ஐரோப்பியநாடுகளின்கருச்சிதைவுக்கொள்கைகள் – மனதை பாதித்த ஒரு திரைப்படம் பற்றி……

– பா.ஜீவசுந்தரி

jeeva 8

four manths

 

நான்குமாதங்கள், மூன்றுவாரங்கள், இரண்டுநாட்கள்எனமொத்தம் 143 நாட்கள்வயிற்றில்வளர்ந்தகருவினை, கருச்சிதைவு செய்துகொள்வதற்காகஒருபெண்எதிர்கொள்ளும்வேதனைகளும்பயங்கரங்களும்கலந்த, பரபரப்பும்திகிலூட்டும்உணர்வுக்கலவையும்ஒருங்கிணைந்தபடம்தான்4 Months, 3 Weeks and 2 Days. இப்படம், நிகோல்சௌஷெக்தலைமையிலானகம்யூனிஸநாடானருமேனியாவில், அவரதுஆட்சியின்இறுதிஆண்டுகளைப்பதிவுசெய்கிறது. அந்தநாட்டின்,பெயர்குறிப்பிடப்படாதநகரம் ஒன்றில்இக்கதைநிகழ்கிறது. ஒடிலியா, காப்ரியேலாஇருவரும்பள்ளிப்பருவத்திலிருந்தேஇணைபிரியாததோழிகள், தற்போதுபல்கலைக்கழகத்தில்கல்விபயிலக்கூடியமாணவிகள். ஒரேஅறைத்தோழிகளும்கூட. அறைத்தோழிகளுக்கேஉண்டானஇயல்பானகுறும்புகள், குறுகுறுப்புகள், பாசப்பகிர்வு, கருத்துகள், ஆசைகள், அபிலாஷைகள் இவற்றுடன் தங்கள் அந்தரங்கங்களையும் ஒளிக்காமல் மறைக்காமல் பகிர்ந்து கொள்ளக்கூடியதோழிகள்.

காப்ரியேலா எதிர்பாராத விதமாகக் கருவுறுகிறாள். தோழிகள் இருவரும் இணைந்து ரகசியமாகக் கருவைக்கலைக்கும் முயற்சிகளில்ஈடுபடுகிறார்கள். அதற்காக, மிஸ்டர். பேப்என்றநபரின் உதவியைநாடுகிறார்கள். அந்த நபர் சட்டத்துக்குப் புறம்பாகக்கருச் சிதைவுகளைச் செய்யக்கூடியவர். கம்யூனிஸ நாடான ருமேனியாவில் கருச்சிதைவு சட்டவிரோதம் என்று அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவிகளான இளம்பெண்கள் இருவரும் சட்டத்தின் கண்களில்மண்ணைத்தூவி விட்டுக்கருச்சிதைவை எங்ஙனம் எதிர்கொள்கிறார்கள் என்பதைத்தான் இப்படம்சொல்லுகிறது.பொதுவாக மூன்றுமாத வளர்ச்சியடைந்த கருவை கருச்சிதைவு செய்து கொள்வது என்பது பெண்களின்உயிருக்கேஉலைவைத்துவிடும். ஆனால், உண்மையைமறைத்துப்பொய்கூறிநான்குமாதங்களுக்குமேல்வளர்ந்தகருவைஅழிக்கும்முயற்சியைஉயிரைப்பணயம்வைத்துஎதிர்கொள்கிறாள்காப்ரியேலா.

மருத்துவமனைகளிலோ,  மருத்துவர்கள் உதவியுடனோ சட்டத்தை மீறி அதைச் செய்யமுடியாது என்பதால், ஒருஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்குகிறார்கள் தோழிகள் இருவரும். அங்கு பெயரைப்பதிவு செய்வதில் தொடங்கி அடுக்கடுக்கடுக்காகப் பொய்களை மட்டுமே விதைப்பதால்,உண்மையைச் சொல்லமுடியவில்லை.

ஒடிலியாவின் காதலன் ஆடி, தன் தாயாரின் பிறந்தநாள் விழாவில் அன்றிரவு கலந்து கொள்ளவருமாறு அழைக்கிறான். ஆனால், தானும் தன் தோழிகாப்ரியேலா இருவரும்சொந்தவேலைகளுக்காக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால்தன்னால் பிறந்தநாள் விழாவிலும் விருந்திலும் பங்கேற்க இயலாதுஎன்று தெரிவிக்கிறாள். ஆனால், அவன்அதை ஏற்கவுமில்லை; அவள் சொல்வதைக் கேட்டுசமாதானம் கொள்ளவுமில்லை.

காப்ரியேலாதான்மூன்றுமாதகர்ப்பிணிஎன்றுபொய்சொன்னதைக்கருச்சிதைவுசெய்வதில்நிபுணனானபேப், கண்டுபிடித்துவிடுகிறான். கருநான்குமாதங்களைக்கடந்துவளர்ச்சிபெற்றிருப்பதால், ஏற்கனவேபேசியதொகையைக்காட்டிலும்கூடுதலாக 3000 ரூ. தரவேண்டுமென்றுமிரட்டலாகக் கேட்கிறான். அப்படிதரஇயலாதுஎன்றால், இரண்டுபெண்களும்தன்னுடன்படுக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்றுவற்புறுத்துகிறான். இங்குஉடலுறவுஎன்பதைவெறும்செக்ஸ்என்பதோடுதொடர்புபடுத்திக்கொள்ளாமல்,சட்டமீறலாகச்செய்யப்படும்கருக்கலைப்புகளைஅதிகரிக்கச்செய்யும்ஒருதந்திரமானஉத்தியாகவும், அவனுக்கான மேற்படி வருமானமாகவும்கொள்ளவேண்டும்.

வேறுவழியில்லாமல், காதலன்ஆடியிடம்கடன்கேட்பதற்காகஅவன்வீட்டுக்குவேண்டாவெறுப்புடன்செல்கிறாள்ஒடிலியா. ஆடியின்குடும்பத்தாரையும்சந்திக்கிறாள். அங்குஆட்டமும்பாட்டமும்குடியும்கூத்துமாகபிறந்தநாள் பார்ட்டிதொடர்கிறது. சிகரெட்புகைமண்டலத்துக்குநடுவேயாரும்ஒடிலியாவைஒருபொருட்டாகக்கூடமதிக்கவில்லை. அளவுக்குஅதிகமானகூட்டத்தில்சிக்கிப்பிதுங்குகிறாள் அவள். ஆடிஅந்தசந்தர்ப்பத்தைப்பயன்படுத்திக்கொண்டுஅவளைஅடையநினைக்கிறான். அப்போதுதோழிகாப்ரியேலாவின்கருச்சிதைவுபற்றிஅவனுடன்பேசுகிறாள். ஆடிகருச்சிதைவுக்குஎதிரானகருத்துகளைக்கொண்டிருப்பதுஅப்போதுதான் அவளுக்குப்புரிகிறது.

அங்கிருந்துஒருவழியாகஅவனிடமிருந்து மீண்டு, தன்தோழிகாப்ரியேலாதங்கியிருக்கும்ஓட்டல்அறையைவந்தடைகிறாள்ஒடிலியா. ஆனால், அங்குகாப்ரியேலாபடுக்கையில்படுத்தநிலையில்தோழியைஎதிர்கொள்கிறாள். அவளதுகருசிதைக்கப்பட்டு, குளியலறைக்குள்கிடக்கிறது. அதனையாரும்அறியாமல்அப்புறப்படுத்தவேண்டியபொறுப்பும்ஒடிலியாவையேசேருகிறது. சிதைக்கப்பட்ட கருவைஒருதுண்டினுள்பொதிந்து சுற்றி, ஒருபைக்குள்பாதுகாப்பாக வைத்துஎடுத்துச்செல்லமுனையும்போது, அதைப்புதைத்துவிடும்படிஅவளிடம் கேட்டுக்கொள்கிறாள்காப்ரியேலா. ஆனால், மிஸ்டர். பேப்துளியளவுகூட கருணையின்றிஅதனைக்குப்பைத்தொட்டியில்வீசியெறிந்துவிடும்படிதெரிவிக்கிறான். இதயத்தைநொறுங்கச்செய்யும்காட்சிகள்கொண்டபடத்தின்முடிவுநம்மைஅதிரவைக்கிறது.

காப்ரியேலா உடல் ரீதியாகச் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்றால், அவளின் உயிர்த் தோழி ஒடிலியா, மனரீதியாகத் துணிச்சலுடன் அனைத்துச்சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியவளாகிறாள். இறுதியில்இரு பெண்களும்தாங்கள் எதிர்பாராமல், மீண்டும்ஒருசட்டத்துக்குஎதிரானகருச்சிதைவினைஎதிர்கொள்ளும்நிலையைநோக்கித்தள்ளப்படுகிறார்கள். கருச்சிதைவுக்காகவரும்பெண்ணொருத்தி, மற்றொரு வாடிக்கையாளரையும் அறிமுகப்படுத்தவேண்டியநிலைக்குஆளாகிறாள். அல்லதுஅவளேஅதற்குபலியாகிறாள். மனசாட்சியோ, இதயமோஇல்லாதவகையில்மேலும்மேலும்கருச்சிதைவுகளுக்கானவிதைஊன்றப்பட்டுக்கொண்டேஇருக்கிறது.

கருச்சிதைவு உலகநாடுகள் பலவற்றிலும் சட்டப்பூர்வமானதாக உருவாக்கப்பட்டுள்ள போதிலும் இங்கு ஒழுக்க நியதிகள் என்பதை எல்லாம் கடந்து, சட்டமீறலாக க்கருச்சிதைவுகளை மாஃபியாக்களைப் போல் செயல்படுத்திக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு மேலும் மேலும் வாடிக்கையாளர்களை உற்பத்திசெய்யும் ஒருசெயல் முறையாகவும் இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பெண் உடலின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்புணர்வுகள், அது கணவன் மனைவியாக இருந்தாலும் வன்முறைதான் என்பதை ஏற்காதவர்கள் எண்ணிக்கை இருக்கும்வரை, இத்தகைய பாலியல் வல்லுறவுகள் குறையப்போவதில்லை. கருச்சிதைவுகுற்றம்என்றால், குழந்தைகளை அளவின்றி எந்திரம் போல் பெண்கள் பெற்றுத்தள்ளிக் கொண்டே இருக்க வேண்டுமா என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

ஐரோப்பிய நாடுகளின்கருச்சிதைவுக்கொள்கைகளும்அதிரவைப்பவையாகஇருக்கின்றன.ருமேனியா போன்ற நாடுகளில் சட்டவிரோதமாகச் செய்யப்படும் கருக்கலைப்புகளும் பெண்ணுடலைச்சிதைத்துக் கொண்டிருப்பதையே இப்படம் காட்சிப்படுத்துகிறது. உலக அளவில் பெரும் விவாதத்தை எழுப்பிய இத்திரைப்படம், 2007 கேன்ஸ்திரைப்படவிழாவில் கலந்து கொண்டு Palme d’Or and the FIPRESCI விருதுபெற்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *