சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது

 யசோதா (இந்தியா)

தனக்கும், தன்னைப் போன்ற பெண் சிறுமிகளுக்கும் ஆப்கானிஸ்தான்    சமுதாயத்தினால்  கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஊடகங்கள் மூலம் உரக்க குரல் கொடுத்து வருகிறார். மலாலா, இவர் முன்னர் கல்வி கற்று வந்த பாடசாலையும் தலிபான்களால் அழிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சர்வதேச குழந்தைகள் அமைதி விருது வழங்கப்பட்டு வருகிறது. நெதர்லாந்தை சேர்ந்த KidsRights அமைப்பினால், இவ்விருது வழங்கப்படுகிறது. இம்முறை விருதுகளுக்காக 42 நாடுகளில் இருந்து 93 சிறுவர் சிறுமியர்  போட்டியிட்டனர். அவர்களில் மாலாலாவுடன் சேர்த்து ஐந்து பேர் இறுதிப்போட்டிக்கு  தேர்வாகியுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு நவம்பர் 20 இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது

தலிபான்கள் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ள மகளீர் பாடசாலைகளுக்கு தடைவிதித்திருந்ததையும், அதனால் தனக்கும், தன்னைப் போன்றவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பையும் சர்வதேச கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு பிபிசியின் ஒன்லைனில் எழுதிய பதிவுக்காக மலாலா யூசுப்ஸாயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்படும் முதல் பாகிஸ்தான் சிறுமி இவர் எனக் கூறப்படுகிறது. மலாலாவின் கருத்துரைகள்  ஏற்றுக்கொள்ளப்படுமாயின் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற மைரேட் மாகுயிர் (Mairead Maguire)) அவருக்கு விருது வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  

தனக்கும், தன்னைப் போன்ற பெண் சிறுமிகளுக்கும் ஆப்கானிஸ்தான்    சமுதாயத்தினால்  கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஊடகங்கள் மூலம் உரக்க குரல் கொடுத்து வருகிறார். மலாலா, இவர் முன்னர் கல்வி கற்று வந்த பாடசாலையும் தலிபான்களால் அழிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் உரிமை தினம் கொண்டாடப்பட்ட நிலையில்  இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு இவ்விருது கிடைக்குமானாலும்,  தனது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும், இப்பகுதியில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு தொழில் நிறுவனம் தொடங்கி எதிர்காலத்தில் அவர்கள் சொந்த காலில் நிற்கும் நிலையை ஏற்படுத்துவேன் என மலாலா சூளுரைத்துள்ளார். இவ்வளவுக்கும்  அச் சிறுமியின்  வயது 13 என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.

 

இதே வேளை ஐந்து பேரில்  ஒருவரான தென்ஆபிரிக்காவை சேர்ந்த Michaela Mycroft (17) க்கு சிறுவர்களுக்கான சமாதானத்திற்கான பரிசு  21.11.2011 அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கும் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற மைரேட் மாகுயிர் (Mairead Maguire) பரிசு வழங்கவுள்ளார்.

Chaeli என அழைக்கப்படும் மைகெலா தென்ஆபிரிக்காவில், ஊனமுற்ற சிறார்களின் உரிமைகளுக்காக Chaeli Champign திட்டத்தை கொண்டு நடத்தியமைக்காக இப்பரிசு வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறார்.Michaela Mycroft

1 Comment on “சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *