Fit Is Not A Body Type | Vitamin Stree
.அதனால் ஒருவரை பார்க்கும் பார்வையில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்துகிறோம்.
பெண்கள் உடலின் அடிப்படையில் அசிங்கப்படுத்துவதை புறக்கணிக்கும் விதமாக அமைந்தது. உடல் அமைப்பின் அடிப்படையில் ஒருவரை கேலி செய்வது ஆண், பெண் இருவருக்கும் சமமாக நடந்தாலும், பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ‘தி ட்ரம்’ என்ற இப்பாடலை தயாரித்ததற்கான காரணத்தை பகிர்ந்து கொண்ட சேனலை சேர்ந்த தாரா கபூர்,இக்காலத்தில், யார் வேண்டும் என்றாலும் யாரையும் கிண்டல் செய்து ட்ரோல் செய்யமுடிகிறது. அவர்களுக்கு தோன்றிய வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். அதில் சில மெசேஜ்கள் பெண்களை இழிவுப்படுத்துவதாகவும், ஏளனம் செய்வதாகவும் இருக்கிறது. குறிப்பாக உடலை வர்ணித்து, குண்டாக, ஒல்லியாக இருப்போரை அசிங்கப்படுத்தி பதிவுகளை பார்த்துள்ளேன். இது தினமும் சந்திக்கவேண்டிய பிரச்சனையாக உள்ளதால் இப்பாடலை தயாரித்தோம்.”46 பெண் விளையாட்டு வீராங்கனைகளைக் கொண்டு பெண்கள் அவரவர்களின் உடல் அமைப்பிலேயே எப்படி ஆரோக்கியமாக இருக்கமுடியும் என்று சொல்கின்றனர்.

