தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை)
இவர்கள் சொன்னாலென்ன?
நதியின் கரைகளிலே நான்
நளினம் பழகையிலே-இவள் ஒரு
ஆட்டக்காரி
வீதியின் நடுவே நான்
மரதன் ஓடுகையிலே-நான்
வீட்டுக்கு உதவாதவள்
ஆண்மகனை எதிர்த்து நான்
கேள்வி கேட்கையிலே-இவள் ஒருஆண்மாரி
மேடை ஏறி நான்
பேச்சுப் பேசுகையிலே_இவள்
வாய்க்காரி
இவள் எமக்கு வேண்டாம்
பிறந்த வீட்டில் விலக்கல் சட்டம்
இவள்,குடும்பத்துக்கே உதவாதவள்
மாமியாரின் சுப்ரபாதம்
இவளால ஏன்டா மனமே போகுது
கட்டிய கணவன்

மனசின் நீளமான சலிப்போடு
இவர்கள் சொன்னாலென்ன....?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *