இலங்கையில் அண்மையில் பெண்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

SRI LANKA-UNREST-FUNERAL

பெண்களின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருத்தல் மற்றும் சட்டவாட்சியில்லாமை ஆகியவை பற்றிய பெண்களின் அறிக்கைஇந்த அறிக்கையானது பாதிக்கப்பட்ட பெண்களினதும் வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றும் பெண்கள் அமைப்புக்களினதும்; நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

டக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த பல பெண்கள் 2011 ஆகஸ்ட் மாதத்திலே தனிப்பட்ட ரீதியிலே இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டிருக்கின்றனர். பொதுவாகப் பெண்களை இத் தாக்குதல்கள் அச்சமும் பீதியும் கொண்டவர்களாக மாற்றியிருக்கின்றது. இந்த இனந் தெரியாத மர்ம மனிதன் கிரீஸ் மனிதன் என்றே பொதுவாக அனைவராலும் அழைக்கப்படுகின்றான். இச் சம்பவங்களும் அதற்கு பதிற்செயற்பாடாற்றிய சட்டத்தை அமுல்படுத்தும் முகவர்களினதும் அரசாங்கத்தினதும் பாங்கானது வடக்கு மற்றும் கிழக்கில் நிலவும் சட்டம் மற்றும் ஓழுங்கு தொடர்பான நிலைமையில் காணப்படும் பாரிய பிரச்சினையினையே எடுத்துக் காட்டுகின்றது. சட்டவாட்சியின் இயலாமையும் சட்டத்தை அமுல்படுத்தும் முகவர்களின் தொடர்ச்சியான இயலாமையும் அல்லது தாக்குதலை நடத்தியோரைச் சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான ஆர்வமின்மையினையுமே இவை எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறு நடத்தப்படுவதாகக் கூறப்படும் தாக்குதல்கள் வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியே நடப்பதையும் நாம் அவதானித்துள்ள போதிலும் இந்த அறிக்கையானது இந்தப் பிராந்தியத்தில் மட்டுமே கவனம் குவிக்கின்றது.
 

யுத்தத்தின்பின்னர் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெண்கள் தமது வாழ்க்கையைத் தற்போதுதான் மீளக் கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். இப் பகுதியில் வாழும் கணிசமான எண்ணிக்கையான குடும்பங்கள் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் பலவற்றிற்குப் பாதுகாப்பான வீடுகள் இல்லை. இக் காரணத்தினால் இந்தச் சமுதாயங்கள் பாதிப்புறு நிலையிலும் ஆபத்திற்கு எளிதில் இரையாகும் நிலையிலும் வாழ்ந்து வருகின்றன. இச் சூழமைவிலேயே இத் தாக்குதல்கள் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். சமுதாயத்தில் குழப்பத்தினையும் பயத்தினையும் உருவாக்குவதற்காகப் பெண்களைக் குறிப்பாக இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில் இச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி பெண்களைத் துன்புறுத்துவதற்காகவும் சிறு திருட்டுக்களை மேற்கொள்வதற்காகவும் இதே போன்ற சம்பவங்களை வேறு தனி நபர்களும் நிகழ்த்தி வருகின்றனர்.

greenwave12

டக்குகிழக்கிலுள்ள மக்கள் கடந்த 30 வருடங்களாக அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தின் காரணத்தினால் இந்த மக்கள் மரணத்தினையும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பினையும் கைதுகளையும் தடுத்து வைப்புக்களையும் சந்தித்து தற்போதுதான் தம் வாழ்க்கையினைக் கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளனர். இந்தத் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் மக்களின் வாழ்வினில் மீ;ண்டும் பயத்தினையும் பீதியினையும் ஏற்படுத்தியிருக்கின்றன, குறிப்பாகப் பெண்களின் வாழ்வினில் இந்நிலைமைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. யுத்தத்தின் கோர வடுக்களைச் சுமந்து வாழ்பவர்கள் பெண்களே. இப் பெண்களே மீண்டும் பாதுகாப்பின்றி வாழ்வதற்குப் பலவந்தப்படுத்தப்பட்டுள்ளனர். பல சமுதாயங்களில் அச்சத்தின் மட்டமானது மிகவும் உச்ச நிலையினை அடைந்து காணப்படுகின்றது. கலவரமடைந்த சமுதாயத்தினர் தமது பாதுகாப்பினைத் தாமே தேடிக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொலிசார் எதிர்வினையின்றி இருக்கும் இத் துரதிர்~;டமிகு சூழலில் மக்கள் சட்டத்தினைத் தம் கைகளில் எடுப்பதற்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமுதாயத்தின் மத்தியில் காணப்படும் அச்சமும் மக்கள் மத்தியில் காணப்படும் அச்சமும் அரசாங்கம் வழங்குகின்ற பாதுகாப்பிலே மக்கள் நம்பிக்கை இழந்ததுமே தாக்குதல் நடத்துவோர் மீதும் மேலும் அவ்வாறு தாக்குதல் நடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் ஏனையோர் மீதும்  மக்கள் தாக்குதல் நடத்தக் காரணமாகும். இது தனி நபரொருவர் தன் மக்களுக்காக நீதி வழங்குவதை மீண்டும் தொடக்கியுள்ளதுடன் தனி நபர்கள் இலக்கு வைக்கப்படுவதற்கும் இட்டுச்சென்றுள்ளது. இது சட்டமற்றுப் போயுள்ள நிலைமைக்கும் இராணுவமயமாக்கத்திற்கும் பங்களிப்பு வழங்கத் தொடங்கியுள்ளது.
SRI LANKA-UNREST-FUNERAL

பெண்களுக்கெதிரான வன்முறையானது வடக்கிலும் கிழக்கிலும் துரிதமாக அதிகரித்துள்ளது. வன்முறைக்கு முகங்கொடுத்த பெண்களுக்கு நீதி கிடைப்பது என்பது இலங்கையில் அரிதான ஒன்றாகவே இருந்து வருகின்றது. பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய வழக்குகள் அரிதாகவே நீதி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. பாலியல் வல்லுறவு வழக்குகளிலும் வல்லுறவை நிகழ்த்தியோர் அரிதாகவே சிறையிலடைக்கப்படுகின்றனர். பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பாகக் காணப்படும் சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாப்புப் பெறும் இக் கலாசாரமானது கிறீஸ் மனிதனின் தாக்குதல் மூலமாக மீண்டும் துலாம்பரமாக்கிக் காட்டப் படுகின்றது. தாக்கப்பட்ட பெண்கள் பற்றிய கரிசனை குறைவாகவே காணப்படுகின்றது. ஊடகமானது இச்சம்பவங்களின் சுவாரசியங்களை அதிகரித்து அதில் ஒளிந்துள்ள மனித உரிமை மீறல்களையும் அராஜகத்தையும் அடக்கி வாசிக்கும் போக்கினைக் காட்டுகின்றது. தாக்குதலுக்குள்ளான பெண்கள் பொய் கூறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். சில வைத்தியசாலைகள் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்குக் கூட மறுத்திருக்கின்றன. இத் தாக்குதலின் காரணமாகப் பெண்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இப் பெண்களின் நடமாட்டமானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்கள் வேலைகளுககுச் செல்வதும் தடைப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களைச் சேர்ந்த பல பெண்கள் நாட்கூலிகளாகவும் விவசாயிகளாகவும் அரசாங்க அலுவலகங்களில் சிற்றூழியர்களாகவுமே பணிபுரிகின்றனர். அச்சத்தின் காரணமாகவும் பாதுகாப்புப் பற்றிய குடும்பத்தினரின் கரிசனை காரணமாகவும் இப் பெண்கள் வேலைக்குச் செல்லாமலிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது இவர்களின் பொருளாதார உரிமைகளைக் கீழறுப்பதுடன் இவர்கள் உதவுகின்ற குடும்பங்களையும் பாதித்துள்ளன. பல பெண்கள் தமது குடுமபத்திற்கு தன்னந்தனியே நிதி ரீதியாக உதவி வழங்கி வருகி;ன்றனர். பல கிராமங்களில் பெண்கள் இரவிலே ஒரு பொது இடத்திலே ஒன்றாகக் கூடி தம் எண்ணிக்கையினைக் கொண்டு தாம் யுத்த காலத்திலே பாதுகாப்புத் தேடியது போல் பாதுகாப்புத் தேடிவருகின்றனர். இப் பெண்கள் பல இரவுகளாகத் தம் இயற்கைத் தேவையினைக் கூடக் கழிக்கச் செல்ல முடியாதவர்களாகவும் இரவிலே தம் நிம்மதியான உறக்கத்தினைத் தொலைத்தவர்களாகவும் அல்லலுற்று வருகின்றனர். புனித ரமலான் மாதத்திலே தமது சமயக் கடமைகளை அனு~;டிக்க முடியாத நிலையில் முஸ்லிம் பெண்கள் மேலதிக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

தாக்குதல்களில் பெரும்பான்மையானவை பெண்களை இலக்கு வைத்து இரவிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ள பல சம்பவங்களில் தனிப்பட்ட பெண்கள் தம்மைத் தாக்க வந்த நபர்களை தமது இருப்பிடங்களில் வைத்துக் கண்டுள்ளனர். தாக்க வந்தவர்கள் கறுப்பு நிறத்திலான ஆடை அணிந்தவர்களாகவும் தம் முகத்தினைத் துணியினாலோ அல்லது கரி பூசியோ மறைத்திருந்ததாகவுமே இவர்களைக் கண்ட பெண்கள் குறிப்பிட்டுள்ளனர். சில சம்பவங்களில் பெண்கள் சிறு காயங்களுக்கும் இலக்காகியிருக்கின்றனர்.

பெண்கள் உதவி கோரிக் கூக்குரல் எழு;பபிய பல சம்பவங்களில் அல்லது பயத்தால் அலறிய பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் இராணுவ அல்லது கடற்படைச் சோதனைச் சாவடி இருக்கும் திசையினை நோக்கியே ஓட்டம் பிடித்திருக்கின்றனர். தாக்குதல் நடத்த வந்தவர்கள் தமது விரல்களுடன் கூரிய உலோக நகங்களைப் பொருத்தியிருந்ததாகப் பல பெண்கள் குறிப்பிட்டிருந்தனர். கிராம மற்றும் நகரப் பிரதேசங்களில் இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள் இருக்கின்ற போதிலும் தாம் உதவி கோரிக் கூக்குரல் எழுப்பிய போது இராணுவ வீரர்கள் தலையிடவோ அல்லது உதவி செய்யவோ வரவில்லை எனக் கண்ணால் கண்ட சாட்சியினரும் பாதிக்கப்பட்டவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தாக்குதல் நடத்தியோருக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் குற்றஞ் சாட்டியுள்ள போதிலும் இது நிரூபிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் இராணுவமோ அல்லது பொலிசாரோ இது தொடர்பாக எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என்பதையும் பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியோரைக் கைது செய்யாமலும் அவர்களை விசாரிக்காமலும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளனர் என்பதையும் இங்கே வலியுறுத்தியாக வேண்டும். கைது செய்யப்பட்டு சட்டத்தை அமுலாக்குவோரிடம் கையளிக்கப்பட்ட இவ்வாறான தாக்குதல் நடத்துவோர் எவருமே நீதி மன்றத்தின் முன் கொண்டு வரப்படவில்லை.  கிறீஸ் மனிதர்கள் என யாருமே இல்லை என்பதையே பொலிசார் உத்தியோகபூர்வமாகக் கூறி வருகின்றனர். எவ்வாறாயினும் தமது கூற்றுக்கு மறுதலையாக கிறீஸ் மனிதர்கள் பற்றிய தகவல்களை நாட்டின் பல பாகங்களிலும் இவர்கள் வழங்கியிருக்கின்றனர். அத்துடன் கிறீஸ் மனிதர்களைப் பிடித்தால தாம்; வழங்கும்; தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை எடுக்குமாறு கூட்டம் வைத்து மக்களிடம் தெரிவித்துமிருக்கின்றனர். விரக்தியுற்ற மக்கள் தம் கரங்களில் சட்டத்தினை எடுப்பதற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாகத் தாக்குதல் நடத்த வந்த பல நபர்கள் கிராமத்தவர்களினால் நையப்புடைக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பதிலாக இராணுவமானது கிராமத்தவர்கள் மீது சகட்டு மேனிக்குத் துப்பாக்கிச் சூடு நடத்;தியிருக்கின்றது. மரணம் சம்பவித்துள்ள பல சம்பவங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. அண்மையில் 21ம் திகதி ஆகஸ்ட் மாதம் பொலிசார் ஒருவர் புத்தளத்தில் உயிரிழந்துள்ளார். வெறும் சந்தேகத்தின் பேரில் கிராமத்தவர்களினால் அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும் கிறீஸ் மனிதனைப் பிடித்த அல்லது துரத்திய கிராம மக்களை இராணுவமும் பொலிசாரும் தாக்கிய சம்பவங்களும்; நடைபெற்றுள்ளன. சட்டமும் ஒழுங்கும் செயற்படாத இந்த நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும்.

பொதுமக்களுக்கு ஏற்பட்ட விரக்தியினாலும் தாக்கப்படுவதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்தினாலும் பாதுகாப்பின்மையினாலும் தாக்குதல் நடத்துவோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித் தாக்குதல்களை நடத்துவதால் ஏற்பட்ட கோபத்தினாலும் வடக்கு கிழக்கில் கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக கிராமத்தவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் பொலிசாருக்கும் இடையில் மோதல் நிலைமை காணப்பட்டு வருகின்றது.இராணுவச் சோதனைச் சாவடிகள் இருந்த போதிலும் மேலதிக இராணுவச் சோதனைச் சாவடிகளும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்ட போதிலும் கிராமத்திற்கு அண்மையிலே சிவிலியன் உடையில் இனந்தெரியாதோர் காணப்படுவதாக பல பெண்க்ள முறைப்பாடு செய்துள்ளனர். முகாம்களிற்குள் நுழைகையில் இப்பெண்கள் நிறுத்தப்பட்டாலும் கிராமத்தவர்கள் அல்லாதோர் சுதந்திரமாகக் கிராமத்தினுள்ளும் நகரத்தினுள்ளும்  நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்வரும் குறிப்பிட்ட சம்பவங்களைப் பெண்களின் செயற்பாட்டிற்கான வலையமைப்புத் தொகுத்து வழங்குகின்றது:

• புத்தளம்

ஆகஸ்ட் 12இ 2011- கரம்பை, கல்பிட்டி – தாக்குதலை நடத்த வந்த நபர் தனது வீட்டின் வேலியினைத் தாண்டி வீட்டினுள் நுழைய முற்பட்டதை பெண் ஒருவர் கண்டு உதவிக்காகக் கூக்குரலிட்டபோது அந்த நபர் மரத்தின் மீதேறியிருக்கின்றார.; எவ்வாறாயினும் கிராமத்தவர்களினால் அந்த நபரைக் கண்டுபிடிக்கமுடியாமற் போயுள்ளது. அந்த நபர் அவரின் வாயினைக் கட்டியிருந்ததாகவும் உள்ளாடையினையும் சேர்ட்டினையும் மட்டும் அவர் அணிந்திருந்ததாகவும் அப் பெண் விபரித்தார். அவரின் கரத்தில் நீண்ட கறுப்பு நிற விரல்கள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 17 2011 மளிகபுரம் – கறுப்பு நிற ஆடை அணிந்த நபரொருவர் மலசல கூடத்தின் மீது இருப்பதைக் கண்ட பெண்ணொருவர் உதவிக்காகக் கூக்குரலிட்டபோது அந்த நபர் ஓடிவிட்டார். கிராமத்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்காத போதிலும் அவ்விடத்திற்குப் பொலிசார் வந்தனர். எவ்வாறாயினும் தாக்க வந்தவரை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆகஸ்ட் 19இ 2011 – கல்பிட்டி நகரம் – தொழுது விட்டு நோன்பு துறப்பதற்காக முகத்தினைக் கழுவ வெளியில் சென்ற பெண்ணினைக் கறுப்பு நிற ஆடை அணிந்திருந்த மனிதனொருவன் பிடித்து அவருடைய கையினைக் கீறி காயமேற்படுத்தியிருக்கின்றார். கூக்குரலிட்டு உதவிக்காக அலறிய பெண்னினை கிராமத்தவர்கள் வைத்தியசாலைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். எவ்வாறாயினும் அப்பெண் பொய் சொல்கிறார் எனக் கூறி அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அப் பெண்ணுக்குப் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியவர் எனக் கூறப்படுபவரைக் கிராம மக்கள் பிடித்து அடித்துள்ளனர். தாக்குதலை நடத்தியவர் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கிராமத்தவர்கள்pல் பலரும் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த பொலிசார் அந்த நபரைக் கூட்டிச் சென்று அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். நபருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்ததுடன் அவரை அம்புலன்ஸ் வண்டியில் சிலாபம் வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையின் பக்கச்சார்பான இந்த இரட்டை நிலைப்பாட்டினை அவதானித்த கிராமத்தவர்கள் வைத்தியசாலையினைத் தாக்கினர்.

ஆகஸ்ட் 20 2011 பாலாவி – தாக்குதல் நடத்த வந்த நபரைக் கண்ட பெண் கூக்குரலி;டவே அந்த நபர் ஓடிவிட்டார். கிராமத்தவர்களினால் அந்த நபரினைக் கண்டு பிடிக்க முடியவில்லை ஆகஸ்ட் 21 2011 – மணல்காடு – அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டினிலே இனந்தெரியாத நபரினைக் கண்டதும் கிராமத்தவர்கள் அவரைத் துரத்த ஆரம்பித்தனர். அவ்விடத்திற்கு வந்த பொலிசாரினை கிராமத்தவர்கள் தாக்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து பொலிசார் வானை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே இரண்டு கிராமத்தவர்கள் அதில் காயமடைந்தனர். பின்பு கிராம மக்களைக் கொண்ட குழவொன்று பொலிசாரைத் தாக்கியதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மரணமடைந்துள்ளார். இந்த அறிக்கை தயாரிக்கப்படுகையில் புத்தளம் நகரினுள் அதிகமான இராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. புத்தளம் நகரமே ஒரு யுத்த நகரம் போல் காணப்பட்டதாகக் கண்ணால் கண்ட நபர் ஒருவர் குறிப்பிட்டார்.

• திருகோணமலை

ஆகஸ்ட் 8ம் திகதி சேருனுவரவிலும் 10ம் திகதி பாரதிபுரத்திலும் 12ம் திகதி மகாவெலிகமவிலும் கறுப்பு ஆடை அணிந்த இனந்தெரியாத நபர்கள் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கிறீஸ் மனிதனினால் ஆகஸ்ட் 9ம் திகதி பெண் ஒருவர் தாக்கப்பட்டு அவரின் கழுத்தில் காயம் ஏற்படுத்தப்பட்டது. இப்பெண் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். இப்பெண் சங்கம கிராமத்தினைச் சேர்ந்தவராவார்.

ஆகஸ்ட் 13ம் திகதி மூதூரிலே கபீப் நகரிலே கிராமத்தவர்கள் கிறீஸ் மனிதனைக் கண்டிருக்கின்றனர். நபரைத் துரத்திச் சென்றபோது அவர் அப் பிரதேசத்திலுள்ள கடற்படை முகாமுக்குள் நுழைந்திருக்கின்றார். அந்த மனிதனை வெளியே அனுப்ப வேண்டும் எனக் கிராமத்தவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். எவ்வாறாயினும் அவ்வாறு செய்வதற்கு கடற்படையினர் மறுத்திருக்கின்றனர். ஆத்திரமடைந்த கிராமத்தவர்கள் கடற்படை முகாமிற்கு முன்னாலிருந்த சோதனைச் சாவடிக்குத் தீயிட்டிருக்கின்றனர்.

ஆகஸ்ட் 14ம் திகதி கிண்ணியாவிலே கிறீஸ் மனிதனைக் கண்டிருக்கின்றனர். இராணுவத்தினர் உதவி எதுவம் வழங்காது நபரைப் பாதுகாப்பது போல் தென்பட்டபோது ஆத்திரமடைந்த கிராமத்தவர்கள் இராணுவத்தினருடன் கைகலப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். நிலைமையினை அமைதிப்படுத்த பொலிசார் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். எவ்வாறாயினும் ஆத்திரமடைந்த கிராமத்தவர்கள் பொலிஸ் வாகனத்திற்குத் தீயிட்டிருக்கின்றனர். நிலைமையினைக் கட்டுப்படுத்த முடியாத இராணுவத்தினர் மக்களை நோக்கிச் சுட ஆரம்பித்ததால் 4 கிராமத்தவர்கள் காயமடைந்தனர் அத்துடன் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

மன்னார்

ன்னாரில் தனது பாட்டியுடன் வசித்து வந்த இளம் பெண் ஒருவர் ஆகஸ்ட் 8ம் திகதி நபரொருவரினால்; தாக்கப்பட்டிருக்கின்றார். தாக்குதல் நடத்தியவர் அப் பெண்ணின் மார்பில் காயமேற்படுத்தியிருக்கின்றார். அதிர்ச்சியடைந்த பெண் வைத்தியசாலைக்குச் செல்ல மறுத்து விட்டார்.பேசாலை மற்றும் காட்டாஸ்பத்திரியினைச் சேர்ந்த பெண்கள் ஆகஸ்ட் 14ம் திகதியிலிருந்து நாளாந்தம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். நடந்த சம்பவங்கள் அனைத்திலும் தாக்குதலை நடத்தியவர் தப்பிச் செல்லக்கூடியதாக இருந்திருக்கின்றது. சில சம்பவங்களில் பெண்கள் காயமடைந்திருக்கின்றனர் ஏனையவற்றில் அவர்கள் உதவி கோரியிருக்கின்றனர்.

பேசாலையில் ஆகஸ்ட் 18ம் திகதி பல தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அன்றைய தினம் அங்கு தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலைமை அச்சத்தினை அதிகரித்ததுடன் மக்கள் விழிப்புடன் இருப்பதையும் தடுத்திருக்கின்றது.சிறுவர்களுக்காக நடத்தப்படும் விடுதியில் ஆகஸ்ட் 19ம் திகதி மூன்று நபர்கள் நுழைந்திருக்கின்றனர். தாக்க வந்த நபர்களைக் கண்ட இளம் பெண்பிள்ளைகள் உதவி கோரிக் கூக்குரலிட்டிருக்கின்றனர். கூக்குரல் சத்தத்தினைக் கேட்ட நபர்கள் அகப்படாமல் தப்பியோடிவிட்டனர்.

எருக்கலம்பிட்டியில் ஆகஸ்ட் 19ம் திகதி நபரொருவர் பெண் ஒருவரின் வீட்டினுள் நுழைந்திருக்கின்றார். சத்தத்தினைக் கேட்ட பெண் உதவி கோரிக் கூக்குரலிட்டிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் அண்மையிலுள்ள இராணுவ முகாமினை நோக்கி ஓடியிருக்கின்றார்.பேசாலையில் 1ம் மற்றும் 5ம் பிரிவில் ஆகஸ்ட் 20ம் திகதி நபரொருவர் வேலியால் பாய்ந்த போது மக்கள் அவனை கடற்கரைப் பக்கமுள்ள பொலிஸ் சாவடியினை நோக்கித் துரத்த ஆரம்பித்தனர். இந்த நபரைத் துரத்திச் சென்ற மூன்று இளைஞர்கள் இந்த நபர் கடற்படைச் சோதனைச் சாவடியொன்றினுள் உடைகளை மாற்றுவதைக் கண்டு அந்த நபரை வெளியே வருமாறு கோரிக்கை விடுத்தனர். அந்த இடத்திற்கு வந்த வேறொரு சோதனைச் சாவடியைச் சேர்ந்த கடற்படையினர் இந்த மூன்று இளைஞர்களையும் தாக்கியதால் இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனவே கிராமத்தவர்கள் கோயிலில்; ஒன்று கூடினர். அங்கு நடைபெற்ற கூட்டத்திலே கலந்து கொண்ட கடற்படை, இராணுவ மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிராமத்தவர்களை இராணுவம் தாக்கவில்லையெனவும் இராணுவ முகாமைச் சுற்றி மீண்டும் கூடினால் அவ்வாறு கூடுபவர்கள் சுடப்படுவர் எனவும் தெரிவித்தனர். தாக்குதல் நடத்த வருபவரைப் பிடித்து அவரைத் தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அவர்கள் கூறினர். சுமார் 150 இராணுவ உத்தியோகத்தர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்பனங்கட்டிக்கொட்டு, சாந்திபுரத்தில் ஆகஸ்ட் 21 ம் திகதி பெண்ணொருவரைத் தாக்க முற்பட்ட நபரொருவரை கிராமத்தவர்கள் தாக்கினர். தாக்குதல் நடத்திய நபர் அருகிலுள்ள பௌத்த விகாரைக்குள் ஓடிவிட்டார்..தாழ்வுபாடு வீதி, மன்னார் நகரிலே அதே இரவு நபரொருவர் இராணுவ முகாமிற்கருகில் வைத்து பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றார். தாக்குதலை நடத்திய நபரைக் கண்ட பிள்ளை தனது தாயை அழைத்திருக்கின்றார். அப்போது அந்த நபர் ஓட்;டம் பிடித்திருக்கின்றார். இந்த நபரைத் துரத்திச் சென்ற குடும்பத்தினர் வெளியே இரண்டு பொலிசார் நிற்பதைக் கண்டுள்ளனர். அவர்கள் பொலிசாரிடம் சம்பவத்தினை முறைப்பாடு செய்தபோது பொலிசார் சிரித்து மழுப்பிவிட்டு எதுவம் செய்யாது நின்றிருக்கின்றனர்.

• முல்லைத்தீவு

கிறீஸ் மனிதனைக் கண்டிருப்பதாகவும் மக்களை விழிப்பாக இருக்குமாறும் மக்களை வீட்;டினுள்ளேயே இருக்குமாறும் முல்லைத்தீவிலே பொலிசார் ஆகஸ்ட் 15ம் திகதி அறிவித்திருக்கின்றனர். பள்ளிவாசலில் கூட்டம் நடத்திய கிராமத்தவர்கள் இரவு முழுவதும் காவல் காப்பதற்காகக் குழுவொன்றினையும் நியமித்திருக்கின்றனர். அவதானமாக இருக்குமாறு கோரிய பொலிசார் தேவையேற்படின் அழைப்பினை ஏற்படுத்த தொலைபேசி இலக்கமொன்றினையும் வழங்கியிருக்கின்றனர். அமைக்கப்பட்ட குழு கண்காணிப்பில் ஈடுபட்டது. தன்னீரூற்றில் ஆகஸ்ட் 16ல் இரவு 10 மணியளவில் நபரொருவர் வீடொன்றிற்கு அருகில் தேவையின்றிச் சுற்றித் திரிவது அவதானிக்கப்பட்டது. இந்த நபரைக் கண்ட பெண் அலறிய போது அந்த நபர் ஓடிவிட்டார். அதே இரவு நீராவிப்பிட்டியில் கறுப்பு ஆடைகளுடன் இன்னுமோர் நபர் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கிராமத்தவர்கள் அவரைப் பிடிப்பதற்கு முன் அவர் ஓடிவிட்டார்.

ஆகஸ்ட் 17ம் திகதி இயற்கைத் தேவைக்காகப் பெண்ணொருவர் தனது பிள்ளையைப் பற்றையொன்றிற்கு அருகில் அழைத்துச் சென்றிருக்கின்றார். அங்கே ஒரு மனிதன் நிற்பதைக் கண்ட அப்பிள்ளை தாயினை அழைத்திருக்கின்றது. பிள்ளையை நோக்கி ஓடிய தாய் அந்த மனிதனின் முகத்தில் டோர்ச் விளக்கினை அடித்திருக்கின்றார். தனது முகம் முழுவதும் கறுப்பினால் மூடிய பேய் போன்ற தோற்றமுடைய நபரொருவரையே அப் பெண் கண்டிருக்கின்றார். தாக்க வந்த மனிதன் அப்பெண்ணின் கண்களுக்குச் சிவப்பு நிற லேசர் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கின்றான். அந்த வெளிச்சமானது அப்பெண்ணின் கண்களில் தாங்கமுடியாத எரிச்சலை ஏற்படுத்திய அக் கணப்பொழுதில் அவன் தப்பியோடியிருக்கின்றான். இச்சந்தர்ப்பத்திலே இப்பெண் கூக்குரல் எழுப்பவும் அவ்விடத்திற்கு வந்த கிராமத்தவர்கள் அவனைத் துரத்த ஆரம்பித்திருக்கின்றனர். மீண்டும் இதே இடத்தில் 18ம் திகதியளவில் இந்த கிறீஸ் மனிதன் காணப்பட்டிருக்கின்றான். கிராமத்தவர்கள் அவனைத் துரத்தியபோது அவன் இராணுவ முகாமை நோக்கி ஓடியிருக்கின்றான்.

நீராவிப்பிட்டியில் ஆகஸ்ட் 19ம் திகதி தமிழ்ப் பெண் ஒருவர் மலசல கூடத்திற்குச் செல்வதற்காக வெளியே சென்றிருக்கின்றார். செல்வதற்கு முன் தனது டோர்ச் விளக்கினால் அப்பிரதேசத்தை அவர் பரிசோதித்திருக்கின்றார். இருந்த போதிலும் அவர் வெளியே வருகையில் கறுப்பு ஆடையினால் மூடிய நபரொருவர் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டிருக்கின்றார். பயத்தால் அலறிய பெண் மயங்கி விழுந்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதை அவரால் ஞாபகப்படுத்த முடியவில்லை. பெண்னின் அலறலைக் கேட்ட கிராமத்தவர்கள் அவ்விடத்திற்கு ஓடிவந்திருக்கின்றனர். இருப்பினும் என்ன நடந்துள்ளது என்பதை அறிவதற்கோ அல்லது அதனை விசாரிப்பதற்கோ இராணுவ முகாமிலிருந்து யாரும் வரவில்லை. சிறிது நேரத்தின் பின் இனந்தெரியாத நபர் ஒருவர் தான் வழி தவறி விட்டதாகவும் தனக்கு வழி காட்டுமாறும் கேட்டு பைக்கில் வந்திருக்கின்றான். அவனது பைக்கிலே கறுப்பு நிறத் துணியால் சுற்றப்பட்ட பார்சல் ஒன்று இருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்ட கிராமத்தவர்கள் அவனை விசாரிக்க ஆரம்பித்த போது அவன் பைக்கிலே தப்பியோடிவிட்டான்.

பரிந்துரைகள்

வடக்கு கிழக்கிலே இராணுவம் இருப்பது மக்களைப்; பாதுகாக்கத்தான் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இப் பிரதேசங்கள அனைத்திலுமே பெரும் எண்ணிக்கையில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ள போதிலும் தாக்குதல் நடத்தும் இந்த நபர்கள் தாராளமாக வந்து போகக் கூடிய நிலைமையே காணப்படுகின்றது. அதிகரித்த இராணுவப் பிரசன்னத்தினால் மக்களுக்குப் பாதுகாப்பினை வழங்க முடியாது என்பதையே இச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

பொலிஸ் என அழைக்கப்படும் சிவில் சட்டத்தினை அமுல்படுத்தும் அதிகார அமைப்பே மக்களைப் பாதுகாப்பதற்கும் பிரதேசத்தில் சட்டத்தினையும் ஒழுங்கினையும் நிலை நாட்டுவதற்கும்; பயிற்றப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இத்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் பொலிசாரினால் பல சந்தர்ப்பங்களிலும் இயலாமலே இருந்திருக்கின்றது. இராணுவத்தினரின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டினால் தம்மால் எந்த நடவடிக்கையினையும் எடுக்க இயலாமல் இருப்பதாகப் பொலிசார் பல சந்தர்ப்பங்களிலும் சமுதாய மக்களிடம் கூறியிருக்கின்றனர். சிவில் நிர்வாகம் முழு அளவிற்குக் கொண்டு வரப்படல் வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பொலிசார் மனித உரிமைக்கான தமது கடப்பாட்டினைப் பற்றிப் பிடிக்க வேண்டும் அத்துடன் சமுதாயத்தில் தம் கட்டுப்பாட்டினை விரிவுபடுத்த வேண்டும். மேலும் பெண்களுக்கெதிரான வன்முறைக்கெதிராக எடுக்கும் நடவடிக்கைகளை  வலுப்படுத்தவும் வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டிருக்கின்றது. இத் தாக்குதல்கள் கட்டுக் கதைகள் என்பதால் இவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படமாட்டாது என வைத்தியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். தனியாரிடம் மருத்துவ சிகிச்சையை நாடுவதற்கு இப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இப் பெண்களுக்குச் சிகிச்சையினை மறுத்தமை வைத்தியசாலைகள் வேண்டுமென்றே மேற்கொண்ட ஒரு செயலாகும் மேலும் இப்பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் ஏற்க மறுக்கின்ற ஒரு செயலாகும். இலவச மருத்துவ சிகிச்சையினைப் பெண்கள் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வெணடும். இலங்கைப் பிரசைகள் என்ற ரீதியில் இது அவர்களின் உரிமையாகும்.
தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையினைச் சிவிலியன்கள் கொண்டுள்ளனர.; இத் தாக்குதல்கள் மறைக்கப்படக்கூடாது என்றும் தாக்கப்பட்டவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் உரிய சிகிச்சை வழங்கப்படல் வேண்டும் என்றும் தாக்குதல் தொடர்பான அவர்களது முறைப்பாடுகள் பதிவு செய்யப்படல் வேண்டும் என்றும்; நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பான ஊடகங்களின்; அறிக்கைகள் மக்களின் பாதிப்புறுநிலையினை முற்று முழுவதுமாகப் புறக்கணிப்பதாக இருக்கின்றன. உள்@ர் மக்களின் மனதில் பயத்தினையும் பீதியினையும் இவை உருவாக்கியுள்ளன. இத்தாக்குதல்களினால் முக்கியமாகப் பாதிக்கப்பட்டவர்களான பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தீங்கினைச் செய்தி அறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கத் தவறிவிட்டன. பொறுப்புடன நடந்து பீதியினைக் குறைத்து உரிய விசாரணையின் பின்னர் சம்பவங்களை அறிக்கையிடுமாறு நாம் ஊடகங்களுக்குக் கோரிக்கை விடுக்கின்றோம். பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படுகின்றது என்பதையும் அவர்கள் அகௌரவமிகு முறையில் சித்தரிக்கப்படவில்லை என்பதையும் அவர்கள் பற்றிய செய்திகள் கேலிக்குரியதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதையும் ஊடகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இத் தாக்குதல்களின் பின்னால் உள்ள காரணங்கள் பற்றிப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் சட்டத்தினைத் தம் கையில் எடுத்த அல்லது தாக்கியவர்களைப் பிடித்த அல்லது அவர்களைத் துரத்திய சிவிலியன்களைக் கைது செய்ததைத் தவிர அதிகார அமைப்புக்கள் வேறு எதனையும் செய்யவில்லை. தனிநபர் ஒருவர் தான் சார்ந்த குழுவிற்காக நீதி வழங்கும் முறையில் நாம் நம்பி;க்கை கொள்ளாத போதிலும் மக்களின் அச்சத்தினை அதிகார அமைப்புக்கள் புரிந்து கொள்ளும் என்றும் நிலைமையினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டிய அவற்றின்; தேவையினைப் புரிந்து கொள்ளும் என்றும் பெண்களைப் பாதுகாக்கும் என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம். இப் பெண்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் பதிற் செயற்பாடாக இருந்து வருகின்ற வடக்கு மற்றும் கிழக்கினை மேலும் இராணுவ மயமாக்குதலுக்கு இட்டுச் செல்லக்கூடாது என்றும் சிவில் சட்டத்தின் அமுல்படுத்தலாகவே அது இருக்க வேண்டுமென்றும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இச் சூழமைவிலே, மதியுரை ஆலோசிப்பு அமைப்புக்களிலும் விசாரணை அமைப்புக்களிலும் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படல் வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம். ஒரு தேசம் என்ற ரீதியில் பெண்களின் சமத்துவம், உரிமை, தொழில்வாய்ப்பு, வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் நடமாட்டம் ஆகியவற்றிற்கான உரிமையினை நினைவில் கொண்டவாறு இலங்கை அரசாங்கமானது குற்றத்தை நிகழ்த்தியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் சிவில் நிர்வாகம் மூலமாகச் சட்டத்தினையும் ஒழுங்கினையும் ஏற்படுத்தும் என்றும் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் சட்டத்தின் பிடியிலுருந்து தப்பிக் குற்றங்களை நிகழ்த்துதல் முடிவுக்குக் கொண்டு வரும்; என்றும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

 நன்றி :-INSD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *