புத்தகவரிசையில் – அபுனைவுகள் – புதியமாதவி
* சங்கமி இப்புத்தகம் எல்லோருக்குமானதல்ல. ஆம். ஆனால் கல்லூரி மாணவர்கள், பெண்ணியம் சார்ந்த ஆய்வாளர்கள் அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். சங்கமி புத்தகம் இந்தியா மற்றும் உலக நாடுகளின் பெண் எழுத்தாளர்கள் / களப்பணியாளர்களின் நேர்காணல்களைத் தொகுத்து ஊடறு வெளியிட்டிருக்கும் புத்தகம். காவ்யா பதிப்பகம் வெளியீடு. பிரபலமானவர்கள் மட்டுமல்ல, ஊடகங்கள் வெளிச்சப்படுத்தாத களப்பணியாளர்களையும்கலைஞர்களையும் இணைத்திருக்கிறோம்.ஒரு தொகுப்பாசிரியராக எனக்கு மிகுந்த மன நிறைவைக் கொடுத்தப் புத்தகம் “சங்கமி”
ஊடறு றஞ்சிக்கு நன்றி.

