’கடத்தப்பட்டவர்களின் நிலைமை என்ன?

யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு லட்சத்து 92ஆயிரத்து 691 குடும்பங்களில் 34 ஆயிரத்து 619 குடும்பங்கள் கணவனையிழந்த குடும்பம் என மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

widows_displaced

யாழ்ப்பாணம் அரச அதிபரின் கீழ் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தம் 192, 691 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்களில் 34 619 குடும்பங்கள் கணவனையிழந்த குடும்பங்களாகவுள்ளனர்.

இவ்வாறு உள்ள கணவனையிழந்த குடும்பங்களாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 163 குடும்பங்களும் , வேலணையில் 1114 குடும்பங்களும் , ஊர்காவற்றுறையில் 357 குடும்பங்களும் , காரைநகரில் 717 குடும்பங்களும் , யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆயிரத்து 380 குடும்பங்களும் உள்ளனர்.

அதேபோல் நல்லூரில் 2 ஆயிரத்து 520 குடும்பங்களும் , சண்டிலிப்பாயில் 1297 குடும்பங்களும் , சங்காணையில் 1607 குடும்பங்களும் , உடுவிலில் 2 ஆயிரத்து 583 குடும்பங்களும் வாழும் அதேநேரம் தெல்லிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 2 ஆயிரத்து 198 குடும்பங்களும் வாழ்கின்றனர்.

இவ்வாறே கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 3 ஆயிரத்து 963 குடும்பங்களும் , சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 3 ஆயிரத்து 611 குடும்பங்களும் , கரவெட்டியில் 3 ஆயிரத்து 331 குடும்பங்களும் , பருத்தித்துறையில் 2 ஆயிரத்து 192 குடும்பங்களும. மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவினில் 690 குடும்பங்களுமாகவே யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தினில் மொத்தம் 28 ஆயிரத்து 722 கணவனையிழந்த குடும்பங்கள் வாழ்கின்றனர்.

இதேபோன்று இப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் யுத்த கணவனையிழந்த குடும்பங்களாக ,

நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் 25 குடும்பங்களும் , வேலணையில் 130 குடும்பங்களும் , ஊர்காவற்றுறையில் 16 குடும்பங்களும் , காரைநகரில் 82 குடும்பங்களும் , யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 549 குடும்பங்களும் உள்ளனர்.

அதேபோல் நல்லூரில் 1704 குடும்பங்களும் , சண்டிலிப்பாயில் 206 குடும்பங்களும் , சங்காணையில் 937 குடும்பங்களும் , உடுவிலில் 755 குடும்பங்களும் வாழும் அதேநேரம் தெல்லிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் 152 குடும்பங்களும் வாழ்கின்றனர்.

இதேபோல் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 255 குடும்பங்களும் , சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 340 குடும்பங்களும் , கரவெட்டியில் 268 குடும்பங்களும் , பருத்தித்துறையில் 334 குடும்பங்களும. மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவினில் 142 யுத்த விதவைக் குடும்பங்களுமாக யாழ் குடாநாட்டில் 5 ஆயிரத்து 897 குடும்பங்களுமாக மொத்தமாக 34 ஆயிரத்து 619 விதவைக் குடும்பங்கள் வாழ்வதாக மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அதாவது குடாநாட்டில் வாழும் மொத்த குடும்பங்களான 192 , 691 குடும்பங்களில் சுமார் 18 வீதமான குடும்பங்கள்  கணவனையிழந்த குடும்பங்களாகவே உள்ளனர்.

http://www.oodaru.com/?p=2135

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *