பெண் அந்தமுமில்லை ஆதியுமில்லை, அந்தாதி.
பெண் உரைகள் முனங்கல்களாக உற்பத்தியாகி முழக்கங்களாக உருமாறியுள்ளன. தாலாட்டுகளில் கோடிக் கனாக்களாகவும் ஒப்பாரிகளில் கொடுங் கனாக்களாகவும் சொலவடைகளில் சூரிக்கத்திகளாகவும் புதுக்கவிதைகளில் சுழற்றும் வாள்களாகவும் புதிய கதைகளில் சூறாவளிகளாகவும் பெண்ணிய உரையாடல்கள் புதுப்புது வடிவங்களில் பூமி பரப்பெங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நூல் உலகப் பெண்களின் பெண்கள்உலகைப் பிரதிபலிக்கும் காலத்துக்கேற்ற கண்ணாடி. மொழி, இனம், நிலம் கடந்து பெண்களின் உடல், மொழி, எழுத்து, அரசியல், ஆகிய அனைத்தையும் அலசிப் பார்த்திட ஊடறுத்துச் செல்லும் சொல்லும் பாசறை. கீதா முதல் ஹெர்டா வரை 33 பேரின் செவ்விகளைத் தொகுத்தளிக்கும் ஊடறு றஞ்சியும் புதிய மாதவியும் பெண்குலத்தின்
பொன் விளக்குகளாகும்.
https://www.facebook.com/share/p/16t6P3esBM
Heritager.in The Cultural Stores Beitrag
Price:400
Order on WhatsApp:919786068908

