காணாமல்போனோர் தொடர்பில் யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

சந்தியா (யாழ்ப்பாணம், இலங்கை)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் போராட்டமொன்றை கடந்த வெள்ளியன்று நடத்தியிருந்தனர். 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் போராட்டமொன்றை நடத்கடந்த வெள்ளியன்று நடத்தியிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் மற்றும் யுத்த இறுதி நடவடிக்கைளின் போது சரணடைந்து பிடிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவரதும் பெயர் விபரங்கள்  வெளியிடப்பட வேண்டும் எனவும்  அனைவரும் விடுவி;க்கப்பட வேண்டும்எனவும் அவர்களது குடும்பங்களுக்கு பதிலளிக்கப்பட வேண்டும் என  கோசங்கள எழுப்பப்பட்டிருந்தன.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் கடந்த யுத்த காலத்தில்  யாழ்ப்பாணம் பiயினரால் எவ்வாறு பேணப்பட்டதோ அதே நிலையிலேயே ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போதும்  பேணப்பட்டது.  குறிப்பாக பிரதான வீதிகளில் 7 – 8 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.  பிரதான சந்திகளில் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு  சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வாகனங்களில் இருந்து பொதுமக்கள் இறக்கி சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.  கண்டி வீதி உள்ளிட்ட பல வீதிகளிலும் இதே கெடுபிடிகளே காணப்பட்டன.  ஒட்டு மொத்தத்தில் யாழ்ப்பாணத்தில் இயல்பு வாழ்ககை பாதிக்கப்பட்டு இருந்தது.  பொதுமக்களை அச்சுறுத்தி போராட்டத்தில் கலந்து கொள்ளாது வைத்திருப்பதே  காவற்துறையினரின் நோக்கமாக இருந்தது.  எனினும் அதனையும் மீறி 200 – 300க்கும் இடைப்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஏனைய அமைப்புக்கள் பலவும்  கலந்து கொண்டிருந்தன.  இந்த ஏற்பாட்டு நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த ஜேவிபியின் மற்றுமொரு ஏற்பாட்டு அமைப்பாளரான  லலித் வீரதுங்க, குகன் முருகநாதன் என்பவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கொண்டிருந்த போது  கடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.  இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஜேவிபியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  
 

 

 

சிங்கள பொது அமைப்புகளைச் சோந்த பலரும் ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கலந்து கொண்டிருந்தனர்.

 நன்றி -படங்கள் – பிபிசி இணையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *