லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்திய பெண்கள் சந்திப்பு 2024 பற்றிய சிறு குறிப்பு – றஞ்சி

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு (London Tamil Women Organization) சர்வதேச பெண்கள் தினம் 2024 “Inspire Inclusion” நடாத்திய சர்வதேச பெண்கள் தினம் 2024 பெண்கள் சந்திப்பு நிகழ்வுகள் லண்டனில் 09/3/2024 சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர்கள், அரங்கியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் இளைய தலைமுறையினர் என உள்ளடங்கலாக 60 க்கு மேற்பட்ட பெண்கள் ஆளுமைகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினரின் மன்றக் கீதத்துடன் ,அகல்யா நித்தியலிங்கத்தின் வரவேற்பு உரை, தலைமையுரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கௌரி சிறிநாதன் தலைமையில் இளையோர் அரங்கில் ஆரணி நித்தியலிங்கம்,அர்ச்சனா இலங்கநாதன் ஆகியோர் live – in Relationship (Cohabitation) என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்

ஆரணி தனது உரையில் சட்டப்படி திருமணம் செய்து வாழ்பவர்களுக்கும் புரிந்துணர்வில் இணைந்து வாழ்பவர்களுக்கும் (living together) இடையில் ஏற்படும் பிணக்குகள் பற்றியும் குறிப்பாக LGBTIQA சமூகத்தினர் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். எதிர்ப்பால் காதலைக் கொண்டாடுகின்ற இந்தச் சமூகம் LGBTIQA வினரை இயற்கை, ‘இயல்பு’ என்ற வரையறைக்குள் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இயற்கையானது மற்றும் இயல்பானது என்பவைகளை யார் தீர்மானிக்கிறார்கள்? எதிர்ப்பால் காதலைக் கொண்டாடுகின்ற இந்தச் சமூகம், , lesbian காதலை இயல்பாகவாவது பார்க்கப்படுவதில்லை. அவர்களை ஏற்க மறுக்கும் சமூகம் அவர்களது குடும்பம், சமூகம் மற்றும் தொழில் வாழ்க்கையில் அதிகம் சிக்கல்களை உருவாக்குகின்ற அதேவேளை ஒருபாலீர்ப்பு வெறுப்பாளர்கள் உருவாகுதலும் காரணமாகின்றன. ஜனநாயக நாடொன்றில் மாறுபட்ட கருத்துக்கள் சிந்தனைகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் கொண்ட சூழல் இங்கு இருக்கின்றது. இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள குடும்ப அமைப்பு முறையும் உள்ளது. சமூகத்தின் மத்தியில் உறவுகள் இலகுவானதாக இல்லை என்பதே யதார்த்தம். என தனது கருத்துக்களை எடுத்தியம்பினார் ஆரணி. அர்ச்சனா இலங்கைநாதனும் ஒத்த கருத்தையே கொண்டிருந்தார்.

இதனையடுத்து நூல் அறிமுகம் மீனாள் நித்தியானந்தன் தலைமையில் இடம் பெற்றது பெண்களின் புதியபடைப்புகள் பற்றிய அறிமுகங்களை ரஜிதா, மனமும் இடம்பெயரும் (நிவேதா உதயராயனின்) கௌரிபரா மனச்சோலை – (பவானி சற்குண செல்வம்), மாதவிசிவலீலன் நிறமில்லா மனிதர்கள்-( பூங்கோதை) உமாகாந்தி மலையகா (ஊடறு வெளியீடு) ஆனந்தராணி ஓட்டிச உலகில் நானும் (மைதிலி ரெஜினோல்ட்) ராஜேஸ் பாலா The journey to Jaffna ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்

அடுத்த நிகழ்வாக பண்ணிசை இசையை ஆனந்த ராணியுடன் இணைந்த பெண்கள் நிகழ்த்தினார்கள் இவ் நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் தம்மை மறந்து இரசித்துக் கொண்டிருந்தனர்.

பண்ணிசையை தொடர்ந்து எனது உரை ‘ஆவணப்படுத்தலும் பெண்ணியமும்’
ஆவணப்படுத்தலை மேலைத்தேய பெண்ணிய அமைப்புகள் பல தரப்பட்ட ஊடக வடிவங்களில் ஆவணப்படுத்தப்படுகின்றன பெண்ணிய நோக்குடைய உண்மையான ஆராய்ச்சியாளர்கள் பொதுக் கருத்துகளையும் அவற்றைக் கோட்பாட்டுக்கு உட்படுத்தல் பற்றியும்; ஆவணங்களை உருவாக்கும் விதம், அவற்றைச் சேகரித்து ஆராய்ச்சிக்காக அவற்றை ஆவணப்படுத்துதல், சம்பிரதாய ஆவணங்களிலிருந்து மாறுபட்ட முறைகளையும் மொழியையும் பெண்களுக்கு சக்தியூட்டும் அனைத்து செயல்பாட்டினையும் பெண்ணிய சிந்தனையாளர்கள் ஆவணப்படுத்தி வந்துள்ளனர்.. பெண்ணிய சிந்தனையாளர்கள்,பெண்கள் அமைப்புக்கள், பெண் சார்ந்த படைப்புக்களை படைப்பவர்கள் தன்னார்வலர்கள் சமூக செயற்பாட்டாளர்கள்,களப்பணியாளர்கள் என பலரும் ஒத்துழைக்கும் பட்சத்தில் இப்பணிகளை நாம் முன்னெடுக்கலாம். ஆவணப்படுத்தலில் பெண்ணியம், பெண்கள் சார்ந்த விடயங்களை தமிழ்ச்சுசூழலில் குறைவாகவே உள்ளனஆவணக்காப்பகத்தை செய்வதில் உள்ள சவால்கள் என்ன? பெண்களுக்குச் சக்தியூட்டுதல் என்ற செயல்பாட்டின் அனைத்து முயற்சிகளும் எம்முன் இருக்கின்றன என்ற விடயங்களையும் நூலகம் பவுண்டேசனின் பெண்கள் ஆவணக செயற்பாட்டில் அணுசரனையாளர்களாக ஊடறுவும், லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பும் இணைந்து செயற்பட்ட விடயங்களையும் நான் பகிர்ந்து கொண்டேன்.

எனது உரையை அடுத்து லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினால் 4 வது இதழாக கொண்டு வரப்பட்ட பெண்மொழி E Magazine) பற்றிய சிறு அறிமுகமொன்றைச் நான் செய்தேன். இவ்விதழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள், ஓவியம், குறிப்புக்கள் எனப் பல படைப்புக்கள் உள்ளடங்கலாக வெளிவந்துள்ளது

தமிழ் உதயாவின் தலைமையில் ‘பாலியல் துஸ்பிரயோகம்,காரணங்களும் விழிப்புணர்வும்’ என்ற தலைப்பில்

காயத்ரி ஸ்ரீகரன், நிவேதா உதயராயன், கீர்த்தி சதீஸ்,கங்காதேவி குமாரலிங்கம், ஆகியோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். எதையும் நம்புகின்ற நம்ப வைக்கக் கூடிய வஞ்சனையற்ற நெஞ்சமும் துடிப்பும் மிக்கவர்கள் சிறுவர்கள், ஆர்வமும் உத்வேகமும் துணிவும் கொண்ட இச்சிறுவர் பராயமே ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கான விளை நிலமாகிறது. நாம் நமது சிறுவர்களின் வளமான உள்ளங்களில் எதை விதைக்கிறோம். வளர்ந்த மனிதர்கள் சிலர் இக் குழந்தைகளை தமது பாலியல் உணர்வின் தேவைகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் பாலியல் அடிப்படையிலான துஸ்பிரயோகம் செய்கின்றனர். இதுவும் இங்கு பாலியல் வன்முறைகளின் ஆணிவேர் சிறுபராயத்திலிருந்தே தொடக்கப்படுகின்றது. பெற்றோர்களை சார்ந்துள்ளது. அக் குழந்தைகளில் உளவியல் ரீதியான பாதிப்பை உருவாக்கின்றது. இவற்றை விவாதத்துக்கு உட்படுத்தி பெண்ணிய கண்ணோட்டத்தில் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வது பெண்களின் நலன்களுக்காக செயற்படும் பெண்கள்,ஆண்கள் அனைவரதும் கடமையாகும். என கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதில் நிருபாவின் சுணைக்குது என்ற சிறுகதைத்தொகுப்பு உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டனர் பாலியல் வன்முறை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இது தொடர்பான வெளிப்படையான கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும் என்ற கருத்துடன் இவ்வுரையாடல் முடிவு பெற்றது.

காயத்ரி ஸ்ரீகரனின் நன்றியுரையுடன் இச்சந்திப்பு முடிவு பெற்றது.

இன்னும் அதிகமாக கலந்துரையாடலுக்குநேரம் ஒதுக்கி கலந்துரையாட வேண்டும் என்பது என் வேண்டுகோள் மற்றப்படி மிகச் சிறப்பாக நடைபெற்ற இச்சிந்திப்பில் நானும் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி பலரின் அனுபவங்களையும் எழுத்தாளர்களையும் பல தோழிகளையும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பினருக்கும் தோழி மாதவி சிவலீலனுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *