உருமி – புதிய தலைமுறைகளால் பேசப்பட வேண்டிய ஒரு கதை

மாதவி ராஜ் (அமெரிக்கா)

urumi1

சந்தோஷ் சிவன் படைப்புருவாக்கத்தில் உருவாகப் போகும் படம் பற்றி தற்போது பேசப்படுகிறது. அது தான்   ‘சிலோன்’.த ரெறிஸ்ட் – ஒரு பெண்போராளியின் கதையை மிகவும் அற்புதமாக எடுத்தவர் சந்தோஷ் சிவன் அப்படம் பல விருதுகளையும் பெற்றது. இந்த படம் பற்றி சந்தோஷ் சிவன் கூறும்போது “ இது எனது கனவுப்படம்! இதை இயக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்..” என்று சொல்லியிருக்கும் அவர், “ இது இலங்கையில் ரத்தம் தோய்ந்த இனப்போராட்ட வரலாறு அல்ல. போரில் பிழைத்திருக்கும் மூன்று சாமனியர்களைப் பற்றிய கதை. இப்போது இவரால் எடுக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படமான உருமி பலமாக பேசப்படும் படமாகவுள்ளது

வாஸ்கொடகாமாவை வைத்து பின்னப்பட்ட கதை தான் உருமி என்ற திரைப்படம்   

கேரளாவின்  முக்கிய இயற்கைச் செல்வமான மிளகு. ஆதைக் களவாடியவன் என்ற குற்றச்சாட்டு வாஸ்கொடகாமாவுக்கு உள்ளது.   கேரளாவின் வரலாற்றை வைத்து பின்னப்பட்ட கதை தான் உருமி  வாஸ்கொடகாமாவை கொலை செய்ய முனையும் ஒரு இளைஞன், மக்கள் இராணுவத்தை கட்டி எழுப்பி, தனது லட்சியத்தை நோக்கி முன்னேறுவதுதான் உருமி. கேரளத்தின்  வீரக்கலைக்கு பயனபடும்  காளியின்  முக்கிய ஆயுதம் உருமி.

 உருமி  என்ற இந்த மலையாள மொழி திரைப்படம் 16ம் நூற்றாண்டில் போத்துக்கீசரின் காலனித்துவத்துக்கு எதிரான கேரள மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் இன்றைய நவ காலனித்துவத்துக்கு எதிரான கருத்துக்களையும் கலந்து உருவாக்கப்பட்டதாகும். சில உண்மைச் சம்பவங்களை இணைத்துக் கொண்ட உருமி 2011களின் ஆரம்பத்தில் திரைக்கு வந்துள்ளது.

ஊடறுவில் வெளியான       ஒரு பெண் போராளியின் கதை…தி டெரரிஸ்ட்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *