சோமாலியாவில் 7,50,000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்

பல்லாயிரக்கணக்காண குழந்தைகளின் உயிரைக் காக்க அவசர உதவி

 சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போலபரவிக்கொண்டிருக்கிறது.ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 7,50,000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.

பிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 7,50,000 பிள்ளைகளை பட்டினி மரணத்தின் விளிம்பு நிலைக்கு கொண்டு வந்துவிட்டதாக ஐ.நா அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.

 

சோமாலியாவின் இந்நிலைமை நீடித்தால் அடுத்த சில மாதங்களில் அவர்கள் அனைவரும் மரணமடைவார்கள் என ஐ.நா எதிர்வு கூறியுள்ளது. இந்த அதிர்ச்சி தகவல்கள் இன்னமும் எத்தனையோ பேருக்கு தெரியாமல் இருக்கலாம் என்ற ஏக்கத்துடனும், தெரிந்தவரகளிலும் ஒரு சிலரை தவிர ஏன் அநேகமானோர் பேசாமல் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்துடனும் மின்னஞ்சல் வழியாக பலருக்கும் இப்பதிவு சென்றடைய காரணமாக இருந்த சென்னையை சேர்ந்த முத்தமிழ் வேந்தன் இதை ஊடறுவுக்கு அனுப்பித் தந்தமைக்கு நன்றிகளை தெரிவத்துக் கொள்கிறோம்.தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள்.

  

டு்த சில மாதங்களில் 7,50,000 பிள்ளைகள் பட்டினி மரணத்தை நெருங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏழுமாதமுள்ள சிறுமி ஒருத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவருடைய நிறை வெறும் 3.4 கிலோ மட்டுமே. ஐ.நாவின் வேண்டுகோள் பலமாக இருந்தாலும் அதற்கு உலகின் வளமுள்ள நாடுகள் மனிதாபிமானம் என்ற போர்வையில் சுரண்டலுக்கு போய்விடுவார்கள் ஆனால் சோமாலஈpயாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு பெரிதாக அக்கறை காட்டவில்லை.

ஆபிரிக்க கண்டத்தில் மிகவும் வறுமைப்பட்ட நாடாகவும் உலகிலேயே மிகவும் ஆபத்து மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இருப்பது சோமாலியா ஆகும். 1991ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தால் அப்போது ஆண்டு அவந்த அரசு கவிழ்ந்ததோடு பல விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஆரம்பமாகியது. பின்னர் அவ்வியக்கங்கள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகளாக மாறி இன ரீதியான அல்லது மதப் பிரிவின் ஆயுதக்குழுக்களாக மாறியது. இதனால் கொலைக்களமாக மாறியது சோமாலியா. அந் நாட்டில் உள்ள வறுமைக்கோட்டிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் சென்று சரணடைந்தனர். சோமாலியர்களும் தமது சொந்த நாட்டில் இருக்க முடியாது பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

தற்போது சோமாலியாவில் இருக்கும் அரசானது மூன்றில் 1 பங்கு நிலத்தைக்கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். உலக நாடுகள் அனைத்தும் சோமாலியாவை தோல்வியடைந்த நாடு என்று பொருட்பட அழைப்பார்கள். போராளிகள் ஒருபக்கம், தீவிரவாதிகள் ஒருபக்கம் மற்றும் அரசாங்கம் ஒருபக்கம் என இருக்கும் நிலையில் அங்கே உள்ள மனிதர்கள் நிலை படுமோசமாக இருக்கிறது. சத்தான உணவுகள் இன்றி மக்கள் இறப்பது என்றால் அது சோமாலியாவாகத் தான் இருக்கமுடியும்.

அளவுக்கு அதிகமான வெப்பம், மழை வீழ்ச்சி குறைவு எந்தப் பயிரையும் பயிரிட முடியாத நிலை என்பன போக 100 அடிக்கு வெட்டினால் கூட தண்ணீர் கிடைப்பது இல்லையாம். இப்படியும் ஒரு பூமியா ? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இங்கே இருக்கும் ஆடு மாடுகள் தொடக்கம் மனித இனம் வரை சொல்முடியாத துன்பத்தையே அனுபவித்து வருகின்றனர். பிறந்த நாள் முதல் இதுவரை ஒரு பிஸ்கட் துண்டைக் கூடக் கடித்துப்பார்க்காமல் இறந்த குழந்தைகள் இங்கே தான் இருக்கிறார்கள். சாக்கிளேட் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகளும் இங்கே தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ராய்டர் செய்திச் சேவையானது வெளியிட்ட படங்கள் உலகை அதிரவைத்துள்ளது.

பட்டினியால் செத்த குழந்தை இன்னும் சாகக்கிடக்கும் குழந்தை மற்றும் போசாக்கு குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள்.

சர்வதேச சூழலில் பணம் படைத்த மேற்குலக நாடுகள் சோமாலியாவை கண்டும் காணாததுபோல உள்ளனர். அங்கே எண்ணை வளம் இருந்திருந்தால் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு போய் நின்றிருக்கும் மேற்குலகம். ஆனால் அங்கே ஒன்றுமே இல்லையே.. இக்குழந்தைகளுக்கு உதவ செஞ்சிலுவைச் சங்கம் மூலமோ அல்லது அரசசார்பற்றி நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளலாம். இது எம் முன் விரிந்து கிடக்கும் மனிதாபிமானம்.


 
 


 
 

 

 

 

 

  

 

 

 


 
 


 
 


 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *