களமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சாமிலா சந்திரதாசன்

நோ்காணல்:  அ.றொக்ஸன் -(நானிலம் இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வி)

நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமுதாயத்தில் பெண்களில் பலர் தன்நிலை திரிவடைந்து போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யுத்த அனர்த்த பாதிப்புக்கள், குடும்ப வாழ்வியல் மாற்றங்கள், ஏமாற்றங்கள், பல சாதனைகளை எதிர் நோக்கி துறை சார்ந்த படிப்பினை மேற்கொண்டு பின்னர் திருமணம் அவர்களின் அத்தியாயத்தை மாற்றியமைக்கிறது. இப்படியாக பாதிப்புக்குள்ளாகிய பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டமைந்ததே எனது படைப்புக்களாகும் எனத் தெரிவித்தார், யாழ் பல்கலைக்கழகத்தின் வருகை நேர விரிவுரையாளரும் இளம் படைப்பாளியுமான சாமிலா சந்திரதாசன் தெரிவித்தார்.

Artist-sarmala-santhirathasan-interview-banner?.ஓவியத்துறையினைத் தெரிவு செய்வதற்கான காரணமென்னா? உங்கள்; கலைப்பயணம் தொடருமா

ஓவியமும் கைப்பழக்கமும் என்ற முதுமொழிக்கிணங்க, எனது ஓவியத்துறையின் ஈடுபாடனது சிறுபிராயத்தில் இருந்தாலும் அதனை மேற்கொண்டு வளர்த்துச் செல்ல எனது அண்ணாவின் ஓவிய ஈடுபாடும் எனது அக்காவின் கல்வி வழிகாட்டலில் போட்டித்தன்மையும் ஆதாரமாக இருந்தது. ஓவியப் போட்டி பலவற்றில் எனது பங்களிப்பு இருந்த போதிலும் ஆரம்பத்தில் தோல்விகளைச் சந்தித்தேன். ஆயினும் எனது பெற்றோரின் உந்து சக்தியாலும் A/L படிக்கும் போது பல ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் ஓவியத்துறையினைப் பயின்று கொண்டேன். பல்கலைக்கழக வாழ்வில் கூட என் போட்டித்தனம் என்பதை விட்டுவிடவில்லை. ஓவியப் போட்டிகளை இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் கூட Camlin Art competationல் Award கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. 2013இல் எனது பட்டப்படிப்பினை முடித்ததும் அங்கு ஒரு வருடம் temporary  Instructor நியமனம் கிடைத்தது. தற்போது Visiting Lecturer ஆக உள்ளேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும் நான் ஒரு ஓவிய ஆசிரியர் என்பதை விட ஒரு பெண் ஓவியராக வர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

எனது ஓவியத்தொனி ‘தங்களுக்குள் புதைந்து கிடக்கும் துன்பியல் விடயங்களை வெளிக்காட்ட முடியாமல் நலிந்து கிடக்கும் உள்ளங்களின் குமுறல்களை வெளிப்படுத்த இந்த ஓவியம் ஒரு மொழி ஊடகமாகவே எனக்குக் கிடைத்துள்ளது’

எனது கலை அனுபவம் மட்டுமின்றி என்னைச் சூழவுள்ள அனைவரது அன்பியல் அனுபவங்களும் எனது ஓவிய வெளிப்பாடாக காணப்படுகிறது ஒவ்வொருவரினதும் சொல்லொன்னாத் துன்பியல் சம்பவங்கள் மற்றும் அவர்கள் குமுறி அழும் ஓலக்குரல் என்னை ஏதோ ஒரு வகையில் ஓவியம் படைக்க தூண்டி விடுகின்றது. (இயற்கை அழிவு, யுத்தம், பெண்ணியல் சார்ந்த விடயங்கள்)

எனது இவ்ஓவிய வெளிப்பாட்டினை கொணர இழைமத்தினை (Texture) பயன்படுத்தியுள்ளேன். இதனால் எனது கலைப்படைப்பின் ஊடகம் கலப்பு ஊடகம் Mixed Medium ஆகும்.

எனது ஓவியக்கலை உலகில் ஓவியர் பிக்காசோவியரினதும், ஓவியர் சர்வடோர்டாலியினதும் ஓவியங்களும்; எனது ஓவியதொனி மற்றும் பாணி அடிநாதமாகக் காணப்படுகிறது. யாழ்.மண் ஓவியர்;களான ஓவியர் ஆசை ராசையா மற்றும் ஓவியர் ரமணி ஆகியோரும் காணப்படுகின்றனர்.

எனது அடுத்த கட்ட முயற்சியாக Copper Art மூலம் இந்தொனியினை வெளிப்படுத்தலாம்.

பெண் என்பவள்; ஆண்களுக்கு ஓரு கைப்பொம்மையென்று எண்ணுகிறார்கள். அவர்களது எண்ணங்களை உடைத்தெறிந்து எமக்கும் சமஉரிமை உண்டு என்பதை தலைநிமிர்த்தும் வகையில் எனது மனம் உடையும் நேரங்களில் ஓவியங்களாக வெளிப்படுகிறது. ஆயினும் எம்மவர் நிலைமைகளை உறுதியாக நிலைநாட்ட வேண்டும் என்பதோடு அவர்களது உரிமையையும் நிலைநாட்ட Copper Artஐத் தளமாக பயன்படுத்த தெரிவு செய்த ஊடகமாகும்.

? வளர்ந்து வரும் ஓவியக் கலைஞரான நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ன

பொதுவாக கலைத் துறைகளிலே இருக்கின்ற எல்லோருக்கும் போட்டிகளும் பொறாமையும் உள்ளது. போட்டியாளர்களை எம்மால் சமாளித்துவிட முடியும். ஆனால் பொறாமைப்படுபவர்களை சமாளிக்க முடியாது. அவர்களைச் சமாளிக்க முனையும்போதுதான் எமக்கு அதிக சவால் ஏற்படுகிறது.

நேரடியாக எமது கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை நாம் சமாளிக்கலாம். அல்லது அவர்களைச் சமாளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால் எம் கண்களுக்குப்; புலப்படாத எதிரிகளை நாம் சமாளிக்க முடியாது.

கலைஞர்கள் வாழ வேண்டும். கலைகள் வாழ வேண்டும் என நாம் நினைக்கின்றோம். அத்துடன் இளங் கலைஞர்கள் வெளிக் கொணரப்பட வேண்டும், அவர்களை முன்னேற்ற வேண்டும் என கலை சார்ந்த வல்லுநர்கள், ஆர்வலர்கள் எல்லோரும் வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

ஆனால் அப்படியான ஒரு முயற்சியை மேற்கொள்ள முயலும்போது பல இடையூறுகள் மறைமுகமாக ஏற்படுகின்றது. ஆரம்பம் எப்பொழுதும் நல்லாகத்தான் அமையும். ஆனால் நடுவிலோ அல்லது முடிவோ சரியாக அமைவதில்லை.

ஒரு படைப்பாளி தன் விடமுயற்சியினால் கஷ;டப்பட்டு பல சோதனைகளைத் தாண்டி முன்னுக்கு வரப் போராடும்போது அவர்களைத் தட்டிக் கொடுக்காவிட்டாலும் அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருந்தால் அதுவே அவர்களின் படைப்புக்கள் வெளிவரக் காரணமாக அமையும்.

?.எமது நாட்டிலே ஓவியக்கலையில் பிரகாசிக்க முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்களா

sarmala-santhirathasan-art-1 aஎமது நாட்டுப் படைப்பாளிகளைச் சரியான முறையில் நெறிப்படுத்தல், செயற்படுத்தலின் மூலம் அவர்களை வெளிக் கொணர முடியும். அவர்களின் படைப்புக்கள், துறைகளிற்குச் சர்வதேச தரத்தில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதனை அவர்களுக்குப் புரிய வைத்தல் வேண்டும்.

எல்லாப் படைப்பாளிகளையும் ஒன்றிணைக்க வேண்டும். எம் வளர்ச்சிகள் தொடர்பாக ஆராய்ந்து செயற்படுதல் வேண்டும்.

நவீன கால ஓவியக் கலைக்கு முன்னாடி நமது நாட்டில் ’43 குழு’ என அழைக்கப்பட்ட ஓவிய அமைப்பு இருந்தது. அவ் அமைப்பு அப்பொழுது ஓவியக் கலையினை எமது நாட்டிலே வளர்த்தது. அதனைத் தொடர்ந்து அவ் அமைப்பு திரிபடைந்து நவீன கால ஓவிய அமைப்பு ஒன்று தற்போது உருவாகியுள்ளது. அவ் அமைப்பு இளங் கலைஞர்களை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது. (Camp Group)

கடந்த 30 ஆண்டு கால போர் அனர்த்தங்களே எம்மைப் படைப்புலகில் நிலை கொள்ளச் செய்யவில்லை இப்போதுதான் எமக்கான ஆரம்பக் களம் கிடைத்துள்ளது என நான் கூறுவேன். இனிவரும் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நாமும் சர்வதேச தரத்தில் பேசப்படுபவர்களாக மாறிவிடலாம்.
எமது இனத்தவர் புலம்பெயர் நாடுகளில் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள். அதற்கு எமது போராட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. அந்த வகையில் அவர்களின் ஒத்துழைப்புடன் எமது படைப்புக்களை இலகுவில் உலகறியச் செய்ய முடியும்.

? உங்களது ஓவியத்தில் அதிகமாக பெண்ணியம் பேசப்படுகிறதே, இது பற்றி தனிப்பட்டரீதியில் ஏதாவது காரணங்கள் உண்டா

என்னுடைய வாழ்க்கை மட்டுமல்ல எமது சமுதாயத்தில் வாழுகின்ற அனைவருக்கும் போராட்டங்கள், பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு பெண் படைப்பாளி ஆகிய நான் இலகுவில் பெண்களின் துன்பியல் நிலைமைகளை அறிந்துகொள்ள முடியும். பெண் படைப்பாளியினால் பெண்ணியம் சார்ந்த படைப்புக்கள் வெளிக் கொணரப்படும்போது அவை இயல்பாகவும் சிறப்பாகவும் அமைந்துவிடும். அந்த அடிப்படையிலேயே பெண்ணியம் சார்ந்த விடயங்களையே கருப் பொருளாகக் கொண்டு எனது படைப்புக்கள் உருவாகியுள்ளன.

கடந்த கால யுத்தம் எமது குடும்பங்களையும் பல இடங்களுக்கு இடம்பெயர வைத்துள்ளது. பல பாடசாலைகளிலும் நான் எனது கல்வியைக் கற்க வேண்டிய நிலையில் இருந்தேன். எமது இருப்பிற்காக எனது குடும்பம் ஒவ்வொரு இடம் மாறும்போதும் ஒவ்வொரு புதிய அனுபவம் எனக்குக் கிடைத்தது. அவ் அனுபவத்தின்; பிரதிபலிப்புக்களும் எனது ஓவியத்தில் உண்டு.

யுத்தம், பாடசாலை – பல்கலைக்கழக கல்வி, போராட்டம், நெகிழ்ச்சி, மன உளைச்சல் இவற்றையெல்லாம் சமாளித்து ஓவியராக வேண்டுமென்ற இலட்சியப் பட்டியலில் தடம் பதித்துள்ளேன் என எண்ணுகிறேன். ஒவ்வொரு படைப்பாளியும் உருவாகுவதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளன. எனது படைப்புக்கள் உருவாவதற்கு பெண்களின் பாதிப்புக்களே காரணமாகும்.

? ஓவியத்துறையில் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியயேறும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் இத்துறையில் ஆர்வம் காட்டுவதில்லையே ஏன்

எமது துறையான ஓவியத்துறை வடபிராந்தியத்தில் சீரமைக்கப்படாமலிருப்பதால் பொருளாதார ரீதியில் பணம் சம்;பாதிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஓவியத்துறையில் நாம் சிறந்த படைப்பொன்றை உருவாக்க பணம், சக்தியும், நேரமும் அதிகமாகத் தேவைப்படுகிறது.

பொதுவாக யாழ்ப்பாண மக்களின் பார்வையில் ஓவியத்துக்கென மதிப்புக் குறைவாகவே உள்ளது. ஏனெனில் வருமானம் குறைவாக உள்ளது என்ற காரணத்தினால் மக்கள் அவ்வாறு எண்ணுகிறார்கள். பொருளாதாரத்தில் எந்தத் துறைக்கு மதிப்பு இருக்கிறதோ அந்தத் துறையையே மக்கள் நேசிப்பார்கள். இது மக்களின் தவறல்ல. எமது தொழில்சார் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள விரிசலே காரணமாக உள்ளது.

அந்தவகையில் உயர்தரத்தில் கணிப்பிடும் கல்வி கற்பவர்கள் கலை சார்ந்த பாடத்தினைக் கற்றல் இலகுவில் பல்கலைக்கழகம் சென்றுவிடலாம் என்று நினைத்தும் பெரும்பாலானோர் இப்பாடங்களையே கற்கிறார்கள். அவ்வாறு கற்கின்றவர்களும் இலகுவில் பல்கலைக்கழகத்தினை எட்டியும் விடுகிறார்கள். அவர்களின் நோக்கமும் தான் ஒரு பட்டதாரியாக மின்னுவது மட்டுமே. தான் பெற்றுக் கொண்ட பட்டத்தினைக் கொண்டு வேறு துறையில் வேலை செய்து பணத்தினை சம்பாதிப்பதேயாகும்.

அவர்களின் அச்செயற்பாட்டுக்கு அவர்களின் சுயநலம் காரணம் அல்ல. ஓவியத்துறையில் வருமானம் ஈட்ட முடியாமையே அவர்களின் அச் செயற்பாட்டிற்கு காரணமாக அமைகிறது. என்னைப் போன்று சிலபேர் எமது துறைக்காக போராடினாலும் பொருளாதாரம் அவர்களையும் முடக்கிவிடும். என்னைப் பொறுத்தவரை எனது பெற்றோர் எனக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குகிறார்கள். அத்துடன் எனது குருவான ஆசை இராசையா, ரமணி உட்பட பலர் ஒத்துழைப்பை புரிகின்றனர். அவர்களின் ஆசீர்வாதத்துடன் எனது வெற்றிப் பயணம் தொடரும் என்றார்.

அத்தோடு இத்தருணத்தில் எனக்கு இவ்ஓவியக் கண்காட்சியினை நடாத்துவதற்கு ஓவியக்கூடத்தினை தந்துதவிய மன்ற இயக்குநர் அருட்திரு.மரிய சேவியர் அடிகள்; திருமறைக் கலாமன்றம், அதன் பகுதி நிறுவனமான கலைத்தூது கலாமுற்ற நிர்வாகிகள் அங்கத்தவர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *