“பெண்களால் அரசியலில் வெற்றிபெறமுடியாது!?”ஷ்ரின் அப்துல் சரூர்

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பி ஏமாந்து விட்டது. ஏனெனில் நிலைமாறு கால நீதி கேட்கும் விடயத்தையே புறக்கணித்துக் கொண்டு இந்த நாட்டின் யாப்பை திருத்தி ஒரு நிலையான தீர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என மும்முரமாக நின்றார்கள். அதில் அவர்களுக்கு படுதோல்வி. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்தீர்களானால்……

குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களும், சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்களுமே நாடாளுமன்றத்தில் இருந்தால்தான் அரசியல் நடத்தலாம் என்ற நிலைதான் உண்டு. குறைந்த பட்சம் அடிப்படைவாதியாக அல்லது இனவாதியாகவாவது இருக்க வேண்டும், என்ற ஒரு கலாசாரம் நிலவுகிறது. இந்த அரசியல் கலாசாரத்தை உடைத்தெறிந்துகொண்டு பெண்கள் அரசியலுக்குள் வருவதென்பது அவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல.” எனக்கூறுகிறார் பெண்கள் உரிமை, மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷ்ரின் அப்துல் சரூர். சமகால அரசியல், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் சமகால விடயங்கள் தொடர்பில் கட்டுமரனுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவரது செவ்வி… த கட்டுமரன்: இலங்கை மக்கள் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கப் போகின்றார்கள். நாட்டின் சனத்தொகையில் 52 வீதத்தை வகிக்கும் பெண்கள் தரப்பிலிருந்து எந்தவொரு வேட்பாளரையும் எந்தவொரு பெரிய கட்சியும் அறிவிக்கவில்லை. ஒரு பெண்ணிய செயற்பாட்டாளராக உங்கள் கருத்து?

த கட்டுமரன்: நல்ல நோக்கம் கொண்டவர்களால் அரசியலில் வெற்றிபெற முடியாது என்கிறீர்களா?

தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. எனினும் மக்கள் விடுதலை முன்னணி காலி முகத்திடலில் நடத்திய கூட்டம் ஒரு முன்மாதிரியாக இருந்தது. நாடாளுமன்றத்தில் எந்தவொரு தவறான விடயம் தொடர்பிலும் கேள்வி கேட்கும், விமர்சிக்கும் பழக்கத்தை கொண்டுள்ள ஒரு கட்சியை நோக்கி ஒரு மக்கள் கூட்டம் வந்ததை அவதானிக்க முடிந்தது. இதுவொரு மாற்றமாக நான் காண்கின்றேன். ஆகவே கொள்கை ரீதியில் ஒரு மாற்றம் வருமோ என எண்ணத் தோன்றுகின்றது. வரலாற்று ரீதியில் அவர்களும் தவறிழைத்துள்ளார்கள். இல்லையென்று சொல்வதற்கில்லை.

த கட்டுமரன்: பெண்களின் அரசியல் பிரவேசத்தை அதிகரிக்க சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் சார் அமைப்புகள் எவ்வகையிலான நடவடிக்கைகளை எடுக்க முடியும்?

இந்த 25வீத கோட்டா மட்டும் போதுமானதல்ல. அரசாங்கத்தில் எல்லா மட்டங்களிலும் உள்ள கட்டமைப்புகள் மாற்றம் பெற வேண்டும். தேர்தல் சார்ந்த மிக முக்கியமான கட்டமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழு. அங்கே ஆணையாளர்கள்(3) மாவட்டங்களில் உள்ள உதவி ஆணையாளர்கள் என ஒரே ஒரு நபரைத்தவிர எங்கும் பெண்கள் இல்லை. ஏன் போடவில்லை? என்று வினவினால் இந்தக் கட்டமைப்பு வன்முறை சம்பந்தப்பட்டது என்பதால் பெண்களை போடவில்லை என கூறுகிறார்கள். வன்முறை இருந்தால் பொலிஸை கொண்டு வந்து போட்டு பாதுகாப்புடன் பெண்களை அரசியலில் ஈடுபடுத்த வேண்டும். வன்முறைகள் செய்பவர்களை அடக்காமல் பெண்களை வெளியே வராதே என அடக்க முடியாது. அரசும் அரசு சார்ந்த கட்டமைப்புகளும் பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.

த கட்டுமரன்: இப்பபோதுள்ள அரசு பதவிக்கு வருவதற்கு சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு கணிசமானளவு இருந்திருக்கிறது. இந்நிலையில், இந்த நான்கரை வருடங்களில் இந்த அரசு எதையும் சாதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது பற்றி..?

எதையும் சாதிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் அது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. கடந்த அரசாங்கத்திலுள்ள கொடுங்கோலர்களைவிட இவர்கள் பரவாயில்லை. நாங்கள் சிவில் சமூகமாக 2014ஆம் ஆண்டின் கடைசிப் பகுதிகளில் ஒரு பொதுவான வேட்பாளரை கொண்டு வர வேண்டும் என எண்ணியதற்கு காரணம் ஐதேகவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. எப்படியாவது அராஜகம் செய்வோரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக.இப்போது, ஊடகங்கள் ஒரளவு சுதந்திரமாக இயங்குகிறது, மக்கள் எதிர்ப்பைத்தெரிவிக்க நடத்தும் ஊர்வலங்களுக்கு தடை இல்லை என்பன என்னை பொறுத்த வரையில் ஒரு ஜனநாயகம். இந்த அரசில் அதற்கான இடங்கள் இருந்துள்ளன. இருக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம். அதேபோன்று 19ஆவது திருத்தச் சட்டம். ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்ததுடன் ஆணைக்குழுக்களை உருவாக்கியமை. இப்போது அனைவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினையே நாடுகின்றனர். ஏன்பனவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தொடர்ச்சியாக போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுவதில் அரசுமுன்னிற்கின்றது.
அதில் நல்லதொரு அனுபவம் தான் அண்மையில் இராணுவத் தளபதி நியமனம்…
ஆனாலும் தீவிரவாதம் தொடர்பில் அரசு நடந்துகொண்ட முறைகள் திருப்தி தரும் வகையில் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்க ஒரு வருடத்திற்கு முன்னரே அவர்களுக்கு தெரியும் முஸ்லிம் தீவிரவாதம் வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பது. எனினும் முஸ்லிம் சமூகத்திற்கு ஏதாவது நடந்துவிட்டால் சர்வதேச சமூகம் கேட்கும். முதலீடுகள் வராது என்பதற்காக பாராதிருந்துவிட்டனர். இதேபோல், பொதுபல சேனா அதேபோன்று ரதன தேரர் என தீவிரவாதம் கிளைபரப்புகிறது. அரசால் ஏன் ஓன்றும் செய்யமுடியவில்லை?

த கட்டுமரன்: தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை என்பதுபற்றி…?

ஆம் தமிழர் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு தருவதாகக் கூறினர். அவற்றையெல்லாம் செய்வதாக தெரிவித்து கைச்சாத்திட்டு சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கையை கொடுத்தார்கள். நாமும் நம்பிவிட்டோம்.
ஆனால் பிரதமருக்கும், ஜனாதிபதிக்குமான உள்வீட்டு சண்டையால் பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள் தான். காணாமல் போனோருக்கான காரியாலயங்கள் திறக்கப் பட்டுள்ளன. முதலாவது மன்னாரில் திறந்தார்கள். அங்கு யாருமே இல்லை. அதேபோன்று யாழ்ப்பாணத்திலும் திறந்தார்கள். ஆனால் யாரும் போகவில்லை. காரணம் இந்த அரசாங்கம் நீதி சார்ந்த அந்த அம்மாமார்களின் வேட்கைகளை, போராட்டங்களை நம்பிக்கையிழக்க செய்துவிட்டது. தொடர்ச்சியாக போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுவதில் அரசுமுன்னிற்கின்றது. அதில் நல்லதொரு அனுபவம் தான் அண்மையில் இராணுவத் தளபதி நியமனம். காணாமலாக்கப்பட்டோரின் அம்மாமார்கள் எல்லாம் கைகாட்டும் முதல் நபர் அவர் தான். அந்த வகையில் தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தினால் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

த கட்டுமரன்: தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அபிவிருத்திக்கு போதிய கவனம் செலுத்தாததால் முன்னாள் போராளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. அதுபற்றி..?

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பி ஏமாந்து விட்டது. ஏனெனில் நிலைமாறு கால நீதி கேட்கும் விடயத்தையே புறக்கணித்துக் கொண்டு இந்த நாட்டின் யாப்பை திருத்தி ஒரு நிலையான தீர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என மும்முரமாக நின்றார்கள். அதில் அவர்களுக்கு படுதோல்வி. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்தீர்களானால், எப்பெப்ப எந்ததெந்த அரசு வருகின்றதோ அந்த பக்கம் சேர்ந்து கொண்டு அமைச்சர் பதவிகளில் இருந்து கொண்டு தங்களுக்கு தேவையான விடயங்களை எடுத்துக் கொண்டு ஒரு எலும்புத் துண்டை போடுகிறார்கள் முஸ்லிம் மக்களுக்கு. உரிமை சார்ந்த அரசியல் செய்யாமல் பதவிக்காக அரசியல் செய்கிறார்கள். நான் அறிந்த அளவிற்கு தந்தை செல்வா காலத்திலிருந்து யாரும் பதவிக்காக அரசியல் செய்யவில்லை. அரசாங்கங்களில் இருந்து அமைச்சர் பதவியை எடுத்துக் கொண்டு அரசியல் செய்யவில்லை. அவர்கள் எப்போதும் எதிராக தான் இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு அபிவிருத்திகளைக் கொண்டு வருவது கொஞ்சம் கஸ்ரம். ஆனாலும் யுத்தத்திற்கு பின்னர் எங்களுக்கு வட மாகாண சபையொன்று இருந்தது. அது என்ன செய்தது? என்பதும் மிகப்பெரும் கேள்வி முன்னாள் போராளிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல்ல திட்டமொன்றை கொண்டு வந்திருக்கலாம். உடம்பு முழுவதும் செல் குத்தி இன்னும் அதனை எடுக்க முடியாமல் பலர் இருக்கின்றார்கள். முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக பலர் இருக்கின்றார்கள். உயிரிழந்தவர்களுக்கு சிலைகள் அமைப்பதை விட உயிருடன் இருப்பவர்களுக்கு பல நல்ல விடயங்களை செய்திருக்கலாம்.

த கட்டுமரன்: பெண்கள் உரிமைகள், மனித உரிமைகள் சார்ந்த செயற்பாட்டாளர் என்ற வகையில் இந்த தேர்தலில் உங்கள் கோரிக்கைகள் எவை?

‘வரலாறை நாம் திருப்பி பார்க்க வேண்டும். ஆனால் அதனை திரும்ப செய்யக்கூடாது.’ கடந்து வந்த பாதையை திரும்பி பாருங்கள் அது பிழையான பாதை. அந்த வரலாறு நிறைய காயப்படுத்தியுள்ளது. சிறுபான்மை மக்களை மாத்திரம் அல்ல பெரும்பான்மை மக்களையும். கிட்டத்தட்ட ஆறு இலட்சம் இளைஞர் யுவதிகள் புதிதாக வாக்களிக்கப் போகிறார்கள். அவர்கள் உங்களை(வேட்பாளர்களை) நோக்கி வருவதற்கு அவர்களுக்காக நீங்கள் என்ன தகவலை வைத்திருக்கிறீர்கள்.?
அடுத்து மக்கள், தேர்தலில் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டவர்களை வரவிடவே கூடாது. உதாரணமாக ஒருவர் வரக்கூடாது என்று நினைத்தால் நாம் அவருக்கு வாக்கு போடாமல் விட்டால், அவர் பெரும்பான்மை வாக்கெடுப்பது இலகுவாகி விடும். எனவே நாங்கள் எமக்கு கொடுக்கப்பட்ட தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் சரியாக செயற்படுத்த வேண்டும்Thanks :-.https://thecatamaran.org/ta/?p=9448&fbclid=IwAR0Cm0RyeUitwqrdoOOBLkeSnEFo3laXevfN7127K68KpH1ljdlo96BSXac

https://thecatamaran.org/ta/?p=9448&fbclid=IwAR0Cm0RyeUitwqrdoOOBLkeSnEFo3laXevfN7127K68KpH1ljdlo96BSXac


த கட்டுமரன்: இலங்கை மக்கள் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்கப்போகின்றார்கள். நாட்டின் சனத்தொகையில் 52 வீதத்தை வகிக்கும் பெண்கள் தரப்பிலிருந்து எந்தவொரு வேட்பாளரையும் எந்தவொரு பெரிய கட்சியும் அறிவிக்கவில்லை. ஒரு பெண்ணிய செயற்பாட்டாளராக உங்கள் கருத்துபதில் : நிறைய செய்யலாம். செய்தும் இருக்கின்றோம். 25 வீத கோட்டாவை கொண்டு வருவதற்காக கிட்டத்தட்ட சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து பெண்கள் அமைப்புகள் பாடுபட்டுள்ளன. ஆணாதிக்க அரசியல் என்பது வாக்களித்து தேர்வு செய்வதில் மாத்திரமல்ல, கட்டமைப்பு ரீதியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியிலும் அதி உயர் பீடத்தில் பெண்களே இல்லை. பெரும்பான்மை கட்சியில் ஒன்றிரண்டு பேர் இருக்கின்றனர். ஆனால் அவர்களே கூறியிருக்கிறார்கள் நாங்கள் பெயருக்கு தான் இருக்கின்றோம் என்று.
இந்த வருட ஆரம்பத்தில் நடந்த ஊள்ளுராட்சி சபை தேர்தலில் 25வீத கோட்டா இருந்தாலும் 23.8 வீதம்தான் பெண்களை கொண்டு வர முடிந்தது. அந்தப் பெண்கள் நிறைய விடயங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்தமாதிரி அரசியலுக்கு அடிமட்டத்திலிருந்து வர நாம் ஒரு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். அதேநேரம் கோட்டா என்பதற்காக பெண்களைப் பிடித்து அதற்குள் தள்ளிவிட முடியாது. முதலில் அரசியல் கலாச்சாரத்தை மாற்ற நிறைய உழைக்க வேண்டும். லஞ்சம், ஊழல், அநீதி இழைத்தவர்களை கேள்வி கேட்கவேண்டும். பெண்களை அரசியலுக்குள் வர விடாமல் தடுப்பது மாதிரியான அரசியல் கலாச்சாரங்களை சுத்தப்படுத்தி பெண்களை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டும். பெண்களுக்குரிய இடத்தை எடுத்துக் கொடுப்பது மாத்திரம் அல்ல அவர்களுக்கு தொடர்ச்சியாக உறுதுணையாக இருப்பதும் எங்கள் பொறுப்பு. த கட்டுமரன்:  அதேபோல் அரசு பெண்களுடைய பங்களிப்பை அதிகரிக்க செய்ய எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *