சுவிஸ் உதவும் உறவுகள்

பெற்றோரை இழந்த குழந்தைகள் சிறுவர்கள், கணவனையிழந்த பெண்கள், என  நீங்கள் உதவ முன்வருவீர்களானால், அவர்களின் முழு விபரமும் உங்களிடம் ஒப்படைக்கபடும். அவர்களோடு நீங்கள் நேரடியாகவே தொடர்பை ஏற்படுத்தி, உங்களால் இயன்ற உதவியை நீங்கள் வழங்கலாம் ..

அன்பான தமிழ் உறவுகளே,
எத்தனையோ துன்பங்களுக்கும், துயரங்களுக்கும்
மத்தியில் ஏதோ ஒரு நம்பிக்கையோடு புலம்பெயர்ந்து
வாழும் உங்கள் அனைவரது கவனத்துக்கும் ஒரு
அவசர மடல். பல ஆண்டுகளாக எமது தாய்த்தேசத்தில் துப்பாக்கி
மோதல்களால் ஏற்பட்ட துர்ப்பாக்கியமான நிகழ்வுகளால் அழிந்து
போன எம் சொந்தங்களை அழிக்கப்பட்ட அவர்தம்
சொத்துக்களை எண்ணிப் பார்க்கும்போது, எம் கண்ணில் நீர்
முட்டுகிறது. யாரை நாம் நோவது? யாரிடம் போய்
முறையிடுவது? சொத்துக்களை இழந்து, சொந்தங்களை இழந்து, கை பிடித்த துணையை இழந்து,

பெற்றெடுத்த மகவை இழந்து, பெற்றோரை இழந்து, கைகளை, கால்களை, கண்களை என்று
அவையங்களை இழந்து இடுப்புக்கு கீழே இயங்க முடியாத
நிலைமைகள் ஏற்பட்டு, இப்படி இன்னும் பல சொல்லமுடியாத
துன்பங்களுக்குள் இலக்காகித் தவிக்கும் இந்த மக்கள்
அடுப்பில் இருந்து நெருப்பில் விழுந்த கதையாய், ஊருக்கே
உணவளித்து, உதவி புரிந்து, உளம் மகிழ்ந்த அந்த உறவுகள்
இன்று ஒருவேளை உணவுக்காய் யார் யாரிடமோ கையேந்தும்
அவலநிலை கண்டு, அதனால் ஏற்படும் எம் ஆற்றாமை நிலை
கண்டும் எம் உள்ளங்கள் ஊனமாகின்றன.

 துன்பங்களே தொடர்கதையாக, துயரங்களே வாழ்க்கையாக பெருமூச்சே சுவாசமாக, எந்த இலக்குமின்றி ஏங்கித் தவிக்கும இந்த மக்களுக்கு நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகைiயில் உதவி புரிய வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டிருக்கின்றது.இழப்பதற்கு ஏதுமின்றி மிஞ்சியிருக்கும் இந்த மக்கள் கொஞ்சி வளர்த்து எஞ்சியிருக்கும் இவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளான அந்த இளையசமூகத்தின் கல்வியிலும், எம் சமூகத்தின் எதிர்கால நலனிலும் அக்கறை கொண்டு, இந்த இளைய சமூகத்தின் கல்விக்கு நாம் கை கொடுக்க வேண்டும்.

கடை வைத்தும், கடலில் வலை வைத்தும், கமத்தொழில் செய்தும் தங்கள் குழந்தைகளை படிப்பித்துக்கொண்டிருந்த இந்த மக்களில் பலர் தங்கள் குழந்தைகள் பல்கலைக்கழகம் புகுந்தபோது மட்டற்ற மகிழ்ச்சியோடு வழிஅனுப்பி வைத்தனர். இன்னும் பலரின் குழந்தைகள் பல்கலைக்கழகம் புகுவதற்கு தயாரான நிலையில் இருந்தனர். அர்த்தமற்ற ஆயுதங்களின் அரக்கத்தனத்தால் ஏற்பட்ட அவலங்களினால், கையிலே காசில்லாத போதும் எந்தவகையிலும் தம் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று விதைநெல்லை விற்றே தம் குழந்தைகளுக்கு பணம் கொடுத்து படிப்பித்த பெற்றோர், தாம் நடத்திய வணிகநிலையங்களை மூடிவிட்டு, அதன் மூலதனத்தையே காசாக்கி தன் பிள்ளையை படிப்பித்த பெற்றோர், தாம் கடற்தொழில் செயயும் வள்ளத்தையும், வலையையும் விற்று, தம் பிள்ளைகளின் பல்கலைக்கழகப் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பணம் செலவளித்த பெற்றோர், கடைசி நேரத்தில் கூட தம் காதில் கிடந்த கடுகுமணித்தோட்டைக் கூட அறா விலைக்கு விற்று, அந்தப் பணத்தையும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தம்பிள்ளைகளுக்கு அனுப்பிவிட்டு, அகதியாய் போன பெற்றோர், அனாதையாயப் போன பெற்றோர், அழிந்துபோன பெற்றோர் ஏராளம் ஏராளம் இப்படி இழப்பதற்குக்கூட எதுவுமின்றி வாழ்ந்தபோதிலும் தம் பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றார்கள்,

பல்கலைக்கழகத்திற்கு போகப்போகிறாரக்ள் என்ற ஒரே சந்தோசத்தோடு இருந்த இந்த பெற்றோரின் அந்த ஒரே சந்தோசமும் கூட இன்று கனவாய்ப் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பலத்த நம்பிக்கையோடும், சந்தோசத்தோடும் படித்துக்கொணடி; ருந்த அந்த மாணவர்களில் பலர் தம் பல்கலைக்கழக கல்வியை தொடரமுடியுமா? என்று விழிபிதுங்கி நிற்கின்றனர். அனைத்தையும் இழந்து அனாதையாய், அகதியாய் அடைபட்டிருக்கும் பெற்றோரரால் இந்த மாணவர்களின் கல்விக்கான பணத்தேவையை பூர்த்தி செய்யமுடியாத காரணத்தால், பல்கலைக்கழக படிப்பை தொடர முடியாமல் மாணவர்கள் தவித்துக ; கொண்டிருக்கின்றனர். இன்னும் சில மாணவர்கள் பணப்பற்றாக்குறை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, பெற்றோரொடு சென்று அகதிமுகாம்களில் வாழ்கினற் சூழுநிலையும் உண்டு.இப்படி இரண்டும் கெட்டான் நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் இந்த மாணவர்கள், தமக்கு உதவிக்கரம் நீட்ட யாரும் முன்வர மாட்டார்களா? என்று ஏங்கித் தவித்தபோது இப்படிப்பட்டஇந்த மாணவர்களின் அவலநிலையைப் போக்க உதவும் உறவுகள் அமைப்பு முன்வந்தது. இப்படிப்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு, புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் எடுத்துச் சென்று, பொறுப்புக் கொடுக்கும் வேலையை ஏற்றிருக்கிறது.

உதவும் உறவுகள் அமைப்பினர் எடுத்த முயற்சியின் பயனாய் புலம்பெயர் தமிழர்களால் உதவிக்கரம் நீட்டப்பட்டு பல மாணவர்கள் பெரும் மகிழ்வோடு தம் படிப்பை தொடர்கின்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எந்த உதவியும் இல்லாமல் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு மாணவனுக்கு அரசாங்க கொடு;ப்பனவுகள் போக மேலதிகமாக மாதம ஒன்றுக்கு நான்காயிரத்தில் இருந்து 5000 ரூபா வரை தேவைப்படுகிறது. இந்தப் பணத்தை கொடுத்து உதவ யாரும் இல்லாமல் பல மாணவர்கள் மனமுடைந்து நிற்கின்றனர். ஆகவே புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் தேசத்தினது நலம் விரும்பி வாழும் மக்களான நீங்கள், துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மாணவனின் மேலதிகமான பணத்தேவையை பொறுப்பேற்று அல்லது உங்களால் இயன்றதைக் கொடுத்து, அந்த மாணவன் தன் பல்கலைக் கழகப் படிப்பை நிறைவு செய்யும் வரை அவன் கல்விக்கண்திறகக் கருணை காட்டி உதவி புரிந்து, எதிர்காலமே தெரியமாலிருக்கும் எம் சமூகத்தில் புத்திஜீவிகளின் தரத்தை உயர்த்த முன் வாருங்கள். ஓரு மாணவனோ, மாணவியோ கல்விக்கண் திறகக் , கடைக்கண் திறந்து கருணை காட்டுவீர்களேயானால், நீங்கள் நெற்றிக்கண் திறந்தவனுக்கு நிகராவீர்கள். ஒரு மாணவனுக்கு உதவ நீங்கள் முன்வருவீர்களானால், அந்த மாணவனின் முழு விபரமும் உங்களிடம் ஒப்படைக்கபடும். அந்த மாணவரோடு நீங்கள் நேரடியாகவே தொடர்பை ஏற்படுத்தி, உங்களால் இயன்ற உதவியை நீங்கள் வழங்கலாம். மேலதிகமான தகவல்களுக்கு கீழேயுள்ள தொடர்பு இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்.

– சுவிஸ் உதவும் உறவுகள்

தொடர்புகளுக்கு

சுவிஸ்

திரு. சு. வெற்றிமயில்நாதன்
திரு. ச. சுதர்சன்
திரு. சா. செல்வகுமாரன்
திரு. ம. சிறிராஜ்

0041 78312 25 75

0041 765 76 80 89

0041 794 03 77 83

hro31@hotmail.com

vetti31@hotmail.com

இலங்கை

திரு. திருவருட்செல்வன்
(கிழக்கு பல்கலைக்கழகம்)

செல்வன். செ. அசந்தன்
(உறுகுணை பல்கலைக்கழகம்)

திரு. மு. அருந்தாகரன்
(யாழ் பல்கலைக்கழகம்)

செல்வன். சு. சிந்துஜன்
(யாழ் பல்கலைக்கழகம்)

செல்வன். இ. குணா
(யாழ் பல்கலைக்கழகம்)

செல்வன். த. மதியழகன்
(ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்)

செல்வன். இ. ரகுலேந்திரா
(மொறட்டுவ பல்கலைக்கழகம்)

அல்லது ஊடறுவோடு தொடாபு கொள்ளும் பட்சத்தில் நாம் சுவிஸில் உள்ள வெற்றிமயில் நாதனோடு தொடர்புகளை ஏற்படுத்தி தர முடியும் தொடர்புகளுக்கு

udaru@bluewin.ch

விபரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *