இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்டது தமிழினப் படுகொலையே- அருந்ததி ராய்

ஊடகவியலாளர்  -சுவாதி-

Arundhati-Roy-001

 

இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை பற்றி இன்று 12.6.2011 10. 30 மணிக்கு  லண்டனில்  நிகழ்த்திய அருந்ததிராயின் உரையின் சாரம்சம் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத் ஹோல் பகுதியில் நடைபெற்ற  அருந்ததிராயுடனான சந்திப்பில் லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் சிலரும் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இங்கு  கூடியிருந்தவர்களின் மத்தியில் உரையாற்றிய அருந்ததி ராய்,

சர்வதேச நாடுகள் தமது பொருளாதார மற்றும் இராணுவ நலனுக்காக, இலங்கையில் இனப்படுகொலைகளுக்கு அனுமதி அளித்தன அளிமத்துள்ளன. இலங்கையும் இதனை உறுதி செய்துள்ளது. சிறிலங்காவில் நடைபெற்றதை முன்மாதிரியாக பின்பற்றி பிராந்திய நாடுகளும் செயற்பட வாய்ப்புள்ளது. 

இலங்கை இனப்படுகொலைகளுக்கு பின்னால் நீண்ட அமைதி நிலவுவதற்கு சர்வதேச வர்த்தக தொடர்புகளும் இராணுவ தொடர்புகளுமே  காரணமாக இருக்கிறது. சீனாவின் வர்த்தக உடன்பாடுகள், இந்தியா, பாகிஸ்தானின் இராணுவ தொடர்புகளை உதாரணமாக சொல்லலாம்.  இலங்கை தமிழ் மக்களின் உயிர், இவற்றிற்காக விலை கொடுக்கப்பட்டுள்ளது.

arunthathi1_CI

இலங்கை இன்று சிறந்த சுற்றுலா துறை மையமாகவும், ஹனிமூன் மையாமகவும், கடற்கரை விடுதிகள் மையமாகவும் திகழ்கிறது. அங்கு பெருமளவிலான மக்களுக்கான  விழாக்களும் நடைபெறுகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன் நான் இலங்கையிலிருந்த போது, அங்கு போர் நடைபெற்றதற்கான எந்தவொரு தடயமும் என்னால் காணமுடியவில்லை. அனைத்தும் மூடி மறைக்கப்பட்டிருந்தது. 

வீதித்தடைகள் அகற்றப்பட்டிருந்தன. சுற்றுலா விடுதிகள் , வர்த்தக மையங்கள் பல திறக்கப்பட்டிருந்தன. தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை ஒரு செல்வாக்கு மிகுந்த நாடாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவின் பின்புலம், பின்பலம்,  சர்வதேச நிதியுதவிகள், ஆயுத விற்பனையாளர்களின் உதவிகள் என அனைவரும்  துணை நிற்கின்றனர்.

எப்படி இந்த இன அழிப்பு நடந்தது? இப்படியான தவறு மீண்டும் நடைபெறாது இருப்பதற்கு என்ன செய்வது? என்பதே எம் முன்  எழவேண்டிய கேள்வியாக இருக்கிறது. எமக்கு தெரிகிறது. அவர்கள் மருத்துவமனைகளில் தஞ்சமடையுமாறு  கோரிக்கை விடுத்து, பின்னர் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியது.  எமக்கு தெரிகிறது யுத்தமற்ற சூனிய பிரதேசத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியமை, எமக்கு தெரிகிறது. இவையனைத்தையும் அனுமதித்து சர்வதேசம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது மற்றும் இதை தெரிந்தும் தொடர்ந்து நடைபெற அனுமதித்தது.


இதற்கு நாங்கள் என்ன செய்யலாம் என்பதே எமது தற்போதைய கேள்வி. நாம் இதற்கான அறமெது என தேடத்தேவையில்லை. ஆனால்  இப்படுகொலைகளிலிருந்து எப்படி எதிர்செய்வது என்பதற்கான பதில்களை தேட வேண்டும்.

மணிப்பூர், காஷ்மீர் பிற பிரதேசங்களிலும் இதே கேள்வி எழுகிறது. ஒரு இனத்திற்கு எதிரானதாக இருக்கலாம். அல்லது நிலப்பிரதேசத்திற்கான அல்லது இயற்கை வளத்திற்கானதாக இருக்கலாம்.  இறுதியில், அவ்வலயத்தில் ஒரு சட்ட முறைமையுடன் கூடிய, முற்றான அழித்தலையே ஒவ்வொரு அரசும் மேற்கொள்கின்றன.

இலங்கை தமிழர்கள் விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு, அரசியலில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட தமிழக தலைவர்களை தான்  நன்கு அறிந்துள்ளேன்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில்  இலங்கை தமிழர்கள் மிருகங்களை போலவும், கைதிகளை போலவும்  நடத்தப்படுகிறார்கள். அங்கு பிறந்து வளர்ந்தவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.  அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் இவற்றை இந்த அரசியல்வாதிகள் கண்டுகொண்டதில்லை எனவும்   தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *