சுடரி விருதுகள்

சுடரி விருதுகள் : பெண் ஆளுமைகளின் அங்கீகாரம் Sudari Awards : “Empowering Excellence: Celebrating Tamil Women Achievers” .27/01/2024

தகவல்: ரோசினி ரமேஸ் (Roshini Rameash )https://www.facebook.com/nirroshanyr

எமது பெண்களின் சாதனைகளுக்கான அங்கீகாரமே சுடரி விருதுகள்.விருது விழா என்பதை தாண்டி சுடரி நிதி திரட்டும் முயற்சியையும் முன்னெடுத்துள்ளது. கிழக்கிலங்கையில் பெண்களை வலுவூட்டி வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அண்மைய திட்டத்தில் கவனம் செலுத்துகின்றது. போரில் துணையை இழந்து பொருளாதார சிக்கலின் மத்தியில் வாழ்வாதார சவாலை எதிர்நோக்கி நிற்கும் பெண்களுக்கு கைகொடுக்கிறது. பெண்களுக்கான வலுவூட்டல் செயற்றிட்டம், மன மற்றும் உடல் ரீதியான தயார்ப்படுத்தலை மேற்கொண்டு பெண்கள் தம்மை தாமே சமூகத்தில் நிலை நிறுத்திக்கொள்ள வழி கோலுவதாக அமைந்துள்ளது. இதனுடாக வாழ்வாதார மேம்பாடும் சமூக மேம்பாடும் சாத்தியமாகிறது.சமூக மேம்பாடு உறுதியான சமூக மாற்றத்திக்கும் நிலைபேறான சமூக அபிவிருத்திக்கும் வழிவகுக்கும் என நம்புகின்றோம்.பிரித்தானியா வாழ் சாதனைப்பெண்களுக்கான அங்கீகாரத்துடன் தாயக பெண்களை வலுவூட்டும் சுடரி விருதுகளின் முக்கியத்துவம் உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து விழாவை சிறப்பிப்போம்.

எம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்கு கரம் கொடுப்பதாக அமையட்டும்.27/01/2024 அன்று நடைபெற உள்ள சுடரி விருது விழாவிற்கு தங்கள் நேரத்தை ஒதுக்கி கலந்து கொண்டு ஒத்துழைப்பை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

கட்டணம் £30 (16 வயதிற்கு மேல்)£15 (6-15 வயது) ,5 வயதிற்குக் கீழ் இலவசம், ஹரோ பைரன் மண்டபம் – HA3 5BD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *