தமிழ் பெண் அரசியல் ஆளுமைகள்

விஜயகலா மகேஸ்வரன்சசிகலா ரவிராஜ்அனந்தி சசிதரன் இவர்கள் தமிழ் பெண் அரசியல் ஆளுமைகள் என்று தேர்தலில் நிறுத்தி , அவர்கள் கணவர் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்பதும் அவர்களுக்கு நிகழும் அநீதிகளுக்கு கணவரின் செயற்பாடுகளை நினைத்தாவது நீதி கிடைக்க உதவுங்கள் என்பதும் தான் தமிழர்களின் பெண்ணிய அரசியல் எனில் ..பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.சசிகலா விடயத்தில் சுமந்திரனை பழிதீர்க்க அவரை பகடைக்காயாக பயன்படுத்திக்கொள்ளும் அரசியலை புரிந்து கொள்வதும் அதை எதிர்த்து விழிப்புணர்வூட்டுவதும் தான் இப்போது பெண்கள் செய்ய வேண்டியது.சுமந்தரனுக்கு எதிராக சசிகலாவை தூண்டிவிட்டு அரசியல் செய்பவர்கள் பேரினவாதத்திற்கு துணை போகிறார்கள். சுமந்திரனை விட அவர்கள் தான் முதலாவதாக எதிர்க்கப்பட வேண்டியவர்கள்.அரசியல் அறிவில்லாமல் அரசியலுக்கு வரும் பெண்கள் இப்படித்தான் கட்சி அரசியலில் யாருடைய நலனுக்காகவாவது பகடைக் காய்களாகி விடுகின்றனர்.பெண்களை அரசியல்மயப்படுத்துவது என்பது ஓட்டரசியலுக்குள் இழுத்து வருவதல்ல.குறைந்த பட்சம் தன்னைச் சுற்றி நடைபெறும் அரசியல் சித்து விளையாட்டுகளையாவது புரிந்து கொள்ளும் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் ஓட்டுகளை வாங்கி என்ன பிரயோசனம்?சாதிய அடக்குமுறைகளை பேசினால் தமிழரை பிளவு படுத்துவதாக கூப்பாடு போடுகிற அதே தமிழர் தான் , அங்கஜனை சசிகலாவிற்கு நீதி பெற்று தரும் பரோபகாரியாக முன் நிறுத்துகிறது. அங்கஜன் போன்ற வாள்வெட்டு சண்டியர்களை தமிழரின் தலைமையாக ஆளுமைகளாக வளர்த்துவிடுவது பேராபத்தானது. உட்கட்சி பிரச்சனையை கூட தீர்த்துக்கொள்ள முடியாமல் பொதுவெளியில் அசிங்கப்படுபவர்கள் தான் தமிழரின் பிரச்சனையை தீர்க்கப் போகிறார்கள் என்பது வேடிக்கை தான்.எல்லாவற்றையும் விட காமெடி , பிரபாகரன் வரமாட்டார் என்று நினைக்கறீங்களா? அவர் வந்தா எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும் என சிவாஜிலிங்கம் சொல்வது தான்.எத்தனைகாலம் தான் தமிழர்களை ஏமாற்றப் போகிறீர்களோ?Thanks Mohana Dharshiny

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *