#WE_ARE_IN_A_SICK_WORLD!”…..# பட்டாம்பூச்சி (Papillon) Henri Charrière இன் சொந்தக் கதை …-

pattam-அருள்நிதிலா தெய்வேந்திரன்-
 
மனிதர்களின் வாழ்கைப் பயணம் பல விதமான வடிவங்களில் உண்டு. பலருக்கு வரும் அனுபவங்கள், சிலருக்கு வருவதில்லை…

அதில் முக்கியமான காரணங்கள், பண வசதி, வாழ்கை முறைகள், வசிக்கும் நாட்டுச் சட்டங்கள் என்று பல விடையங்கள் உண்டு.

அப்படி பார்த்துக்கொண்டு போகும் பொழுது, சில அனுபவங்களைத் திரையுலகம் மூலமாகவும், பல அனுபவங்களைப் புத்தக வாசிப்பு மூலமாகவும் நாங்கள் பெற்றுக்கொள்ளலாம்.என்னுடைய வாழ்க்கையில் நான் பார்க்க விரும்பாத ஒரு அனுபவம்… #மறியல்-(சித்திரவதை).பட்டாம்ப்பூச்சி (Papillon): 1931 ஆண்டு கால கட்டத்தில், France நாட்டு குற்றவாளிகள், French Guiana சிறைச்சாலைக்கு அனுப்ப படுவார்கள். அங்கு காணப்படும் கொடுமைகள், படும் வேதனைகள், சொல்லில் அடங்காதவைகளாகும்.இத்தகைய வேதனையை அனுபவித்த Henri Charrière, அவருடைய மன உறுதியின் வைராக்கியமே, அவர் சுவாசிக்கும் மூச்சின் நோக்கமாக இருந்தது.”நான் குற்றவாளி அல்ல, எனவே சிறையில் இருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டும்!” என்று முயற்சி செய்தார்.பட்டாம்பூச்சி என்று அழைக்கப்பட்ட Henri Charrière என்பவர், நெஞ்சில் பட்டாம்பூச்சி பச்சை குத்தியிருந்தார் (tattoo) அதனால், அவர் பட்டாம்பூச்சி என்று அழைக்கப்பட்டார்.

#பட்டாம்ப்பூச்சி (Papillon)
1) #புத்தகத்தைப் பற்றி,
2) #திரைப்படத்தைப் பற்றி, மற்றும்,
3) ஒரு #ஆவணப்படத்தைப் பற்றியும், சுருக்கமாக எழுத விரும்புகிறேன்.

1) இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு என்னை குழப்பி விட்டது. உதாரணம்: 23வது பக்கத்தில், ஒரு வசனம்: “மறுநாள் காப்பி குடித்துக் கொண்டிருந்தபோது, அப்பீல் செய்து கொள்வதா,….” அதில் “அப்பீல்” என்ற வார்த்தையை நான் “apple” என்று வாசித்தேன். என்னடாஇது, “காப்பி (coffee) குடித்து…. அப்பீல் செய்து கொள்வதா…” என்று இவர் யோசிக்கிறார். சில விநாடிகள் குழம்பிப்போய், கடைசியில், “apple” அல்ல “appeal” என்று புரிந்துகொண்டேன்.

வேற்று மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு எழுதும்போது, சுத்தமான தமிழ் வார்த்தைகளைப் பாவிக்கவேண்டும், அல்லது, கதையில் ஆங்கில வார்த்தைகள் மிகவும் முக்கியமானது என்றால், ஆங்கில எழுத்தில் எழுதவும்!

இப்படி எல்லாம் பீல் (feel) பண்ண வைக்கக்கூடாது. 

2) பொதுவாக பட்டாம்ப்பூச்சி புத்தகம் மற்றும் திரைப்படத்தை பார்க்கும் போது, ஒரே ஒரு கேள்வி தான் மனதில் எழுகிறது. “#விடுதலை_என்றால்_என்ன?” இதன் சரியான வரைவிலக்கணம் (definition) என்ன?

என்னைப் பொறுத்த மட்டில், ஒவ்வொரு மனிதனுக்கும் விடுதலை என்பது ஒரு அகநிலையாகும் (subjective), அதற்கு பல காரணங்கள் உண்டு: வயது, வாழ்க்கை அனுபவங்கள், வசிக்கும் இடம், சுற்றாடல், கலாச்சாரம், மதம்… என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஏன்?! பல பேர் வேறு ஒரு நாட்டுக் கலாச்சாரத்தை, தன் கலாச்சாரத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய “விடுதலை போராட்டம்” உருவாகிறது. இதில் தான் #விடுதலை என்ற எல்லையைத் தேடி பயணிக்கின்றோம் (ஆனால், அதற்கு எல்லை உண்டோ?).அதை விட, பட்டாம்பூச்சி என்பவர், சிறைச்சாலையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற வெறி, அவருடைய உயிரைப் பணியும் வைத்து செயல்படும் அளவிற்கு விடுதலை அடையவேண்டும் என்ற நோக்கம் தான், பெரிதாக இருந்தது.

“போனால் போகட்டும் போடா ” policy உள்ள நபர் போல. 

அடுத்தது, மிகவும் என்னை கவர்ந்த சில காட்சிகள்: அவரை இருட்டுச் சிறையில் அடைத்தபோது:
– “நான் உலகத்தைப் பார்க்க வேண்டும்!”
– “நான் யாருடனாவது பேச வேண்டும்.” என்று கூறினார்.

இவை யெல்லாம், #மன_அழுத்தம் சார்ந்த அறிகுறிகள். ஒரு குற்றவாளி சிறைத்தண்டனைக் காலத்தைக் கழிக்கும்போது, அவர் மறுபடியும் வெளி உலகத்தோடு சரியாக நடந்துகொள்ள வேண்டும் என்பது தான், தார்மீக நோக்கம். ஆனால், இங்கு அவர்களைப் பையித்தியக்காரர்களாக ஆக்கிவிடுகிறார்கள்.

அடுத்தது, ஒரு சிறிய விடயம், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த மதகுரு ( Father) மற்றும் தலைமைக் கன்னியாஸ்திரி (Mother Superior):
– தலையை வெட்டும் தீர்ப்பாக ஆக்கப்பட்டவர்களுக்கு (guillotine), இவர்கள், பரிசுத்த வேதாகமத்தையை (Bible), தலை வெட்டுவதற்கு முன்பு வாசிக்கிறார்கள்; செபம் சொல்கிறார்கள்; மற்றும் தலை வெட்டும் நேரம், முன்னுக்கு நிற்கின்றார்கள்.

வேதாகமத்தில் கொலை செய்யாதிருப்பாயாக என்று பத்துக்கட்டளையில் இருக்கிறது.ஆனால், அந்த மதத்தின் பிரதிநிதிகளான இவர்கள், இக் கொலைக்கு சாட்சியாக இருப்பது சரியா?

Mother Superior, பட்டாம்பூச்சியை காவல்துறையினரிடம் காட்டிக்கொடுத்துவிட்டார். Mother சொல்கிறார்: “நீ கொலை செய்யவில்லை என்றால், ஏன் பயப்பிட வேண்டும். தைரியமாக இரு, கடவுள் உன்னைக் காப்பாற்றுவார்!” என்று, “கடவுள் பிரதிநிதிகள்” செய்யும் மோசடிகள் இது.

3) குற்றம், உரிமை வரையறைகளை மீறுதல், தண்டனை, சிறை, மரணதண்டனை… என்று, Criminology பாடத்தில், விளக்கங்கள் பெற்றுக்கொண்டு இருக்கும் பொழுது, எங்கள் பேராசிரியர் ஒரு கேள்வி எழுப்பினார்: “#மரண_தண்டனை_கொடுப்பது #சரியா, #பிளையா?”. அதற்கு, “Fourteen Days in May” என்ற ஒரு ஆவணப்படத்தை போட்டுக்காட்டினார்.

Edward Earl Johnson, ஒரு Afro-American.
இவர், ஒரு 69 வயது white-American பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியும் மற்றும் ஒரு காவல்த்துறையினரை கொலை செய்த குற்றத்திற்காக, இவருக்கு கிடைத்த தீர்ப்பு : மின்சார நாற்காலியில் (electric chair) மரண தண்டனை.

20.05.1987-இல் மின்சார நாற்காலியில் தண்டனை வழங்கப்பட்டது. அதற்கு பின்பு தான், ஒரு சாட்சி மூலமாக, அவர் குற்றவாளி இல்லை என்று தெரிய வந்தது. அதுவும், அந்த சாட்சி ஒரு afro-america பெண். இவர்: “அன்று, rape & murder நடந்த நேரம், Johnson என் கூடவே நின்றான்” என்று, இந்த வழக்குசார்ந்த நபரிடம் சொன்னார். அந்த உயர்தர உத்தியோகஸ்தர்: “உன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு வீட்டுக்குப் போ!” என்று துரத்தி விட்டார்.

காரணம், Johnson ஒரு afro-american.

இப்பொழுது, என் மூளை, என் மண்டை ஓட்டைத் தட்டிக் கேட்கிறது: “கழுத்தை வெட்டுவது, மின்சார நாற்காலியில் மரண தண்டனை வழங்குவது, சிறைச்சாலையில் வன்முறைகளைப் பாவிப்பது, இனவெறி என்ற சட்ட விரோதமான செயல்களை #அரசாங்கம் செய்தால், அது சரியா?”

இல்லை! இதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஒரு மனிதனின் குற்றத்திற்கு தண்டனையாக ஆகக் கூடியது, அவரை திருந்தி வாழ்வதற்கு வழி செய்வதும், அதற்குரிய தண்டனையை வழங்குவதும் சரியானது. மரணதண்டனை சரியானதல்ல, என்ற கொள்கையுடைய சுவிசர்லாந்து நாட்டு சட்டம் போல், மனிதநேயத்தை நேசிக்கும் தன்மையுடன், மற்றய உலக நாடுகளும் மாறவேண்டும் என்பதே எனது கருத்தாகும். அது தான் நல்ல #நீதியான உலகமாகும்.

என் கேள்விக்கு Johnson’s வக்கீல் பதில் தந்து விட்டார்: “#WE_ARE_IN_A_SICK_WORLD!”

நன்றி
அருள்நிதிலா தெய்வேந்திரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *