தடையால் புத்தக வாசிப்பைத் தடுக்க முடியாது’ – அருந்ததி ராய்

புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தகத்தைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு எதிராகப் பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக அருந்ததி ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Image Credits: Business Standard

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நான் எழுதிய ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ (Walking With The Comrades) புத்தகத்தைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) அச்சுறுத்தல் மற்றும் அழுத்தத்தைத் தொடர்ந்து அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.“இதைக் கேள்விப்பட்டவுடன் நான் சோகம் அடைவதற்குப் பதிலாக மகிழ்ச்சியடைந்துள்ளேன். ஏனெனில் அது பாடத்திட்டத்தில் இருப்பதே எனக்கு இதுவரை தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

“இது பல ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது இப்போது, பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டிருப்பதால் நான் அதிர்ச்சியோ ஆச்சரியமோ அடையவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

“அதை எழுதுவது ஓர் எழுத்தாளராக எனது கடமையாக இருந்தது. பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் அதன் இடத்திற்காகப் போராடுவது எனது கடமையல்ல. மற்றவர்கள் விரும்பினால் அதைச் செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவராயினும், இது பரவலாக வாசிக்கப்பட்டு வருகிறது. நாம் முன்கூட்டியே அறிந்ததுபோல், தடைகள் மற்றும் நீக்கங்களால் புத்தக வாசிப்பைத் தடுக்க முடியாது” எனவும் அருந்ததி ராய் வலியுறுத்தியுள்ளார்.

“குறுகிய, ஆழமற்ற, பாதுகாப்பற்ற மனநிலையுடன் இலக்கத்தை அணுகும் தற்போதைய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் அவர்களின் விமர்சகர்களுக்கு மட்டும் தீங்கு விளைவிக்காது. இது அவர்களின் லட்சக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் தீங்கை விளைவிக்கும். இது ஒரு சமூகமாகவும் நாடாகவும், உலகில் ஒரு மரியாதையான இடத்தைப் பிடிக்கப் பாடுபடும் நமது கூட்டு அறிவுசார் திறனை மட்டுப்படுத்தும்” எனக் கூறியுள்ளார்.

Thanks

https://www.aransei.com/news/prohibition-does-not-prevent-book-reading-arundhati-roy/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *