கும் பெண்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, ’சிக்ஸ் பேக்கும், வெள்ளை நிறமும்’ இருந்தால் போதும் பெண்கள் விழுந்து விடுவார்கள் என்று பெண்களையும் இழிவு படுத்துகின்றன. 

இமாமி ஃபேர் & ஹாண்ட்சம் ஆண்களுக்கான முகப்பூச்சு விளம்பரத்தில் உள்ள பெண்மை அவமதிப்பு மற்றும் நிற வெறி கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விளம்பரத்தை தடை செய்யக் கோரும் இந்த மனுவில் நான் கையெழுத்திடுகிறேன்.

 

 

https://www.change.org/petitions/director-emami-group-emami-group-stop-telecasting-gender-discriminating-bailwan-advertisement – இந்த தளத்தில் கையெழுத்திடலாம். 

நன்றி

http://saavinudhadugal.blogspot.in/

http://masessaynotosexism.wordpress.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *