இறைவி

தனாசக்தி (Dhana Sakthi )

Iraivi1

இறைவனுக்கு எதிர்ப்பதமாக மட்டும் இறைவி இல்லை இந்த இறைவி காலம்காலமாக வரம் மட்டுமே தந்துவிட்டு சிதிலமடைஞ்ச சிற்பமா கிடக்கிறாள் என்பதே இத்திரைப்படத்தின் மையக்கருத்து.பெண்களை கேலி கிண்டல் செய்து அரைநிர்வாண ஆடைகளுடன் உலவ விட்டு அதை கலை என்று சொல்லி வரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இறைவி நிச்சயமாக ஆறுதலான படைப்புதான்.

மழை தான் இந்த படத்தின் கதை சொல்லி என்றுகூட சொல்லலாம். மூன்று ஆண்கள் மூன்று பெண்கள் இவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள். பள்ளிப்படிப்பை தாண்டாத கல்யாணத்துக்காக வளர்க்கப்பட்டு , காதல் புள்ளகுட்டி னு ஒரு கனவோடு வளரும் பொன்னி ஐடியில் வேலை பார்க்கும் நகரத்து பெண் யாழினி தன் கணவனின் அதிகாரத்திலேயே குடும்பம் நடத்தி ஜெகன் ,அருள் என்கிற இரண்டு வித குணாதிசயம் உடைய பிள்ளைகளை பெற்றுவளர்த்தி கோமாவில் கிடக்கும் அம்மா . இந்த மூன்று பெண்கள் காலம் காலமாக தமிழ் சினிமாவின் அக்மார்க் அடையாளங்கள் அவர்களைதான் இறைவி என்றும் குறிப்பிடுகிறார் இயக்குனர் .

ஆனாலும் மலர்விழி என்றொரு பெண்ணையும் அவளையும் அவள் உணர்வுகளையும் அழகிய பின்நவீனத்துவ கவிதையாக அவளை அவளாகவே வாழவிட்டதற்காக டைரக்டருக்கு பாராட்டுகள் தன் கணவனிடமே துணிச்சலாக எனக்கு இன்னொரு ஆணிடம் காதல் வந்தது , என்று பேசும் கிராமத்து பெண்ணிடம் இருக்கும் துணிவும் தன்னம்பிக்கையுள் கூட ஒரு ஐடி தொழில் இருக்கும் பெண்ணிடம் இல்லை என்பதையும் மிக அழகாக காண்பித்துள்ளார். விஜய்சேதுபதியின் என்ட்ரியே மலர்விழியுடன் காமுற்றுகொண்டிருக்கு­ம் காட்சிதான் .அந்த அறையில் மலர்விழியின் கணவர் புகைப்படத்திற்கு மாலையிட்டு தொங்க விட்டிருப்பதுவும் .அந்த மரமேசையில் உள்ள போட்டோவில்மலர்விழி ஜோடியாக தன் கணவருடன் புன்னகைத்தபடி இருக்கிறார்.

அப்பவே திரையரங்கில் இருந்த சாமாண்ய ஆண்மகனுக்குள் ஒரு அதிர்வலை திரையரங்கம் மெளனித்தது. எல்லோருக்கும் தேவைப்படும் உடல் தேவைக்குதான் உங்க மகனிடம் உறவு வைச்சுக்கிட்டன், மத்தப்டி எங்களுக்குள் காதல் கன்றாவிலாம் இல்லை என்று மலர்விழி பேசும்போது எனக்கு பக்கதில் அமர்ந்திருந்த ஆண்மகனின் முகத்தில் வியர்த்திருந்ததை அந்த மங்கிய வெளிச்சத்திலும் காண முடிந்தது. அதைவிட விஜய்சேதுபதியின் அப்பா மலர்விழியிடம் உன் உடல் தேவைக்கு அப்பாவி கன்னிப்பையன்தான் கிடைச்சானானு கொதித்தெழும்போது அந்த மலர்விழி பயங்கரமாக சிரித்தப்டியே யாரு இவன் கன்னி பையனா போங்க அங்கிள் காமெடி பன்றிங்க என்று சொல்லிவிட்டு வெளியே போய் என்னை அயிட்டம் னு சொல்விங்க அவ்ளோதானே என்று கம்பீரமாக சொல்வதும் போதும் இறைவி படத்தை பார்க்க போதுமான காரணம்.

கணவனின் முதலாளி மகனும் நண்பனுமனவன் தன்னை காதலிப்பதாக சொன்னதும் பொன்னி இப்படியாக சொல்கிறாள் ” எனக்கு ஒரு கல்யாணம் நடந்துச்சு ஒரு குழந்தையும் இருக்குது ஆனா இதுவரைக்கும் யாரும் என்னை காதலிக்கல என்னை காதலிச்ச முதல் ஆள் நீங்கதான் என்று ,.. இப்பவும் என் பக்கத்தில் இருந்த ஆண் பதட்டத்துடன் சிக்ரெட்டை வெளியே எடுத்தபடியே வெளியேறிவிட்டார் .

இங்கு இறைவியாக இருக்கும் பெண்களைதான் விரும்புவார்கள் என்பது போல் மலர் தனக்கு வேறு ஒரு வாடிக்கையாளர் வந்துவிட்டார் நீ கிளம்பு என்று சொன்னதும்தான் விஜய்சேதுபதிக்கு தன் மனைவி பொன்னி மீது காதலும் கருணையும் வருகிறது என்பது ஒட்டு மொத்த ஆண்களின் பொதுபுத்தி ஊறிப்போய்கிடப்பதாக உணர் வைக்கிறார் டைரக்டர். மொத்தத்தில் இறைவியாக இருப்பவர்கள்ன் கவனியுங்க என்ற இயக்குனரின் ஆதங்கமும் குறைந்தப்டச அறத்துடனும் பெண்களின் பார்வையில் இருந்தும் இந்த படத்தை இயக்கியுள்ளார் குறைகள் உண்டுதான் ஆனால் சமீபிமாக வரும் பெண்களை அசிங்கப்படுத்தும் படங்களுக்கு மத்தியில் மனதை மயிலிறகால் தடவி கொடுப்பது போல் ஒரு திரைப்படம் இறைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *