சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல. அது எமது பிறப்புரிமை

இன்பா சுப்ரமணியம் (இந்தியா)

hangd 10 சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம் கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். கதறுவார்கள் தடுப்பார்கள். பலவேளைகளில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து தான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும். என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் சொல்கிறார் அவர்.

சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல. அது எமது பிறப்புரிமை என்று குரல் எழுப்பும்   பாறிபா  முஹஜெர் என்ற பத்திரிகையாளர் பட்ட கஷ்டங்கள் தான் இன்று ஈரானிய பெண்களின் பிரச்சனைகளை உலகுக்கு கொண்டுவந்துள்ளது.

 புது தில்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெஹ்ரன் விமான நிலையத்திற்கு வந்த   தளத் தகினியா இ மந்ஸௌரெஹ் ஷோஜாயி, ப்ஹர்நாஸ்,என்ற மூன்று பெண் பத்திரிகையாளர்கள், விமான  நிலையத்திலேயே கைது செய்யப்பட்டனர்.   பெண் சுதந்திரம், சட்ட பாதுகாப்பு, விவாகரத்து  கோர உரிமை கோரல், குழந்தையின் பாதுகாப்பு கோரல், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப் படவேண்டும்  என்ற கோரிக்கைகளுக்காக பல பெண்கள் கைது செய்யப்படுவது சர்வ சாதாரண விடயமாகிப்போனது இரானில். கைது செய்யப்படும் பெண்கள் காணமல் போவதும்இ தூக்கில் போடப்படுவதும் அதிகரித்துவிட்டது. ஒரு குற்றம் நடந்தால் அந்த குற்றத்திற்கு சாட்சியாக ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால்இ ஆணின் சாட்சி மட்டுமே நீதி மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஷேக்ஹோலேச்லம் என்ற பெண்    “அசர் மேகார்’ என்ற பெண்கள் அமைப்பை நடதியதற்காய் கைது செய்பட்டு மூன்று வருடம் கடுங்காவலில் வைக்கப்பட்டார். பலர் வெளிநாடுகளுக்குத் தப்பி அடைக்கலம் அடைந்துள்ளனர்.

 ஷேக்ஹோலேச்லம், ஜெல்வெஹ் ஜாவேரி, மரியம் ஆகிய மூன்று பெண்களும்,   விசாரணையின்றி சிறையில் வாடும் பெண்களை விடுதலை செய்யக்கோரி ஒரு கோடி  கையெழுத்துகளைப் பெரும் முயற்சியில் உள்ளனர்.    

நடத்தை தவறியதாக்க் குற்றம் சாட்டப்படும் பெண்கள் பொது மக்கள் முன்னிலையில் கல்லெறிந்து கொலை செய்யபடுவதைக் கண்டித்துப் பலர் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டத்தைக் கலைக்க மிளகுப்பொடிக் கரைத்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும்இ சிவப்புநிறப் பெயின்ட்டை அடித்தும் கலைக்கப்பட்டனர்.  அமைப்பாளர்கள்  பலர் கைது செய்யப்பட்டும் கண்கள் கட்டப்பட்டும், எந்த இடத்தில இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் வைக்கப்பட்டனர். இப்படி விசாரணையின்றி வாடும் பெண்கள் சோகம் ஒரு வகையென்றால்இ தூக்கில் போடப்படும் பெண்களின் நிலை மிக கொடுமையாக, எவரையும் கலங்கடிக்கும் விதமாக உள்ளது.

 ஒரு தந்தை தன் மகளை எழுபது வயது நிரம்பிய கிழவனுக்கு மணமுடிக்க உரிமை உள்ளது. அதை அந்த பெண் குழந்தையின் தாய் தடுத்தால் அவளுக்கு தண்டனை உண்டு. மனைவியாக நாலு பெண்களையும், வைப்பாட்டியாகப் பல பெண்களையும் வைத்துகொள்ளச் சட்டம் உதவுகிறது. ஒரு விபத்தில் கணவனும் மனைவியும் அடிபட்டால் கணவனுக்கு கிடைக்கும் நஷ்ட ஈட்டுத் தொகையில் பாதி தான் அந்த பெண்ணுக்கு தரப்படுகிறது.

 இஸ்லாமிய பீனல் கோட்டின் அறுநூத்தி பத்தாவது சட்டம் மிக கடுமையாகப் பெண்களைப் பாதிக்கிறது. இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு  சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் இன்னும் நாலு வருட தண்டனை முடிந்து வெளியே வரவில்லை. பரீபா எழுதிய நூல்கள் தடை செய்யப்பட்டுவிட்டன.

 சூசன் என்ற பெண்மணி, மிக பெரிய பதவியில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவர் இரானிய நாட்டின் நடப்புகள் மற்றும் கொடுமையான சட்டங்களை வெளிஉலகுக்குச் சொல்லும் விதமாக ஒரு  வலைப்பூ தொடங்கினார். அதற்காக்க் கைது செய்யப்பட்ட அவர்இ அவரது வீட்டிலேயே அவரது பிள்ளைகள் முன்பாக மிகக்கடுமையாக அடிக்கப்பட்டார். அவரது கணினி, மற்றும் அவரது உடமைகளையும் எடுத்து சென்றது காவல் துறை.

 முன்னணிப் பத்திரிகையாளரும் பெண் விடுதலைக்காக பாடுபட்டவருமான பாரீபா இன்றும் நாடு திரும்ப அஞ்சி வெளி நாட்டிலேயே தஞ்சமடைந்துள்ளார்.  நாடு திரும்பினால் கைது செய்யப்படுவது நிச்சயம் என்ற அச்சத்தில் உள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்..

 இரானியச் சட்டப்படி,  பெண் ஒன்பது வயதிலிருந்து தவறு செய்தால் தண்டிக்க படுவாள். வீட்டில் நடக்கும் தவறுகளுக்கு அதிக பட்சமாக பத்து வருட தண்டனை வழங்கப்படும். நாட்டின் சட்டத்தை மதிக்காவிட்டலோ, அல்லது அரசாங்கத்திற்கு எதிராக செயல் பட்டாலோ,  உச்ச பட்ச தண்டனையாக தூக்கு தண்டனை  வழங்கப்படும்.  சிறுமிகள் காதலித்தாலோஇ திருமணதிற்கு முன் உடலுறவு கொண்டாலோ,கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. சிறுமி அட்டேபா இஸ்லாமியச் சட்டத்தை மீற முயல்வதாக்க் கூறி தூக்கிலிடப்பட்டாள்.

 “அவளுக்கு நாளை மரண தண்டனை “

“அதற்கென்ன …நிறைவேற்று”

“இல்லை. வந்து…. அவள் ஒரு கன்னிப் பெண்”

“ஓ… அப்படியா… எனில், வழக்கம் போல், இன்று இரவு அவளைக் பாலில் வல்லுறுவு விடு. அவள் சாகும்போது கன்னியாய் இருக்கக் கூடாது. அது முக்கியம்“.

 

atefeh

Atefeh   (Hanged in public at 16 yrs)

இந்த உரையாடல் உண்மை என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், நம்பித்தான் ஆகவேண்டும். இதற்குச் சாட்சியாய் இருப்பவை ஈரானிய சிறைச்சுவர்களும்,  அங்கு எதிரொலிக்கும் கன்னிப் பெண்களின் அலறல்களும்.

ஈரான் நாட்டு பாசிஜ் ராணுவத்தினரின் வேலைகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் ஒரு பாசிஜ் வீரர். ருகோல்லா கோமினி கண்டுபிடித்த இயக்கம் தான் இந்த பாசிஜ் மிலிட்டரி. அதாவது நாட்டிலுள்ள பதினைந்து வயதுக்கும் நாற்பந்தைந்து வயதுக்கும் இடைப்பட்டவர்களைக் கொண்டு கட்டி எழுப்பப்படும் ஒரு மக்கள் படை. 1979ம் ஆண்டு இது துவங்கப்பட்டது. “இரண்டு கோடி இளைஞர்களைக் கொண்ட ஒரு நாடு, இரண்டு கோடி போர் வீரர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்” எனும் அறைகூவலுடன் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த இயக்கம்.

 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். அல்லது வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய முக்கியமான பணி நாட்டில் மத நம்பிக்கைகளைப் பரப்புவது, மத மீறல்களைத் தடுப்பது, வழிபாட்டு இடங்களைப் பாதுகாப்பது, மற்றும் போர்களில் ஈடுபடுவதாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தலைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதை மறுப்புச் சொல்லாமல் நிறைவேற்றுவது தான் இவ்வியக்கத்தின் முக்கிய பணியாய் இருந்த்து.

 மஹ்மத் அஹ்மதின்ஜா கடந்த ஜூன் மாதம் ஈரானின் பிரதமாரகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய தேர்தலே ஒரு பித்தலாட்டம் என அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பெரும்பாலான நாடுகள் பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டன. இந்தியா வழக்கம் போல வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு நமக்கெதுக்கு வீண்வம்பு என சைலண்டாகி விட்டது. ஈரானிலோ இவருக்கு எதிராய் பலத்த பலத்த போராட்டங்கள் நடைபெற்றன.

 இந்தப் போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 13 வயதான ஒரு சிறுவனும், 15 வயதான ஒரு சிறுமியும் அடக்கம். பார்க்கவே ரொம்ப சின்னப் பசங்களாக இருக்கிறார்களே என அவர்களை விடுவித்துவிட்டார் ஒரு பாசிஜ் வீரர். அவ்வளவுதான் அவரைத் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டார்கள். காரணம் ஈரானின் பார்வையில் 9 வயதான சிறுமிகளும்இ 13 வயதான சிறுவர்களும் பெரியவர்கள்!

இவர் சமீபத்தில் “ஜெருசலேம் போஸ்ட்” பத்திரிகைக்கு அளித்த பேட்டி தான் உலகையே உலுக்கி எடுக்கிறது.

 எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.  என் பெயரை சொல்ல மாட்டேன் என அச்சத்துடன் ஆரம்பிக்கிறார் அவர். நான் பாசிஜ் வீரன். பதினாறு வயதில் நான் பாசிஜ் குழுவில் சேர்ந்தேன்.  சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. எனக்கு சாப்பாடு போட வழியில்லாத அம்மாஇ எனக்கு சாப்பாடாவது கிடைக்கட்டும் என பாசிஜ் குழுவில் சேர்த்து விட்டார். இல்லாவிட்டால் பட்டினியில் செத்துவிடுவேனோஇ அல்லது போதைக்கு அடிமையாகி விடுவேனோ எனும் பயம் அம்மாவுக்கு.

 பாசிஜ் குழுவில் எக்கச்சக்கமான சிறுவர்கள் உண்டு. அவர்களுக்கு நிறைய அதிகாரங்கள் உண்டு. சிறு வயதிலேயே ரவுடிகளைப் போல அவர்கள் சுற்றித் திரிவார்கள். கடைகளில் பணம் கொடுக்காமல் பொருட்களை எடுத்துச் செல்வார்கள். இளம் பெண்களைப் பார்த்தால் “தொட்டுத் தொட்டு” சில்மிஷம் செய்வார்கள். இளம் பெண்கள் மறுப்புச் சொல்லாமல் ஒத்துழைக்க வேண்டும். இதெல்லாம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. ஒரு விதத்தில் இதெல்லாமே சிறுவர்கள் மீதான வன்முறைதான் – என்றவர் தொடர்கிறார்.

 எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. தலைவன் அலி ஹமினீ இடும் செயலை நாங்கள் செய்கிறோம். கொல்வதோ, அழிப்பதோ, தடுப்பதோ எதுவானாலும் சொல்வதைச் செய்வேன். பொதுவாக அரசுக்கு எதிரான கலவரங்களைத் தடுப்பதில் எங்களுடைய பணி கடுமையாகவே இருக்கும். ஆனால்…. என நிறுத்தியவர் பிறகு சொன்னவை தான் உலுக்கி எடுக்கும் சம்பவங்கள்.

 கொஞ்ச நாட்கள் சிறைச்சாலையில் பணியாற்றினேன். சிறைச்சாலையில் ஏராளம் சிறுமிகளும், இளம் பெண்களும் இருப்பார்கள். ஒன்பது வயதாகிவிட்டாலே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்பது ஈரானியச் சட்டம்.

 கன்னிப் பெண்களைக் கொல்லச் சட்டம் இடம் தராது. அதனால் அதற்கு முந்தின நாள் இரவில் அந்தப் பெண்ணை ஒரு வீரன் முறைப்படிக் “கல்யாணம்” செய்து கொண்டு உறவு கொள்ள வேண்டும். அப்போது தான் மறுநாள் “சட்டப்படி” அவள் கொல்லப்படப் முடியும். கன்னித்தன்மையுடன் செத்துப் போனால் அவர்கள் சொர்க்கத்துக்குப் போய் விடுவார்கள் என்பது மதநம்பிக்கை.

 இந்த காலகட்டம் தான் எனக்கு மிகவும் கடினமான காலம். 18 வயதிலேயே பெண்களைக் “கல்யாணம் செய்து பாலியல்வல்லுறுவு செய்யும் பணியைக் கொடுத்தார்கள். எனது பணிக்காக எனது மேலதிகாரிகளெல்லாம் என்னைப் பாராட்டுவார்கள். என் மனது மிகவும் வேதனைப்படும். சின்னச் சின்னப் பெண்களெல்லாம் என் காலைப் பிடித்துக் கெஞ்சுவார்கள். அவர்களுக்கு மரணம் பயமில்லை இந்த பாலியல் உறவு தான் பயம். எங்கே நரகத்துக்குப் போய்விடுவோமோ என பயந்து அலறுவார்கள்.

 சில பெண்கள் நகங்களினால் தங்கள் முகம் கழுத்து உடல் என எல்லா இடங்களையும் கீறிக் கொள்வார்கள். கதறுவார்கள் தடுப்பார்கள். பலவேளைகளில் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து தான் என் கடமையைச் செய்ய வேண்டியிருக்கும். என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் சொல்கிறார் அவர்.

 அந்த திருமணங்களெல்லாம் சட்ட பூர்வமானவை. எனவே சட்ட ரீதியாகவோ, மத ரீதியாகவோ நான் எதுவும் தவறு செய்யவில்லை. ஆனால் நான் செய்வது கொடுமை என்பது என் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். எனக்கும் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உண்டு எனக் கவலையுடன் முடிக்கிறார் அவர்.

 மனித உரிமை மீறல் நடக்கும் இந்த விடயங்களை பார்த்து சேகரித்து நடவடிக்கை எடுக்க போவதாக கூறும் மனித உரிமை கழகம் (?) எப்போது நடவடிக்கை எடுக்கும்?? பத்திரிக்கைச் சுதந்திரம் வேண்டாம்.. சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல. அது எமது பிறப்புரிமை, என்ற இவர்களது குரல் எங்கும் ஒலித்துக் கேட்க வேண்டியவர்கள் காதுக்கு போகுமா?

இன்பா சுப்ரமணியம் சிக்கிமுக்கி இதழுக்காகஎழுதிய இக்கட்டுரை தேவையும் அவசியமும் கருதி நன்றியுளடன் பிரசுரமாகிறது.

1 Comment on “சுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல. அது எமது பிறப்புரிமை”

  1. மிக்க நன்றி றஞ்சி.. இன்றுதான் பார்க்கிறேன்.
    நேசமுடன்
    இன்பா சுப்ரமணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *