வறுமை தன்னைத் திருமணத்தை நோக்கி விரட்டியதாக அவள் சொல்கிறாள்…

வறுமையின் பிடியிலிருந்து தப்புவதற்காக திருமணத்தை நாடும் பெண்கள் - தமிழில் ஜீரிஎன் : பொலநறுவையின் மறக்கடிக்கப்பட்ட எல்லைக் கிராமமொன்றில் திருமண வயதை அடையாத பெண்கள் வறுமையின் பிடியிலிருந்து தப்புவதற்காக திருமணத்தை நாடுவதை விபரிக்கிறார் யஸ்மின் கவிரட்ண. இது பொலநறுவையில் மாத்திரமின்றி மொனராகலை அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கையில் மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்த பெண்களில் ஒருத்தி அவள். அவள் திருமணம் செய்யும் போது வயது 15. இப்போது அவளுக்குப் 16. ஆனால் தற்போது அவள் விவாகரத்து வேண்டி நிற்கிறாள். 

 செல்வராஜா ஜயராணி முன்னர் எல்லைப் புறக்கிராமமாக இருந்த பொலநறுவையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவள். வறுமை தன்னைத் திருமணத்தை நோக்கி விரட்டியதாக அவள் சொல்கிறாள். பாடசாலையை விட்டு விலகிய அவள் தனது கணவனுடனும் பெற்றோருடைய வீட்டிலேயே வசித்து வந்தாள்.அவளுடைய திருமண வாழ்க்கை போதும் போதும் என்றாகியதும் மன்னம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தனக்கு விவாகரத்து வேண்டும் என்று முறையிட்டிருக்கிறாள். ஆனால் பொலிஸாரோ செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். ஏனெனில் அவளுடைய திருமணமே சட்டபூர்வமான ஒன்றல்ல. அவ்வாறாயின் எப்படி சட்டப்படி விவாகரத்து வழங்குவது
 
வறுமையின் பிடியிலிருந்து தப்புவதற்காக திருமணத்தை நாடும் பெண்கள் - தமிழில் ஜீரிஎன் :
  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *